Verse 2
வழுத்துகிறேன் இந்நூலை மனதிரங்கி
வையகத்தோர் சித்தரெல்லாம் பிழைக்க வென்று
அழுத்தமுடன் இந்நூலை மக்காள் மக்காள்
அடி தொடுத்த நுனிவரைக்கும் ஆராய்ந்தே பார்
பழுத்த மலைச் சாயையிலே பதுங்கி ஏறி
பராபரத்தின் அடியினுட வட்டம் பார்த்துக்
கொழுத்தியே பானமதைப் பானஞ்செய்து
குவலயத்தில் வாதமொடு வயித்தியம் பாரே
Translation:
I am uttering
this work with mercy
For the
benefit of the worldly and the siddhar
People!
People! This book, with concentration
Examine it
from the bottom to the top
Lurking in the shadows of the matured mountain and climbing
Seeing the circle of the feet/terminus of the paraparam
Consuming the prana the drink
See vadam and treatment in this world.
Commentary:
Subramanyar tells Agatthiyar that he is uttering these
verses out of mercy so that everyone, the renunciate and the worldly will
benefit from it. He advises people to
examine it carefully, understand it and put it to practice. The mature mountain is the sahasrara, which is the ultimate state or locus where the soul reaches the realized state. The soul should climb up to the sahasrara
slowly and carefully as if lurking in the shadows. There it should see the circle of the feet of the Paraparam or the Divine. Siddhas call the sahasrara as the “vindhu
vattam”. The sahasrara is the point at which the Divine grace enters the human body.
It is the point that connects the limited soul with the universal
soul. Beyond this circle, a
bindu or a point, it is only the state of universal consciousness. This is the point where the formless,
limitless Divine enters the body and adorns a form and the limitations, as the
Jiva. “paanam” means a drink, Siddhas
call the prana also as paanam. Here the
drink is the divine nectar and it is the prana which makes this nectar available for
consumption. This nectar will cure all the
diseases including the disease of future births. Hence, Subramanyar is telling Agatthiyar that
one would attain the treatment and the vaadha siddhi or mystical accomplishments that one attains upon gaining control over the vital air, while still remaining in this
world. This is possible if one follows the instructions given in this book.
இப்பாடலைத் தான் சித்தரும் உலக மக்களும் பயன்பெறுவதற்காக
மனமிரங்கிக் கூறுவதாகச் சொல்லும் சுப்பிரமணியர்மக்கள் இந்த நூலை அடிமுதல் தலைவரை
கூர்ந்து ஆராயவேண்டும். பின் அதைப் பயிற்சியில் கொண்டு வந்து பதுங்கி, அதாவது
நிதானமாகவும் சாக்கிரதையாகவும், பழுத்த மலையில் ஏறவேண்டும், அதாவது சஹஸ்ராரத்தை
அடையவேண்டும், என்றும் கூறுகிறார். அங்கே பராபரத்தின் பாதம் அந்த யோகிக்குத்
தென்படும். சஹஸ்ராரத்தை சித்தர்கள் பலவாறு
அழைக்கின்றனர். சிவவாக்கியர் அதை வட்ட
வீடு என்கிறார். சிலர் அதை விந்து வட்டம்
என்றும் கூறுகின்றனர். இறையருள்
உடலுக்குள் வரும் இடம் சஹாஸ்ராரமே. இந்த
வட்டம் ஒரு புள்ளியைப் போல பிந்து என்ற பேரில் உள்ளது. அதன் மூலம்தான் அளவுக்குட்பட்ட ஜீவாத்மா
பரமாத்மாவைத் தொடர்புகொள்கிறது. இந்த
வட்டத்தைக் கடந்தால் பரவுணர்வு நிலைதான். எல்லையற்ற
வரையறையற்ற பரவுணர்வு இந்த புள்ளியில் உடல் என்ற எல்லைக்குள் கட்டுப்பாடுகளை
ஏற்றுக்கொண்டு நுழைகிறது. இவ்வாறு சஹஸ்ராரத்தை
அடைந்தபோது அங்கே பானம் என்ற பானத்தைப் பருகவேண்டும் என்கிறார்
சுப்பிரமணியர். சித்தர்கள் பிராணனை பானம்
என்பர். பானம் என்பது
சஹாஸ்ராரத்திலிருந்து ஊரும் அமிர்த ரசத்தையும் குறிக்கும். இவ்வாறு இந்த உலகில் இருக்கும்போதே வாத சித்தியையும்
எல்லாப் பிணிகளையும், பிறவிப் பிணி உள்பட, விலக்கும் வைத்தியத்தையும் பார்க்குமாறு
சுப்பிரமணியர் கூறுகிறார்.
வையகம் வாழ வளர்க தங்கள் இத்திருப்பணி. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDelete