Sunday, 24 August 2014

3. Topics that Subramanyar will be discussing

Verse 3
பாரப்பா அஷ்ட கர்ம வசிய மாற்றம்
பரிவான அஞ்சனமுந் திலதப் போக்கும்
ஆரப்பா வகார மொடு வயித்யந் தானும்
அடங்காத தேக சித்தி கெவுனமார்க்கம்
நேரப்பா யோகமொடு ஞானந்தானும்
நிலையான நிருவிகற்ப சமாதி மார்க்கம்
சேரப்பா இதுவெல்லாம் வெளியாய்மைந்தா
செப்புகிறேன் இந்த வகை தெளிவுதானே

Translation:
See son, the eight actions, the enchantment, change
The merciful eye potion, the action of the sesame seed
Become pacified son, the vakaara along with the treatment
The uncontrollable deha siddhi, space travel
The direct, yoga along with jnana
The stable nirvikalpa Samadhi, its means
How to join this, all these, Son
I will tell explicitly, it will become clear this way.

Commentary:
Subramanyar is telling Agatthiyar the topics that he will be discussing in this work.  He will be explaining very clearly, without concealing anything, about the ashta karama, the manner in which the sesame seed moves/acts, the vakaara, the treatment, deha siddhi, kevuna maarga or space travel, yoga, jnana, nirvikalpa Samadhi and how to attain it.  He tells Agatthiyar that there is will not doubt after that.

Ashta karma are the eight actions, vasyam, sthambanam, mohanam, maaranam, aakarshanam, vidhveshanam, bedhanam and ucchaadanam.    All these look like techniques to cause various effects of others.  For example vasyam seems to be a technique for attracting others, maaranam seems to be for causing death.  If one reads the verses in Agatthiyar saumya sagaram one will understand the real purpose of these actions.  They are not for affecting others but to protect oneself from various obstacles that inhibit one from performing the ashtanga yoga and reaching the nirvikalpa Samadhi ultimately.  For example if vasyam is performed correctly all the knowledge systems, the microcosm, the macrocosm, the sastra, mantra, deva, munis, evil spirits, animals the eight types of snakes, birds and one’s own desires-the kaamappaal and the kaanal paal, will come under one’s control.  This is the real goal of vasyam, to bring any external obstacles of the ashtanga yoga under one’s control, including one’s own desires.  Similarly, while the technique for maaranam can cause the death of another, it is actually meant for the death of all the diseases in the yogin’s body.

Sesame seed refers to the soul moving in the ajna.  It is said to be the size of the tip of tilatham or sesame seed.  Agatthiyar says vakaara siddhi is bringing the pancha gana under one’s control using vaasi or special breathing techniques.  Deha siddhi is attaining the “oli udal” or body of light, kevuna maargam is being able to fly in the sky by placing certain magical preparations or “kulikai”.  Nirvikalpa Samadhi is merging with the Supreme without any distinctions.  This is the ultimate state of becoming the Divine.
As Subramanyar is planning to describe all these elaborately he tells Agatthiyar that there will be doubt in the end.

இப்பாடலில் சுப்பிரமணியர் அகத்தியரிடம் தான் எவற்றைப் பற்றியெல்லாம் விளக்கப் போகிறேன் என்று கூறுகிறார்.  அவர், தான், அஷ்ட கர்மம், திலதத்தின் போக்கு, வகார சித்தி, வைத்தியம், தேக சித்தி, கெவுன மார்க்கம், யோகம், ஞ்னனம், நிர்விகல்ப சமாதி ஆகியவற்றைப் பற்றித் தெளிவாகக் கூறப்போவதாகச் சொல்கின்றார்.

அஷ்ட கர்மா என்பவை வசியம், ஸ்தம்பனம், மோகனம், மாரணம், ஆகர்ஷணம், வித்வேஷணம், பேதனம் மற்றும் உச்சாடனம் என்னும் எட்டுவகைச் செயல்களாகும்.  இந்த செயல்கள் அனைத்தும் பிறரைத் தனது கட்டுக்குள் வைக்க உபயோகப்படுத்தக் கூடியவையாகத் தோன்றினாலும் உண்மையில் அவை ஒருவர் அஷ்டாங்க யோகம் செய்ய முனையும்போது ஏற்படும் தடங்கல்களை விலக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.  உதாரணமாக வசியம் என்பது பிறரைத் தனது கட்டுக்குள் வைக்க உதவுவதாகத் தோன்றுகிறது.  ஆனால், அகத்தியரின் சௌம்யசாகரத்தைப் படித்தால் அது வேதம், சாத்திரம், மந்திரம் என்ற எல்லா அறிவின் ஊற்றுக்களைப் பெறவும், தனக்குள் இருக்கும்  சிற்றண்டத்தையும் வெளியில் உள்ள பேரண்டத்தையும் கட்டுப்படுத்தவும்,  தேவர்கள் முனிவர்கள் என்று தனக்கு உதவுபவர்களை நெருங்கவும் தீயசக்திகளை விலக்கவும் பறவை மிருகம் போன்ற பிற உயிர்கள் தனக்குத் துன்பம் தராதிருக்கவும், தனது ஆசைகளான கானல்பாலை காமப்பாலை ஆகியவற்றை விலக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  அதேபோல் மாரணம் தனது உடலில் உள்ள நோய்களை, மரணமடையச் செய்ய, அழிக்க, பயன்படுத்தப்படுகிறது.  இவ்வாறு இந்த அஷ்ட கர்மங்கள் அஷ்டாங்க யோகத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள உதவும் முஸ்தீபுகளாகும்.

திலதம் என்பது எள்.  ஆத்மா எள்ளின் முனையைப் போல ஆக்னையில் தென்படும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.  வகாரம் என்பது பஞ்ச கணங்களைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவது.  அகத்தியரின் வகார தீட்சையில் இதைப் பற்றிய குறிப்புக்களைக் காண்க.  தேக சித்தி என்பது பருவுடலை ஒளியுடலாக மாற்றுவது. கெவுன மார்க்கம் என்பது குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாகப் பறப்பது.  நிர்விகல்ப சமாதி என்பது இறைமைக்கும் தனக்கும் இவ்வித வேறுபாடும் இல்லாதிருப்பது, யோகத்தின் உச்ச நிலை. 


சுப்பிரமணியர் தான் இவையனைத்தையும் விரிவாக விளக்கப் போவதால் அகத்தியருக்கு இவற்றைக் குறித்து எவ்வித சந்தேகமும் இனி இருக்காது என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment