Verse 8
பாரப்பா குண்டலியும் வேறே என்பான்
பதிவான சுழிமுனையை அறிய மாட்டான்
ஆரப்பா பூரண குண்டலியாமென்றும்
அண்டமென்றும் பிண்டமென்றும் அறியமாட்டான்
நேரப்பா பூரணமாங் கலை நாலாகி
நிஷ்டை யொடு சமாதியுநிஷ் களமுமாகி
காரப்பா அமுதமதைஉண்டு தேறிக்
கருத்துடனே சிவ யோகங் கண்டு கொள்ளே
Translation:
See son, he
will say kundalini is something else
He will not
know about the terminus of the whorl
He will not
know who is the fully complete kundali
He will not
that it is the limited space and universal space
Becoming the
fully complete kalaa of four
Along with
austerities, Samadhi and absence of faults
Contemplate son
consuming the nectar and realizing
See Siva yoga
with attention.
Commentary:
Subramanyar is
saying that an ignorant person will not realize that it is the kundalini or the
life force which the origin of everything. He will not know the terminus of the
whorl. Suzhimunai in Tamil means the
terminus of the sushi or the whorl. The whorl
is kundalini. The terminus is the point
where it ends. The chakras at various
positions in the body are termini or centers where a certain distinction
created by a particular fault, mala, ends.
When a yogin’s consciousness crosses a particular chakra one such
distinction ends. When the consciousness
reaches the ajna gradually all the distinctions that appear as the manifested
world, the distinctions caused by elements, their qualities etc are all
assimilated. Only pure soul
consciousness remains. Hence, the ajna
is called the suzhimunai. Beyond the
ajna the limited consciousness also leaves and the soul realizes its
universality. Thus, the concept of “andam”
or the supreme space and “pindam” the body or the limited space are all caused
by the ascendance or descendance of kundalini.
When it
travels from the muladhara to sahasrara andam is created and when it descends
from sahasrara to muladhara pindam is created. Thus, kundalini is the origin of
this body and the universe.
Kalaa are the
distinct states caused by the three faults aanava, karma and maya. The souls in the different states depending
on the type and the number of these faults operating are sakala, pralayakala,
vijnanakala and meijnana. In sakala all
the three faults are operating, their number decreases to nil in meijnana.
During
ashtanga yoga the austerities and the practices help the soul to move from one
state to the next until they become the meijnana. At this stage the yogin consumes the Divine
nectar that pours down from the sahasrara and becomes ageless and deathless. He becomes one with the universal
consciousness. This is the crux of Siva
yoga. Subramanyar tells Agatthiyar to
realize that the basis for all these is kundali.
அறிவற்றவன் குண்டலினிதான் அனைத்துக்கும் மூலம் என்பதை
உணரமாட்டான் என்று சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார். சுழிமுனை என்பது சுழியின் முனை. உடலில் உள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சில
தத்துவ நிலைகளின் முடிவையும் குறிக்கும்.
ஒரு யோகி தனது விழிப்புணர்வை ஒரு சக்கரத்தைக் கடக்க வைக்கும்போது அந்த
தத்துவம் அவரது விழிப்புணர்வு நிலையில் ஒன்றிவிடுகிறது. அவரது விழிப்புணர்வு ஆக்ஞாவை அடையும்போது
பிரகிருதியால் உருவாக்கப்பட்ட எல்லா தத்துவங்களும் ஒன்றி தூய ஆத்ம நிலை
ஏற்படுகிறது. அதனால் ஆக்ஞா சுழியின் முனை
எனப்படுகிறது. ஆக்னாவுக்கு மேல் அந்த
வேறுபாடும் விலகி பரவுணர்வு நிலை ஏற்படுகிறது.
இது குண்டலி மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்தை அடையும்போது
ஏற்படுகிறது. இந்நிலையில் அண்டம் மட்டுமே
உள்ளது. குண்டலி மீண்டு மேலிருந்து
மூலாதாரத்தை அடையும்போது பிண்டம் அல்லது அளவுக்குட்பட்ட நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் காரணம்
குண்டலியே.
கலா என்பது ஆணவம் கர்மம் மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும்
நிலைகள். இந்த மலங்களில் எவை
செயல்படுகின்றன என்பதைப் பொருத்து உயிர்கள் சகலா, பிரளயகலா, விஞ்ஞான கலா, மற்றும்
மெய்ஞ்ஞானர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு மூன்று மலங்களை உடைய சகல நிலையிலிருந்து பூரணமான மெய்ஞ்ஞான நிலையை
ஒரு யோகி நிஷ்டைகளாலும் சமாதியாலும் தன்னிடம் இருக்கும் களங்கங்களை விலக்கி
அடைகிறார். அப்போது சஹாஸ்ராரத்திலிருந்து
கீழே இறங்கும் அமுதத்தை உண்டு காலத்தின் எல்லையையும் கடக்கிறார். இதுவே சிவ யோகம். இவையனைத்துக்கும் மூலம் குண்டலி என்பதைப்
பார்க்குமாறு சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார்.
No comments:
Post a Comment