Wednesday, 31 December 2014

97. Avoid these people- says Subramanyar

Verse 97
தள்ளுவது யாரைஎன்றால் மைந்தாகேளு
சங்கற்பம் அறியாத சமயத்தோரைக்
கள்ளுடனே அபின் தனக்குக் கலந்த வேரைக்
கஞ்சாவுங் குடுகுடுக்கை கொண்ட பேரை
உள்ளுடைந்து வாய்ப் பேச்சால் உழன்ற பேரை
உத்தமரைத் தூஷித்த உலகத்தோரை
விள்ளுவது மவுனமதை விட்ட பேரை
வீணரென்று சத்தியமாயத் தள்ளிப் போடே

Translation:
Son, Listen to who should be discarded,
The religious who do not know sankalpa (strong will)
Those who mix toddy with opium
Those who have ganga and the pot
Those who are broken inside but roam around with empty talk
The worldly people who disgraced great souls
Those who left the silence
Push them away as useless people, for sure.

Commentary:
Subramanyar tells us about whose company we should avoid, who should be kept away.  Those who consume alcohol and opium, those who smoke pot, those who disgrace good souls by speaking ill of them, those who talk incessantly and not maintain silence- Subramanyar says that one should guard oneself carefully from these people.
The company we keep decides our behaviour.  Over time even a good person will get corrupted if he keeps bad company.  Hence, Subramanyar tells us we should firmly avoid the above company.


எத்தகைய மக்களை விலக்கவேண்டும் என்று சுப்பிரமணியர் இப்பாடலில் நமக்குக் கூறுகிறார்.  கள்ளையும் அபினையும் கலந்து உண்ணுபவரையும் கஞ்சாவைக் குடுவையில் இட்டு புகைப்பவரையும் நன்மக்களை தூஷிப்பவரையும் வெட்டிப் பேச்சில் காலத்தைத் தள்ளுபவரையும், மனதில் மவுனத்தைக் கொள்ளாதவரையும் சத்தியமாக விலக்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.
நாம் எத்தகையோரோடு பழகுகிறோம் என்பது நாம் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கிறது.  ஒரு நல்லவர் தீய தொடர்பை வைத்திருந்தால் நாளடைவில் அவரும் தனது நற்குணங்களை விட்டு தீயவராவார்.  அதனால் மேற்கூறியோரின் தொடர்பை வலுவாக விளக்கவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.

Tuesday, 30 December 2014

96. Siva's gifts to the yogi

Verse 96
வருகுவா னமுதரச மூட்டியுன்னை
வந்த வினை நீக்கி இனி வாழ்விப்பானே
தருகுவான் நினைத்தபடி உனக்கே மைந்தா
சாம்பவியாள் பாதமதை க்ஷணத்தில் காட்டி
உருகுவாய் அனுதினமும் மெழுகு போல
உரைத்திடுவாய் மவுனத்தை உறுதியாக
மருகுவாய் மாயை வினையதனைத் தள்ளி
மாறாத வாசனையைத் தட்டித் தள்ளே

Translation:
Feeding you with the juice of nectar
And removing the karma, he will rescue you,
He will grant you, son,
The feet of lady Sambhavi, showing it in an instant
You will melt like wax, every day,
You will utter the silence, firmly
You will pine, pushing away the maya, the karma,
Push away the unchanging preconditions (vaasana).

Commentary:
This verse is a continuation of the earlier one where Subramanyar talks about Siva appearing to the yogin.  Here he tells what Siva will grant the yogin.  He will feed the yogin the nectar from the lalata cakra that will grant him eternal life.  Siva will remove the karma that keeps him away from higher experiences.  Siva will show him the sacred feet of Shambavi.  Shambhavi is a mudra as well as a yogic method.  Holding the eyes focused at the brow center is called the Shambhavi mudra.  However, Yogi Amarakavi Siddheswara calls the thoughtless state as the shambhavi yoga.  This verse may mean the latter as Subramanyar talks about the silence further down in the verse.  Amarakavai explains this state elaborately and how this conserves the energy of the yogin and helps him attain higher states of consciousness.  In this state the yogin melts with emotion, remains firmly in the state of silence and discard the vaasanas or preconditioning that make a person act in a particular way.  Vaasanas decide the karma of a person.  Hence, one has to get rid of the source, the vaasana, to remove the effects of karma.

