Verse 96
வருகுவா னமுதரச மூட்டியுன்னை
வந்த வினை நீக்கி இனி வாழ்விப்பானே
தருகுவான் நினைத்தபடி உனக்கே மைந்தா
சாம்பவியாள் பாதமதை க்ஷணத்தில் காட்டி
உருகுவாய் அனுதினமும் மெழுகு போல
உரைத்திடுவாய் மவுனத்தை உறுதியாக
மருகுவாய் மாயை வினையதனைத் தள்ளி
மாறாத வாசனையைத் தட்டித் தள்ளே
Translation:
Feeding you
with the juice of nectar
And removing
the karma, he will rescue you,
He will grant
you, son,
The feet of
lady Sambhavi, showing it in an instant
You will melt
like wax, every day,
You will utter
the silence, firmly
You will pine,
pushing away the maya, the karma,
Push away the
unchanging preconditions (vaasana).
Commentary:
This verse is
a continuation of the earlier one where Subramanyar talks about Siva appearing
to the yogin. Here he tells what Siva
will grant the yogin. He will feed the
yogin the nectar from the lalata cakra that will grant him eternal life. Siva will remove the karma that keeps him
away from higher experiences. Siva will
show him the sacred feet of Shambavi.
Shambhavi is a mudra as well as a yogic method. Holding the eyes focused at the brow center
is called the Shambhavi mudra. However,
Yogi Amarakavi Siddheswara calls the thoughtless state as the shambhavi
yoga. This verse may mean the latter as
Subramanyar talks about the silence further down in the verse. Amarakavai explains this state elaborately
and how this conserves the energy of the yogin and helps him attain higher
states of consciousness. In this state
the yogin melts with emotion, remains firmly in the state of silence and
discard the vaasanas or preconditioning that make a person act in a particular
way. Vaasanas decide the karma of a
person. Hence, one has to get rid of the
source, the vaasana, to remove the effects of karma.
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக வரும் இப்பாடலில்
சுப்பிரமணியர் மானும் மழுவும் தாங்கி வரும் சிவன் அந்த யோகிக்கு அருளுபவற்றைக்
கூறுகிறார். இறவா நிலையைத் தரும் அமுதத்தை
ஊட்டும் சிவன் அந்த யோகியின் வினைகளைக் களைகிறார். அந்த வினைகள் உயர் விழிப்புணர்வு நிலைகளை
அடைவதைத் தடை செய்யும். அதன் பிறகு அந்த
யோகி சாம்பவியின் பாதத்தை சிவனின் அருளால் பார்க்கிறார். சாம்பவி என்பது சக்தியைக் குறிக்கும். சாம்பவி முத்திரை என்பது கண்களை புருவ
மத்தியில் இருத்தி மனதை அலைபாயாமல் வைத்திருப்பதைக் குறிக்கிறது. மகாயோகி அமரகவி சித்தேஸ்வரர் சாம்பவி யோகம்
என்பது எண்ணமற்ற நிலை என்கிறார். இதனால்
எண்ணங்களில் வீணாக்கப்படும் சக்தி மீட்கப்பட்டு குண்டலினி யோகத்தில்
பயன்படுத்தப்படுகிறது. அதனால் உயர்
நிலைகளை அடைய கூடுதல் சக்தி கிடைக்கிறது என்கிறார் அவர். இந்த நிலையில் யோகி மனம் உருகிய நிலையில்
இருக்கிறார். திருமூலர் மற்றும்
சிவவாக்கியர் இந்த நிலையை என்பு உருகி உடல் கரைந்து இருக்கும் நிலை என்கின்றனர்.
இந்த நிலையில் உறுதியாக இருந்து மவுனத்தைக் கடைப்பிடித்து
வாசனைகளைத் தள்ள வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர். வாசனைகள் ஒருவர் ஒரு சூழ்நிலையில் எவ்வாறு
செயல்படுவார் என்பதைத் தீர்மானிக்கின்றன. வினைகளை விலக்கவேண்டும் என்றால் ஒருவர் முதலில்
வாசனைகளைக் களைய வேண்டும். அதைத்தான்
சுப்பிரமணியர் இங்கே வலியுறுத்துகிறார்.
No comments:
Post a Comment