Verse 95
காணென்று சொல்லி விட்ட மார்க்கம் போச்சு
கடிகையடா வரை நொடிக்குள் நிலையில் சென்று
தானென்ற கயிலை மலைச் சார்பில் ஏறிச்
சந்திரன்தன் பானமதைத் தானே உண்டே
கோனென்ற திரிகோண முப்பாழ் தாண்டி
கொடியதொரு சீவ நிலை தன்னைப் பார்த்தால்
மானென்ற மான் மழுவும் தரித்த ஈசன்
மருவியே உனதிடத்தில் வருகுவானே
Translation:
The path that
was left, will go away
Going within a
second to the peak, the position
Climbing the
Kailai mountain, the self
Consuming the
drink of the moon
Going beyond
the royal triangle of triple void
If the
torturous state of Jiva is seen
The Isa who
adores the deer and the battle axe,
Will come to
you after transformation.
Commentary:
Subramanyar is
referring to the state of crossing the state of jiva or Jeeva nilai. The path that was followed is that of
kundalini that moves through the elements that cause distinctions. When the soul remains in the state of atma or
self, the influence of the tattva or distinguishing principles- the elements,
qualities, indriyas etc cease to exist.
The Self remains in the state of Mahat or the first state of evolution,
that of consciousness. The triple void
or muppaazh are spaces or experiences created by the tattva. The triangle
represents the three qualities of satva, rajas and tamas the cause primary components
of creation.
In this state
the Jiva will be almost Siva. Hence, Subramanyar is saying that the Lord, Isa
who adorns the mahat principle and the axe will appear to the soul.
Hindu imagery
of Gods is based on the principles they wish to convey. Depicting Siva with maan and mazhu may be to
represent that he is the creator and the destroyer of distinguishes. The mahat which is called maan in Tamil has
transformed into “maan” the deer. The axe stands for the concept that the Lord
destroys the influence of mahat, that is, creation of the manifested universe
or the distinctions and takes the soul to the state of singularity.
Kailaya
represents sahasrara and the drink refers to the nectar that descends from the
lalaata cakra, states attained after crossing the world of distinctions.
ஆத்மா சீவ நிலையை அடைவதை இப்பாடலில் சுப்பிரமணியர்
குறிப்பிடுகிறார். இந்த நிலையில்
தனித்துவத்தைத் தோற்றுவிக்கும் தத்துவங்களின் பாதிப்பு இருக்காது. ஆத்மா இந்த நிலைகளைக் கடந்து “தான்” என்ற
அனுபவத்தில் திளைத்திருக்கும். அது
மாயப்பாழ் போதப்பாழ் உபசாந்தப் பாழ் என்ற முப்பாழ்களையும் கடந்த நிலை. இந்த நிலையில்
இந்த நிலையில் ஆத்மா மகத் தத்துவ நிலையில் இருக்கிறது. இது அகங்காரத்துக்கு முற்பட்ட நிலை, தூய உணர்வு
நிலை. இந்த நிலையில் ஆத்மா சிவ நிலைக்கு மிக
அருகில் இருக்கிறது. இதை சுப்பிரமணியர் இந்த
நிலையில் இருக்கும் சீவனிடம் மானும் மழுவும் அணிந்த ஈசன் வருவான் என்று
கூறுகிறார்.
இந்து மதத்தில் தெய்வங்கள் என்பவை ஒரு தத்துவத்தின்
குறியீடாகவே அமைக்கப்பட்டுள்ளன. தமிழில்
மான் என்பது மகத்தைக் குறிக்கும். மகத்
தத்துவம் தனித்துவத்தைத் தோற்றுவிப்பது உலகமாக மாறுவது. அதை அழிப்பது மழு. சிவ பெருமான் மானும் மழுவும் தரித்திருப்பது
அவரே படைப்புக்கும் லயத்துக்கும் காரணம் என்பதைக் குறிக்கிறது.
ஆத்ம நிலையை சுப்பிரமணியர் கொடுமையானது என்று
கூறுகிறார். இந்த நிலை சிவ நிலையைப் போல
உச்ச நிலையாக இல்லாதிருப்பதால் மாறுபாடுகளைக் கொண்டதாக உள்ளது. அவர் விட்ட
மார்க்கம் என்பது விட்ட பிரகிருதி தத்துவங்களைக் குறிக்கும். அல்லது குண்டலி பயணித்த வழியைக்
குறிக்கும். கயிலை மலை என்பது
சஹாஸ்ராரத்தையும் பானம் என்பது லலாடத்திலிருந்து கீழே இறங்கும் அமிர்தத்தையும்
குறிக்கும்.
நன்றி அம்மா
ReplyDeleteEmperor Casino Review
ReplyDeleteEmperor Casino is a relatively young online casino offering great games, great customer service and a nice variety 바카라 of slots and tables games. It's 제왕 카지노 an online casino Rating: 4.4 · febcasino Review by Shootercasino