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக வரும் இப்பாடலில் சுப்பிரமணியர் மானும் மழுவும் தாங்கி வரும் சிவன் அந்த யோகிக்கு அருளுபவற்றைக் கூறுகிறார்.  இறவா நிலையைத் தரும் அமுதத்தை ஊட்டும் சிவன் அந்த யோகியின் வினைகளைக் களைகிறார்.  அந்த வினைகள் உயர் விழிப்புணர்வு நிலைகளை அடைவதைத் தடை செய்யும்.  அதன் பிறகு அந்த யோகி சாம்பவியின் பாதத்தை சிவனின் அருளால் பார்க்கிறார்.  சாம்பவி என்பது சக்தியைக் குறிக்கும்.  சாம்பவி முத்திரை என்பது கண்களை புருவ மத்தியில் இருத்தி மனதை அலைபாயாமல் வைத்திருப்பதைக் குறிக்கிறது.  மகாயோகி அமரகவி சித்தேஸ்வரர் சாம்பவி யோகம் என்பது எண்ணமற்ற நிலை என்கிறார்.  இதனால் எண்ணங்களில் வீணாக்கப்படும் சக்தி மீட்கப்பட்டு குண்டலினி யோகத்தில் பயன்படுத்தப்படுகிறது.  அதனால் உயர் நிலைகளை அடைய கூடுதல் சக்தி கிடைக்கிறது என்கிறார் அவர்.  இந்த நிலையில் யோகி மனம் உருகிய நிலையில் இருக்கிறார்.  திருமூலர் மற்றும் சிவவாக்கியர் இந்த நிலையை என்பு உருகி உடல் கரைந்து இருக்கும் நிலை என்கின்றனர். 

இந்த நிலையில் உறுதியாக இருந்து மவுனத்தைக் கடைப்பிடித்து வாசனைகளைத் தள்ள வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  வாசனைகள் ஒருவர் ஒரு சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுவார் என்பதைத் தீர்மானிக்கின்றன.  வினைகளை விலக்கவேண்டும் என்றால் ஒருவர் முதலில் வாசனைகளைக் களைய வேண்டும்.  அதைத்தான் சுப்பிரமணியர் இங்கே வலியுறுத்துகிறார்.

Friday, 26 December 2014

95. Soul reaching kailaya

Verse 95
காணென்று சொல்லி விட்ட மார்க்கம் போச்சு
கடிகையடா வரை நொடிக்குள் நிலையில் சென்று
தானென்ற கயிலை மலைச் சார்பில் ஏறிச்
சந்திரன்தன் பானமதைத் தானே உண்டே
கோனென்ற திரிகோண முப்பாழ் தாண்டி
கொடியதொரு சீவ நிலை தன்னைப் பார்த்தால்
மானென்ற மான் மழுவும் தரித்த ஈசன்
மருவியே உனதிடத்தில் வருகுவானே

Translation:
The path that was left, will go away
Going within a second to the peak, the position
Climbing the Kailai mountain, the self
Consuming the drink of the moon
Going beyond the royal triangle of triple void
If the torturous state of Jiva is seen
The Isa who adores the deer and the battle axe,
Will come to you after transformation.

Commentary:
Subramanyar is referring to the state of crossing the state of jiva or Jeeva nilai.  The path that was followed is that of kundalini that moves through the elements that cause distinctions.  When the soul remains in the state of atma or self, the influence of the tattva or distinguishing principles- the elements, qualities, indriyas etc cease to exist.  The Self remains in the state of Mahat or the first state of evolution, that of consciousness.  The triple void or muppaazh are spaces or experiences created by the tattva. The triangle represents the three qualities of satva, rajas and tamas the cause primary components of creation. 
In this state the Jiva will be almost Siva. Hence, Subramanyar is saying that the Lord, Isa who adorns the mahat principle and the axe will appear to the soul. 

Hindu imagery of Gods is based on the principles they wish to convey.  Depicting Siva with maan and mazhu may be to represent that he is the creator and the destroyer of distinguishes.  The mahat which is called maan in Tamil has transformed into “maan” the deer. The axe stands for the concept that the Lord destroys the influence of mahat, that is, creation of the manifested universe or the distinctions and takes the soul to the state of singularity.
                                                                          
Kailaya represents sahasrara and the drink refers to the nectar that descends from the lalaata cakra, states attained after crossing the world of distinctions. 

