Tuesday 2 September 2014

13. Showed these to Isa, he remained firmly as Siva

Verse 13
பேரான வீசனுக்கு இதுதான் சொல்லி
பேசாத எழுத்தினுட வரையும் காட்டி
சீரான ஆறுவரை வீடுங் காட்டித்
தேவி பராசத்தியுட மகிமைகாட்டிக்
காரான அஷ்டாங்க முடிவுஞ் சொல்லிக்
கலந்தெழுந்த யாகாதி முடிவுங் காட்டி
நேரான குல தெய்வமிது தானென்று
நின்றதினாற் சிவன்றானும் நிலைத்தார் பாரே

Translation:
Telling this to Isa
Showing the limit of the unspoken letter
Showing the gracious six peaks, houses
Showing the grace of Devi Parasakthi
Telling about the terminus of ashtanga
Showing the end of yaga etc
As this the proper, kula deiva
As remained so, Siva also remained permanently.

Commentary:
Siva is the state of supreme consciousness.  Isa is one of the manifestations of the Divine among the five pure manifestations-Siva, Sakti, Sadashiva, Maheswara and Isa.  These are states of consciousness preceding the supreme state, the state of singularity.  Hence, Subramanya is telling Agatthiyar that he showed these principles of Isa so that he will remain permanently as Siva.  The principles that Subramanya revealed to Isa are the locus of the unspoken letter, which is the space beyond, the locus of the six cakras or energy peaks/consciousness peaks, the glory of the primordial power, Parasakti, the terminus or the end point reached when ashtanga yoga is performed- the supreme Samadhi state of singularity, the terminus of yaga or fire ritual.  This may be internal ritual invoking the fire of kundalini or external ritual performed with fire outside.  This fire is the kula kundalini, the kula deity.  When all these principles were revealed to Isa, the consciousness, the supreme state, that of Siva remained permanently.


சிவம் என்பது பரவுணர்வு நிலை.  ஐந்து தூய வெளிப்பாடுகளில் ஈசனும் ஒன்று.  மற்றவை சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன் என்பவை.  இவையனைத்தும் தூய பரவுணர்வு நிலைக்கு முற்பட்ட நிலைகள்.  அதானால்தான் சுப்பிரமணியர் அகத்தியரிடம் தான் சில தத்துவங்களை ஈசனிடம் கூறினேன் அவர் சிவனாக நிலைத்திருந்தார் என்று கூறுகிறார்.  ஈசனுக்கு சுப்பிரமணியர் கூறியவைஆகியா, பேசா எழுத்தின் இடம்- அது சஹாஸ்ராரமாகவோ அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம், ஆறு சக்கரங்களின் இடங்கள்- அவை சக்தி உச்சமாக இருக்கும் மையங்கள், ஆதி சக்தியான பரா சக்தியின் பெருமை, அஷ்டாங்கமான யோகத்தின் உச்ச நிலை-நிர்விகல்ப சமாதி,  யாகாதிகளின் முடிவு- இவை உள்ளே  குண்டலி நெருப்பினால் நிகழ்த்தப்படும் அந்தர்யாகமாகவோ வெளியே தீயைக் கொண்டு நிகழ்த்தப்படும் பஹிர்யாகமாகவோ இருக்கலாம், குல தெய்வம் அல்லது குண்டலினியின் தன்மை ஆகியவையாகும்.  அந்த தத்துவங்களைக் காட்டியதால் சிவன் நிலையாக இருந்தார் என்கிறார் சுப்பிரமணியர். 

No comments:

Post a Comment