Verse 5
தாமடா வாய் ஞானம் பேசிப் பேசிச்
சாவதற்குக் கல்வியெல்லாம் அறிந்தேன் என்பான்
காமடா காமப் பேய் பிடித்துக்கொண்டு
கருத்தழிந்து போவதல்லால் கருவைப் பாரான்
ஓமடா உடலிறந்து போவதல்லால்
உண்மையென்று தானறியான் உறுதி பாரான்
வாமடா வெறி நீரைக் குடித்துப் பாவி
வகை கெட்டு அலையாமல் வகைதான் கேளே
Translation:
Speaking only
verbal wisdom
To die, He
will say he knows all the knowledge.
With the ghost
of desire possessing him
He will not
see the essence; he will only lose his mind
Yes, son,
other than the body dying
He will not know that he is the truth, he will not be
firm.
Drinking the liquid that causes violence, the sinner,
Without roaming being completely destroyed, listen to the
way.
Commentary:
Subramanyar is continuing the previous verse where he
describes a conceited soul. That person,
the one who claims wisdom as he possesses textual knowledge will be taken over
by desire which will lead to his utter destruction. He will spend the time to look at the essence
of everything including his textual knowledge.
The essence of all the knowledge systems in the world, the terminus of
Veda-that which should be known, the Vedanta, is nothing but the Divine. Without knowing this or remaining firm in
this thought the cheat will die or lose his mind drinking the liquid that
causes only violence. As a preliminary
to the last but one sentence where he talks about this liquid Subramanyar says “vaamadaa”. One wonders if he is referring to the vama
marga which prescribes the five Ms or the meat, wine, physical union, fish and parched
grain. He may be referring to the wine
that is part of the ritual in this stream of tantric practices.
தான் முந்தைய பாடலில் கூறியதை இப்பாடலிலும் தொடருகிறார்
சுப்பிரமணியர். வாய் ஜாலத்தால் ஞானியைப்
போல தோற்றமளிக்கும் ஒருவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அவர், அந்த மனிதனை
காமப் பேய் பிடித்து ஆட்டும், அவன் தனது மனதை இழந்து, கருவைக் காணாமல் இறந்து
போவான் என்கிறார். எல்லாவற்றிற்கும்,
அறிவு உட்பட, உள்ளுரைப் பொருளாக இருப்பவன் இறைவனே. அவனை அறியாமல் வாய்பெசித் திரியும் மக்கள்
முடிவில் உடலிறந்து அழிந்து போவர்.
கருவைக் காண்பவன் குருவைக் கண்டு முடிவில் இறைவனைக் காண்பான். மற்றவர் வெறிநீர் குடித்து அழிந்து போவர்
என்கிறார் சுப்பிரமணியர். வெறி நீர்
என்பதற்கு முன் அவர் வாமடா என்கிறார்.
ஒருவேளை அவர் மது, மாமிசம், மைத்துனம், மச்சம், முத்ரா அல்லது தானியம் என்ற
ஐந்தையும் பயன்படுத்தப் பரிந்துரைக்கும் வாம மார்க்கத்தைக் குறிக்கிறாரோ என்று
தோன்றுகிறது. அங்குதான் வெறிநீர் அல்லது
மது சடங்குகளில் இடம் பெறுகிறது.
No comments:
Post a Comment