ஆத்மா சீவ நிலையை அடைவதை இப்பாடலில் சுப்பிரமணியர் குறிப்பிடுகிறார்.  இந்த நிலையில் தனித்துவத்தைத் தோற்றுவிக்கும் தத்துவங்களின் பாதிப்பு இருக்காது.  ஆத்மா இந்த நிலைகளைக் கடந்து “தான்” என்ற அனுபவத்தில் திளைத்திருக்கும்.  அது மாயப்பாழ் போதப்பாழ் உபசாந்தப் பாழ் என்ற முப்பாழ்களையும் கடந்த நிலை.  இந்த நிலையில்
இந்த நிலையில் ஆத்மா மகத் தத்துவ நிலையில் இருக்கிறது.  இது அகங்காரத்துக்கு முற்பட்ட நிலை, தூய உணர்வு நிலை.  இந்த நிலையில் ஆத்மா சிவ நிலைக்கு மிக அருகில் இருக்கிறது.  இதை சுப்பிரமணியர் இந்த நிலையில் இருக்கும் சீவனிடம் மானும் மழுவும் அணிந்த ஈசன் வருவான் என்று கூறுகிறார்.

இந்து மதத்தில் தெய்வங்கள் என்பவை ஒரு தத்துவத்தின் குறியீடாகவே அமைக்கப்பட்டுள்ளன.  தமிழில் மான் என்பது மகத்தைக் குறிக்கும்.  மகத் தத்துவம் தனித்துவத்தைத் தோற்றுவிப்பது உலகமாக மாறுவது.  அதை அழிப்பது மழு.  சிவ பெருமான் மானும் மழுவும் தரித்திருப்பது அவரே படைப்புக்கும் லயத்துக்கும் காரணம் என்பதைக் குறிக்கிறது.

ஆத்ம நிலையை சுப்பிரமணியர் கொடுமையானது என்று கூறுகிறார்.  இந்த நிலை சிவ நிலையைப் போல உச்ச நிலையாக இல்லாதிருப்பதால் மாறுபாடுகளைக் கொண்டதாக உள்ளது. அவர் விட்ட மார்க்கம் என்பது விட்ட பிரகிருதி தத்துவங்களைக் குறிக்கும்.  அல்லது குண்டலி பயணித்த வழியைக் குறிக்கும்.  கயிலை மலை என்பது சஹாஸ்ராரத்தையும் பானம் என்பது லலாடத்திலிருந்து கீழே இறங்கும் அமிர்தத்தையும் குறிக்கும்.

Sunday, 21 December 2014

94. Experiences of a yogi/Duruva cakra

Verse 94
விட்டகுறை தொட்டகுறை தொடர்ந்து கூடி
வெட்டவெளி பராபரத்தின் வெளியில் சென்று
அட்டகிரி பருவதமுங் குலுங்கியாட
ஆறுவரை தான் கடந்தே அகண்ட மேவித்
துட்டரணக் கருவிகளைத் தொடர்ந்து வெட்டி
துருவனிட சக்கரத்தின் சூட்சங்கண்டு
வட்ட முலை மாதுடைய பாதம் போற்றி
வந்தவர்க்கே பேரின்பங் காணுங் காணே

Translation:
Joining with that which left and that which reached
Going to the space of Paraparam, the supreme space
With the eight mountain peaks dancing and shaking
Crossing the six peaks, pervading the expanse
Cutting repeatedly the instruments, the evil painful ones,
Seeing the subtlety of Duruva’s wheel
Praising the feet of the lady with rounded breasts
Only for those who arrived so the bliss will be visible, see it.

Commentary:
Subramanyar describes the achievements of a yogi. The term “vitta kurai” and “thotta kurai” occurs frequently in siddha verses.  Dr. T.N. Ganapathy opines that it means the prana leaving the ida and pingala nadi and flowing through the sushumna nadi.  It may also mean the consciousness remaining in muladhara leaving it and touching the ajna cakra.  It may also mean the body left by the consciousness and the supreme space that it pervaded.  The eight mountains are eight states of consciousness.  The six peaks are the six cakra that represent the pinnacle of a particle principle.  The yogin has to repeatedly cut away the influence of the instruments or senses. Devi Bhagavatham (eighth skandham) describes the Duruva mandala and how the cosmic elements are placed around it.  It forms the reference point for them. It is a state of consciousness in Kundalini yoga, available to advanced yogis.


