Verse 4
தானென்ற வழியறியான் இடமும் காணான்
தன்னுயிரைத் தானென்று போற்றமாட்டான்
வானென்ற பொழியுமந்த அமுதம் சாரான்
வாடாத மணிவிளக்கை அறிய மாட்டான்
தேனென்ற திரை ஏழை அறுக்க மாட்டான்
தேக சித்தி மாய சித்தி செய்ய மாட்டான்
கோனென்ற குருபாதம் அடுக்க மாட்டான்
கூறுவான் வாய்ப் பேச்சால் ஞானந்தாமே
Translation:
He will not
know the way, his Self, he will not see the locus also
He will not
nurture his soul as his Self
He will not
abide by the divine nectar that flows as the sky
He will not
know the jewel, the lamp that never diminishes
He will not
cut the seven curtains
He will not
attain the control of his body or the maya
He will not
approach the king, the sacred feet/locus of the preceptor
He will only
speak, his wisdom is only verbal.
Commentary:
Subramanyar is
talking about a deceitful soul who claims to be a realized soul displaying his
verbal prowess. He will not be experiencing his soul or atma
darsanam is the path for liberation. Atma
unarvu or experience of the soul, leads to para vunarvu or divine
experience. The nectar mentioned here is
the fluid that descends from the sahasrara for an expert yogin. It is said to confer immortality. The “mani vilakku” means the effulgent
gem. The Siddhas call the Divine as
mani. This may mean a jewel, a special
lamp or a jewel that glows like a lamp. May
be it is what our ancestors refer to as the chintamani!
The seven
screens are the limitations that prevent a soul from realizing its unlimited
eternal nature. The first five screens
are the five sensual experiences- touch, taste, smell, sound and sight. The sixth is the sense of discrimination due
to the mind the anthakarana. The seventh
is the soul, in its self imposed limited state.
When all these seven screens are cut away the soul realizes its
universality. Vallar describes these screens
by assigning specific colors for them. The
black screen is that of maya. The blue
screen-kriya sakti, green screen-parasakthi, red- iccha sakti, golden- jnana
sakti, white- adi sakthi and the rainbow screen- chith sakti. These are the forces that cause manifestation
and hence, the sense of limitation. When
the soul crosses these screens it reaches the state of the Divine, the
undifferentiated state.
Control of the
body is deha siddhi. Siddhas recommend
specific mantra, herbal preparations and techniques to transform the body from
its material status to that of light. Maya
siddhi is bringing maya under control.
These are techniques involving the mind.
Gurupaadam is the sacred feet of the Guru. Paadam also means part. Then guru paadam means the role of the Divine
as the guru. It is a part because the
Divine is the guru and much more. The author
of the Tamil commentary has quoted verses 8,9,11,13, 15 of Vallar’s Tiruvarutpa
and several other verses to describe the term paadam.
The person
described in this verse is not a truly realized soul. He only pretends so through his impressive
words. He possesses mere textual
knowledge not real experience.
சுப்பிரமணியர் உண்மையில் ஞானம் பெறாத ஒரு மனிதனைப் பற்றி
இப்பாடலில் கூறுகிறார். அந்த மனிதர் ஞானம்
பெறுவதற்கு வழியான தான் என்னும் தனது ஆத்மாவை அறியமாட்டார். ஆத்மா தரிசனத்தைப் பெற்றிருக்க மாட்டார். ஆத்ம உணர்வே முடிவில் பரவுணர்வைக்
கொடுக்கும். இப்பாடலில் குறிப்பிடும் அமிர்தம்
யோக சாதனையின் உச்சத்தில் சஹாஸ்ராரத்திலிருந்து கீழே இறங்கும் பானத்தைக்
குறிக்கும். அது ஒருவருக்கு மரணமில்லாப்
பெருவாழ்வைத் தரும். மணி விளக்கு என்று
இப்பாடலில் குறிப்பிடப்படுவது ஆத்ம ஜோதியாக இருக்கலாம் அல்லது இறைமையான
பரஞ்சோதியாக இருக்கலாம். மணி என்பது ஒரு இரத்தினம் போன்ற கல்லாகவோ, ஒரு விளக்காகவோ
அல்லது விளக்கைப் போல ஒளிவிடும் மணியாகவோ இருக்கலாம். இதைத்தான் நம் முன்னோர் சிந்தாமணி என்கிறார்களோ
என்னவோ!
இப்பாடலில் குறிப்பிடப்படும் ஏழு திரைகள் ஆத்மாவைத் தனது
உண்மை நிலையை அறிவதிலிருந்து தடுக்கும் திரைகளாகும். முதல் ஐந்து திரைகள் ஐம்புலன்களால் பெரும்
உணர்வுகள். ஆறாம் திரை புத்தியினால்
தோன்றும் பகுத்துணர்வு. ஏழாவது திரை நமது
ஆத்மா, தான் அளவுக்குட்பட்டது என்று எண்ணுவது.
இவையனைத்தையும் கடந்தால் தனது எல்லையற்ற தன்மையை ஆத்மா உணருகிறது. வள்ளலார் இதைத்தான் ஏழு நிறமுள்ள திரைகலாகக் காட்டி
அவற்றைக் கடந்தால் ஜோதி தரிசனம் கிட்டுகிறது என்று கூறினார். அவர் கூறிய ஏழு திரைகளாவன: கருப்பு- மாயத்திரை,
நீலம்-கிரியா சக்தி, பச்சை- பராசக்தி, சிவப்பு-இச்சா சக்தி, பொன்னிறம்- ஞான சக்தி,
வெள்ளை- ஆதி சக்தி, இவையனைத்தும் கலந்த நிறம்- சித் சக்தி.
தேகசித்தி என்பது பருவுடலை ஒளியுடளாக மாற்றுவது. இதற்கு சித்தர்கள் பல மந்திரங்களையும்
தீட்சைகளையும், ரசவாத முறைகளையும் கூறியுள்ளனர்.
மாயசித்தி என்பது மாயை விளைவிக்கும் மயக்கங்களைத் தாண்டுவது. இது மனத்தைக் கொண்டு நிகழ்த்தப்படுவது. குருபாதம் என்பது குருவின் திருவடி. பாதம் எனபதற்கு பகுதி என்றும் பொருள். குருவாக இருக்கும் இறைவனின் ஒரு நிலையையும்
இச்சொல் குறிக்கலாம். இறைவன் நமது குருமட்டுமல்ல அனைத்துமாவான். இந்த நூலுக்கு விளக்கம் எழுதிய ஆசிரியர்
திருவருட்பா பாடல்கள்8,9,11,13, 15 ஐயும் பிற
பாடல்களையும் குருபதம் என்பதற்கு மேற்கோள்காட்டியுள்ளார்.
இப்பாடலில் குறிப்பிடப்பட்ட மனிதன் உண்மையில் ஞானம்
பெறாதவன். தனது ஜாலப்பேச்சால் தான் ஞானி
என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான் என்கிறார் சுப்பிரமணியர்.
No comments:
Post a Comment