Verse 6
கேளடா சரிதையொடு கிரிகை யோகம்
கிருபையுடன் ஞானமெல்லாம் வெளியாய்ப் பாடி
வாழடா வாழ்வதற்கு வகையுங் காட்டி
வாடாத தீபமதை அறிந்தே ஏற்றித்
தேளடா தேட கொடுக்காங் குல தெய்வந்தான்
சீவநிலை சிவ நிலையும் அதுவேயாகிக்
கோளடா வசுரர்களைக் குலைத்துவிட்டேன்
குவலயத்தில் வாசி மயிலேறித்தானே
Translation:
Listen son,
along with charya, kriya, yoga
Singing the
jnana also explicitly
Showing the
way to live
Lighting, with
knowledge, the lamp that never withers
Like the sting
of the scorpion, the deity of kula
The state of
Jiva, Siva and becoming verily that
I destroyed
the asuras
In the world,
by alighting the peacock, the vaasi
Commentary:
Subramanyar is
explaining several important concepts in this verse. First he says that he will be speaking explicitly
about charya, kriya, yoga and jnana.
These are the four steps for realizations. The traditions that follow agama lay great
stress on these four steps as opposed to traditions that follow Veda. We will see about these steps in detail when
Subramanyar describes them later.
Suffice to say here that charya refers to external rituals, kriya to
internal rituals, yoga refers to ashtanga yoga and these three culminate in
jnana or wisdom.
The lamp that
never withers is the lamp of knowledge. It is the lamp of the Self, the
consciousness which once lighted will never die out. This lamp could be lighted with
knowledge.
Subramanyar
talks about two concepts in the line where he says like the sting of the
scorpion and the deity of kula. Kula
refers to kundalini, kula kundalini. It
is also called kaula marga. Ascendance of kundalini is said to be like the
sting of a scorpion or snake.
The state of
Jiva and Siva the limited and universal consciousness will be described in this
composition in addition to showing the way in which the Jiva becomes Siva.
Next two lines
are very interesting. Subramanyar tells
Agatthiyar that he destroyed the asuras in this world by climbing on his
peacock, the vaasi. First, let us who
these asuras are.
Vallalar
explains who these suras are. Padmasura
is craving. Gajamukhan is madness or
madham. Singamugan is moha or desire. These three asuras should be won by
Shanmukhan, the sixth sense or the sense of discrimination, the Vel or spear,
with the help of five sakthis, suddha jnana and suddha kriya. This is Murugan’s
Sura samharam. The peacock is the vital
breath or vaasi. Even if the above
qualities are killed the vaasana or preconditioning lingers. Whenever the occasion arises, it spreads its
plume and dances like the peacock. It
enchants us by its illusory beauty and keeps us tied in it. Remaining on top of this vaasana is Murugan/discrimination
keeping them under its control. The
vikalpa jaalam in the universe is the peacock.
In the middle of the brow there is a flame in the shape of six sided
jewel. This effulgence is
shanmukham.
In this
context it should be mentioned that Murugan’s dhandayudam or the weapon, stick
is none other than the sushumna nadi through which the vital breath and the
kundalini sakthi ascends.
சுப்பிரமணியர் இப்பாடலில் பல முக்கியக் கருத்துக்களைக்
கூறியுள்ளார். முதலில் அவர் தான் இப்பாடல்
தொகுப்பில் சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பவற்றைப் பற்றி வெளிப்படையாகப்
பேசப்போவதாகக் கூறுகிறார். ஆகமத்தை
முக்கியமாகக் கருதும் தந்திர மார்க்கம் இந்த நான்கையும் முக்தியைப் பெரும்
வழிகளாகக் கருதுகிறது. சரியை என்பது கோவிலுக்குப்
போவது விளக்கேற்றுவது போன்ற காரியங்களைச் செய்து வெளியில் இறைவனிடம் பக்தி
செலுத்துவது. கிரியை என்பது மனதுள்
இடைவிடாமல் இறைவனிடம் அன்பு செலுத்துவது.
யோகம் என்பது அஷ்டாங்க யோகம். அதன்
முடிவில் பெறுவது ஞானம்.
என்றும் அழியாமல் இருக்கும் விளக்கு ஆத்ம ஜோதி. அது ஞான ஜோதி, அறிவால் ஏற்படுவது.
சுப்பிரமணியர் மேலும் இரு விஷயங்களை அடுத்து
கூறுகிறார். அவை தேளின் கொடுக்கு குல
தெய்வம் என்பவை. குண்டலினி மேலே
எழும்பும்போது அது பாம்பின் கொத்தலைப் போல தேளின் கொட்டலைப்போல இருக்கும் என்று
கூறுவர். குல தெய்வம் என்பது குண்டலினி,
அவள் மேலே ஏறும்போது குல குண்டலினி என்று அழைக்கப்படுகிறாள். இந்த மார்க்கம் கௌள மார்க்கம் என்று
அழைக்கப்படுகிறது.
சுப்பிரமணியர் ஜீவ நிலை, சிவ நிலை எவ்வாறு ஜீவன் சிவமாகும்
என்பதைப் பற்றி இங்கே விளக்கப்போவதாகவும் கூறுகிறார்.
இதனை அடுத்து வரும் இருவரிகள் மிக முக்கியமானவை. முருகனின் வேலையும் மயிலையும் சூரசம்ஹாரத்தையும்
விளக்குபவை.
இந்த அசுரர்கள் யார் என்று வள்ளலார் விளக்குகிறார். பத்மாசுரன் என்பது அவா, கஜமுகன் என்பது மதம்,
சிங்கமுகன் என்பது மோகம். இந்த மூன்றையும்
ஐந்தறிவால் வெல்ல முடியாது. ஆறாவது அறிவு
அல்லது பகுத்தறிவு அல்லது கூர்மையான வேலால் ஐந்து சக்திகள் சுத்த ஞானம், சுத்த
கிரியா ஆகியவற்றின் உதவியுடன் வெல்லவேண்டும்.
மயில் என்பது வாசி. மேற்கூறிய
மூன்று குணங்களும் அழிக்கப்பட்டாலும் அவற்றின் வாசனை அல்லது சுவடு எளிதில்
நீங்குவதில்லை. அந்த வாசனை சமயம்
கிடைக்கும்போது மயில் தோகையை விரித்து ஆடுவதைப் போல பரந்து விரிகிறது. தனது அழகால் தோகை நம்மை மயக்குவதைப் போல நம்மை
மதியிழக்கச் செய்கிறது. இந்த மயிலின்மேல்
முருகன் இருப்பது என்பது பகுத்தறிவு இந்த வாசனை அல்லது விகல்ப ஜாலத்தைத் தனது
கட்டுக்குள் வைத்திருப்பது. நமது
ஆக்னையில் ஒரு ஆறு பட்டையான மணி ஒளிவிட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த ஜோதியே ஷண்முகன்.
இந்த இடத்தில் நாம் முருகனின் தண்டாயுதம் என்றால் என்ன
என்றும் பார்க்கவேண்டும். தண்டம் என்பது
குண்டலினி சக்தி ஏறும் சுழுமுனை நாடி. அது
முருகன் அல்லது பரவுணர்வின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதைத் தான் தண்டாயுதபாணி, வேலன் காட்டுகிறான்.
அருமையான விளக்கங்கள் நன்றி
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteவேலும் மயிலும் துணை!
ReplyDeleteExcellent Article and explanation!!!
ReplyDelete