குண்டலினி யோகியின் அனுபவங்களை சுப்பிரமணியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  விட்ட குறை தொட்ட குறை என்பது பிராணன் இடகலை பிங்கலையில் போகாமல் சுழுமுனை நாடியில் செல்வது என்று முனைவர் திரு கணபதி அவர்கள் கூறுகிறார்கள்.  அது மூலாதாரத்தில் உறங்கும் விழிப்புணர்வு ஆக்ஞையை அடைவதைக் குறிக்கலாம்.  அல்லது விழிப்புணர்வு உடல் கடந்த நிலையை விட்டு பரநிலையை அடைவது என்றும் குறிக்கலாம்.  எட்டு பர்வங்கள் என்பது எட்டு விழிப்புணர்வு நிலைகளைக் குறிக்கும்.  ஆறு வரைகள் என்பது ஆறு சக்கரங்களைக் குறிக்கும்.  அவை குறிப்பிட்ட தத்துவங்களின் எல்லையைக் குறிக்கும்.  துருவ சக்கரம் என்பதை தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் விளக்குகிறது.  அதில் துருவ சக்கரம் குண்டலினி சக்கரத்தின் அடியில் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.  இது குண்டலினி யோகத்தில் ஒரு உணர்வு நிலை.  யோகத்தில் பெருநிலையை அடைந்த யோகிகள் அனுபவிப்பது.

Friday, 19 December 2014

93. Importance of Pranayama in kundalini yoga

Verse 93
பேச்சென்ன இந்தமுறை பேசிப் பேசி
பிராணாயந் தெரியாமற் பிசகிப் போனால்
ஆச்சென்ன வதினாலே வருவதேது
அந்தரங்க மானதுறை அறியாப் பேர்க்குக்
காச்சென்ற காச்சுமடா இந்த யோகம்
காலாந்தக் கனலெழுப்பிக் கொதித்துப் போவான்
வீச்சென்று வீசாரே இந்தப் பேச்சு
வேதாந்த சாரணையை வெளிவிட்டேனே

Translation:
This speech, talking repeatedly
If one errs not knowing pranayama
What happens because of it?
For those who do not know the inner process
This yoga will boil them
He will raise the fire with the prana and get scorched
Do not throw away this speech
I revealed the secret of the Vedanta.  

Commentary:
Subramanyar says that proper knowledge about pranayama is essential to realize this supremely secretive technique.  If not, one will raise the fire of kundalini with the help of pranayama and kumabaka practice and that fire will burn him as he does not know how to deal with it.  The practice more detrimental if it is not practiced correctly. Subramanyar tells Agatthiyar that this is the supreme message that Vedanta confers.


இந்த ரகசிய யோக முறைக்கு முக்கியமானது பிராணாயாமம் பற்றிய சரியான அறிவு.  இல்லாவிட்டால் அந்த யோகி கும்பக பயிற்சியின் மூலம் குண்டலினி அக்னியை எழுப்பி அத்தீயினால் கொதித்துப் போவான்.  அதனால் இந்தப் பேச்சைக் கவனமாகக் கொள்ளவேண்டும் என்றும் இதுவே வேதாந்தத்தின் ரசம் என்றும் சுப்பிரமணியர் அகத்தியருக்குக் கூறுகிறார்.

Tuesday, 16 December 2014

91. Agatthiyar's upadesa are those that he got from Subramanyar

Verse 91
பாரடா இப்படியே சிவன் தனக்குப்
பனிரண்டு தளதினுட கூறுஞ்சொல்லி
ஆரடா அஷ்டாங்க வெக்யங்காட்டி
அருள் பெருகுஞ் சதாநந்தி அருளைக் காட்டி
வேரடா வேரில்லாக் கனியைக் காட்டி
வேதாந்த ரசக்கிணறு மிகவுஞ் சொல்லிச்
சேரடா சிந்தைதனில் கவனம் வைத்துச்
செவி சாய்ப்பாய் அகத்தியனே செப்பத்தானே

Translation:
See son, in this fashion, for Sivan
Revealing the nature of the twelve loci
Showing the subtlety about the ashtanga yoga
Showing the grace of Sadanandhi
Showing the fruit without a root
Talking in detail about the well of the essence of Vedanta
Keeping the focus on the chintha
Agatthiyar you will listen to these, so that you can talk about it.

Commentary:
Subramanyar tells Agatthiyar that he explained the subtlety of the twelve loci of consciousness, the ashtanga yoga, the grace of Sadanandhi, the fruit of supreme conscious state which remains unsupported, the well of the essence of Vedanta/the locus from where the nectar descends to Sivan.  He also instructs Agatthiyan to hear these carefully as he has to describe them to others later.  Thus, we realize that the philosophy and the teachings that Agatthiyan propounds are those he got directly from Subramanayar, the supreme teacher who taught all these to Sivan himself.


இப்பாடலில் சுப்பிரமணியர் தான் சிவனுக்கு பன்னிரண்டு உணர்வுத் தளங்களைப் பற்றியும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றியும் தற்பரமாக இருக்கும் பரவுணர்வுக் கனியைப் பற்றியும் வேதாந்த ரசக்கிணறு எனப்படும் லலாட சக்கரத்தைப் பற்றியும் கூறியதாகவும் இந்த விவரங்களை அகத்தியர் மிகக் கவனமாகக் கேட்கவேண்டும் ஏனெனில் அவர் இவற்றைப் பிறருக்குக் கூறவேண்டும் என்றும் சொல்கிறார்.  இதனால் அகத்தியரின் உபதேசங்கள் அனைத்தும் அவர் சிவனுக்கே குருவாக இருந்த உபதேசித்த சுப்பிரமணியரிடமிருந்து பெற்றவை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

Saturday, 13 December 2014

92. The manifestations of the silence of akaara

Verse 91
தானாகித் தானவனாய் ஆவதற்குச்
சத்தியமாய் அகாரமென்ற மவுனம் வேணும்
ஊனாகி உடலாகி உயிருமாகி
ஓங்கார மானதுவும் அதுவே ஆகி
கோனாகிக் குருவாகிக் குமரியாகிக்
கோடிவரை காலமெல்லாம் இருத்தி வைக்கும்
ஆணாகி வெளியாகி அலியுமாகி
யார் தனக்கும் எட்டாத இந்தப் பேச்சே

Translation:
Becoming the Self, to turn Self into him
Truly, the silence of akaara is essential
Becoming the flesh, the body, the soul
And the Omkara
As the king, the guru and the kumari
It will retain you forever
As the man, woman and neutral gender
This speech will not reach anyone.

Commentary:
Subramanyar says that to turn Jiva into Siva the silence of the akaara is essential.  The silence of the akaara manifests as the material body, the spiritual body, the soul and the omkara or the essential principles.  It will turn the Jiva into the king, the guru, the one who removes the darkness of ignorance and grant a destructionless state. It is the silence which appears as man, woman and the neutral gender.  Subramanyar says that these concepts are hard to comprehend. 

ஜீவன் சிவனாவதற்கு ஆகாரத்தின் மௌனம் வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  இந்த மௌனமே ஊனாக, உடலாக, உயிராக ஒம்காரமாக விளங்குகிறது.  இது ஜீவனை அரசனாக குருவாக இருந்து அறியாமை என்ற இருட்டை  மாற்றி இறவாப் பெருநிலையை அளிக்கிறது.  இந்த மௌனம்தான் ஆணாகப் பெண்ணாக அலியாக உலகில் காணப்படுகிறது.  இந்த ரகசியங்கள் புரிந்து கொள்வதற்கு அரியது என்கிறார் சுப்பிரமணியர்.

Wednesday, 10 December 2014

90. Kundalini according to Subramanyar

Verse 90
பாரப்பா இவர்களுட நிலையுஞ் சொல்லப்
பரமசிவன் தான் கேட்டுப் பாவம் நீக்கி
ஆரப்பா குண்டலியாஞ் சத்தி மூலம்
அடுத்தெனக்குத் தெரியவுமே அருளுமென்றார்
நேரப்பா மனதிரங்கிச் சிவன் தனக்கு
நினைவான ஓங்காரக் கம்பமீதில்
ஏரப்பா ஏறி விளையாடுந்தேவி
எட்டிரண்டுங் கூட்டும் இனி ஈந்தாள் பாரே

Translation:
See son, saying the status of these,
Hearing it, Paramasivan, removing his sins
The origin of the sakthi, kundali
Please reveal this to me next, he said.
Graciously for Sivan’s sake
On the pillar of omkara, the wakeful state
Climb son, the devi who climbs are plays
She granted the sum of eight and two, see.

Commentary:
After describing the principle behind Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva Subramanyar was requested by Paramasivan to describe the power of kundalini, its origin.  Subramanyar says that Kundalini Devi climbs the pillar of Omkara and plays there.  The pillar is the sushumna nadi.  The three nadi, ida, pingala and sushumna embody the omkara.  The sushumna represents the akara, the ida represents Makara and the pingala the ukara.  Thus, the state of consciousness ascending the sushumna in the company of the ida and pingala represents the omkara, a combination of akara, ukara and Makara.  The last line of the verse confirms this.  Subramanyar says that Devi grants the sum of the eight and two, eight represents the akara and the two represents the ukara.  Their sum represents the origin, the state of singularity.


பிரம்மா விஷ்ணு ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய நிலைகளை விளக்கிய பிறகு சுப்பிரமணியர் பரமசிவனின் வேண்டுகோளை ஏற்று அனைத்துக்கும் மூலமான குண்டலினி சக்தியை, மூலாதாரத்தில் விளங்குபவளை கூறப்புகுகிறார்.  குண்டலினி சக்தி ஓங்காரக் கம்பம் எனப்படும் சுழுமுனை நாடியில் ஏறி விளையாடுபவள். இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று முக்கிய நாடிகள் முறையே மகாரம், உகாரம், அகாரம் என்ற தத்துவங்களைக் குறிக்கின்றன.  விழிப்புணர்வு சுழுமுனையில் பயணிப்பது என்பது இவ்வாறு ஓங்கார நிலையைக் குறிக்கிறது.  இதையே சுப்பிரமணியர் இப்பாடலின் கடைசி வரியில் தேவி எட்டிரண்டின் கூட்டை அருளுகிறாள் என்கிறார்.  எட்டு இரண்டு என்பவை அகார உகாரத்தைக் குறிக்கின்றன.  இவற்றின் கூட்டு என்பது அனைத்தும் ஒன்றான நிலையை, இறைநிலையைக் குறிக்கும். 

Friday, 5 December 2014

89. Concluding remarks on creation

Verse 89
பாரடா வாங்கார கோபமாகிப்
பார்தனிலே அனலாகி மாயை தோன்றி
ஆரடா சுழிமுனையில் அவர்தானின்று
ஆதிஎன்றும் அநாதி என்றும் ஏகமானார்
நேரடா விதையறியாத் தவத்தோர் தானும்
நிஷ்டையிலே அணுவளவு நிலைக்கெட்டாது
ஏரடா இதையறிந்து பூசை செய்தால்
என்றைக்கும் இறக்காமல் இருத்தும் பாரே

Translation:
See son, becoming the ahamkara and anger
As fire in the world, with maya occurring
Who son, in the he stands in the tip of the whorl
He became the origin and the eternal and the singularity
This is correct.  The austere ones who do not know this
Perform practices.  The state will not be attained even for an atomic quantity
Climb, if worship is performed with this knowledge
It will hold in a deathless state for eternity.

Commentary:
The above verses describe how the different deities who represent various states and principles emerged and how they perform their duties, how they remain in this world as the ahamkara or the sense of self, the anger, the fire and maya that transforms one's perception.  In this concluding version on that topic Subramanyar says that one should know this truth.  One should perform austerities with this in mind to attain the supreme state, raise the consciousness to the ajna cakra and reach the state of the Param, the origin, the eternal singularity. One should perform austerities with this knowledge in mind.  It will take one to the state of deathlessness. 


இதுவரை தெய்வங்களும் உலகத் தொழிலும் அவர்களது நிலையும் எவ்வாறு ஏற்பட்டன என்று விளக்கிய சுப்பிரமணியர் இந்தப் பாடலை முடிவுரையாக இட்டுள்ளார்.  மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்தும் இவ்வுலகில் அகம்காரம் அல்லது தான் என்னும் உணர்வு, கோபம், அக்னி என்றும் மாயை என்றும் விளங்குகின்றன. இந்த உண்மையை உணர்ந்து ஒருவர் சுழிமுனை எனப்படும் ஆக்ஞையில் விழிப்புணர்வை இருத்தி நிலைபெற்று நின்றால் அவர் ஆதி அநாதி ஏகம் எனப்படும் பரநிலையை அடைகிறார்.  இந்த அறிவுடன் ஒருவர் தவத்தையும் நிஷ்டையையும் மேற்கொண்டால் இந்த உயர்ந்த நிலை கிட்டும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று சுப்பிரமணியர் கூறுகிறார். 

Monday, 1 December 2014

88. Going beyond Sadasiva

Verse 88
தேரென்ற தேவி திருப் பாதம் போற்றித்
தெளிவான யகாரமதைச் சுழினைக்கேற்றி
கூரென்ற கூர்விழியால் மனக்கண்ணாட்டி
கோடி ரவி ஒளியுடைய குறியைப் பார்த்து
வேறொன்றும் பேசாமல் வெளியைப் பார்த்து
வெட்ட வெளியாகவுந்தான் விபரமானார்
ஆரொன்றும் அறியாமல்அரூபமாகி
அடங்கலுக்குந்த தானாகி யிருந்தாள் பாரே

Translation:
Praising Devi’s sacred feet
Raising the yakaara to the ajna
Establishing the mental eye with the help of focusing the lance like sharp vision
Seeing the sign that has the brilliance of million suns
Seeing the beyond with speaking other thing
He became the supreme space/beyond the beyond
Becoming the formless beyond any identity
She remained as the locus of abidance.

Commentary:
Sadasiva, as we saw before, is a state of consciousness.  Tirumular’s Tirumandiram lists the number of “mala” operating in the different states.  For example, Brahma has the three, aanava, karma, maya active.  The number of mala decreases as we move from Brahma to Sadasiva.  Sadasiva state represents the formless form state (aruvuru).  The state beyond this is the aruva nilai or formless state, a state that has no identity, the state of nirguna.  Siddhas call this state vetta veli.  To attain this state the principle represented by yakaara should be raised to the ajna cakra (suzhinai) and the mind tied there with the sambhavi mudra of focusing the eyes at the brows.  Silence or lack of thought should be maintained.  This will take the yogin to the state of supreme space, supreme consciousness.  This state could be reached only by abiding in Sakthi. 


சதாசிவன் என்பது விழிப்புணர்வின் ஒரு நிலை என்பதை முன்பே பார்த்தோம்.  திருமூலர் தனது திருமந்திரத்தில் பிரம்மாவிலிருந்து சதாசிவன்வரை எத்தனை மலங்கள் செயல்படுகின்றன என்று கூறுகிறார்.  பிரம்மாவினிடத்தே ஆணவம் கர்மம், மாயை என்ற மும்மலங்களும் உள்ளன.  இவ்வாறு மலங்கள் ஒவ்வொன்றாகக் கழிய பிரம்மாவின் நிலையிலிருந்து சதாசிவநிலை வரை விழிப்புணர்வு உயருகிறது.  சதாசிவ நிலை அருவுரு நிலை.  இதனைக் கடந்தால் பெறுவது அருவ நிலை.  அதைத்தான் இப்பாடல் குறிப்பிடுகிறது.  அந்த நிலையை அடைய யகாரத்தில் சுழினை எனப்படும் ஆக்ஞையில் நாட்டி, கண்களை சாம்பவி முத்திரையில் புருவ மத்தியில் நிறுத்தி, மனக்கண்ணைத் திறந்து பேச்சற்ற மவுன நிலையில் அதாவது எண்ணமற்ற நிலையில் இருக்கவேண்டும்.  அப்போது பெறுவது வெட்ட வெளி, எவ்வித குறியீடுமற்ற, இதுதான் என்று குறிப்பிட முடியாத நிர்குண நிலை.  இதை சக்தியிடம் சரணடைந்தே பெற முடியும்.