Verse 7
தானென்ற மூலமதைச் சாற்றக் கேளு
சந்திரன்தன் மண்டலத்துக் கடுக்கவேறி
கோனென்ற பச்சைநிற வழியுமாகிக்
குருவான பஞ்சகர்த்தா மாயைதோன்ற
வானென்ற வானிலொரு இடியுங் காற்றும்
வந்ததடா தந்தையுட விந்துமாகிக்
கோனென்ற பாசமொடு பார்வை திஷ்டி
கொடுத்தவனாம் மூலக் குண்டலியாம் பாரே.
Translation:
Listen to me
saying about the moolam (origin/muladhara)
Climbing to
the realm of the moon with pain
Becoming the
king, the green way,
With the guru,
the five types of maya appearing
In the sky
where the thunder and wind appear
The semen of
the father coming (down)
With the king,
the attachment, the sight, the vision,
The one who
gave it, the mula kundali, see it.
Commentary:
Subramanyar
tells Agatthiyar that he is going to be talking about the moolam. The moolam means both the muladhara and the
origin. The muladhara is the primary point of support. The power of kundalini remains inactive there
unless it is woken up from its slumber by practices. It climbs through the various cakras or
energy termini in the body and reaches the realm of the moon which is at the
sahasrara and beyond. This process hurts
the eye and the body as a whole as it is a very austere and powerful
process. Many Siddhas have used the
expression ‘pacchi’ to describe this path.
This term means ‘verdant’. It is
not clear if it is called so because it is rich with experiences or whether
there is any other significance in it.
Subramanyar calls this path as the royal path.
The five types
of maya are the aanava, karma, maya, mayeeya and tirodaya. These five types maya keep the
soul ignorant of its true nature. When they
leave the soul at the guru cakra the soul realizes its true nature.
Next Subramanyar is talking about thunder, wind and the
father’s semen. Scriptures say that the
soul, after death of a physical form, is present in the subtle form in the sky. It is brought down to the earth through the
thunder, winds and rain shower. The rain
water feeds the plants that are consumed by the lives on earth. A part of the food turns into semen in the
man. The soul which is embedded in the
semen is brought into a womb through physical contact where it grows and
emerges as a gross physical being into this world. This occurs by the benevolent grace of the
Divine who grants a physical body to the soul so that it can work out its
karma. Not only does the Divine bless
its occurrence, it also accompanies the soul and remains in the body as the
mulakundali or the vital force at the muladhara. It is the force that makes life forms
function. Kundalini is needed not only
for spiritual evolution but for physical evolution as well.
அகத்தியரிடம் சுப்பிரமணியர் தான் அடுத்து மூலத்தைப் பற்றிப்
பேசப்போவதாகக் கூறுகிறார். மூலம் என்ற
சொல் மூலாதாரத்தையும் அனைத்தையும் தோன்றச் செய்யும் மூலத்தையும் குறிக்கும். உடலில் மூலாதாரம் அனைத்தையும் தாங்கும்
புள்ளி. அங்கேதான் குண்டலினி, யோகத்தினால்
எழுப்பப்படும்வரை தனது செயலற்ற நிலையில் இருக்கிறது. அங்கிருந்து விழித்தெழும் குண்டலினி சக்கரங்கள்
அல்லது சக்தி மையங்களின் ஊடே பாய்ந்து சஹஸ்ராரத்தை அடைகிறது. சஹாஸ்ராரத்துக்கு மேலே இருக்கும் இடம் சந்திர
மண்டலமாகும். இந்த செயல் மிகக் கடுமையான
ஒன்று கண்ணில் வலி உடலில் மாற்றங்கள்
என்று பல துன்பங்களை ஏற்படுத்துவது.
இவையனைத்தையும் தாங்கக் கூடிய மனவலிமை பெற்றவரால்தான் இந்த முயற்சியை
மேற்கொள்ள முடியும்.
குண்டலினியின் பாதை பச்சை என்கிறார் சுப்பிரமணியர். சித்தர்கள் பலர் இவ்வாறு கூறியுள்ளனர். பச்சை என்பது பசுமையான, பல காட்சிகளையும்
பயன்களையும் கொடுக்கும் பாதை என்பதாலா அல்லது அதற்கு வேறு பொருள் உள்ளதா என்று
தெரியவில்லை. இந்தப் பாதை ராஜா அல்லது
கோன் என்கிறார் சுப்பிரமணியர்.
இதனை அடுத்து சுப்பிரமணியர் பிறப்பின் மூலத்தைப் பற்றிப்
பேசுகிறார். ஐவகை மாயைகள் ஆணவம், கர்மம்,
மாயை, மாயீயம், திரோதயம் என்பவையாகும்.
இவை ஐந்துமே ஒரு ஜீவனை தனது உண்மை நிலையை மறக்கச் செய்கின்றன. இவை குரு சக்கரத்தில் விலகும்போது உண்மை நிலை
உணரப்படுகிறது.
அடுத்து, சுப்பிரமணியர் இடி, காற்று, தந்தையின் விந்து
ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். மேலே
கூறிய ஐவித மாயையால் உயிர்கள் உலகில் தோன்றுகின்றன. இறப்பின்போது ஸ்தூல உடலை நீக்கும் உயிர்கள்
சூட்சும உடலுடன் ஆகாய வெளியில் இருக்கின்றன.
அவை, இடி, மின்னல், காற்று, மழை ஏற்படும்போது மழை நீருடன் அவை பூமியை
அடைகின்றன. அந்த மழை நீர் பயிர்களுக்கு
உயிரூட்டும்போது உயிர்கள் அங்கே தங்குகின்றன.
அந்த உணவுப் பொருட்களை உயிர்கள் உண்ணும்போது அவை ஒரு உடலினுள் புகுந்து
ஆணின் விந்துவாகின்றன. அந்த விந்து ஒரு
கருவறையை அடையும்போது ஒரு ஸ்தூல உருவைப் பெற்று ஒரு உயிராக உலகினுள் வெளிவருகிறது.
இதுதான் உயிர்களின் தோற்றக் கிரமம் என்று பழம் நூல்கள் கூறுகின்றன. இதைத்தான் இங்கே சுப்பிரமணியரும்
கூறுகிறார். இவ்வாறு ஒரு உயிர் தோன்றுவது
இறைவனின் அருட்பார்வையால்தான். ஏனெனில் ஒரு ஸ்தூல உடலைப் பெறுவது ஒரு பாக்கியம்,
அந்த உருவில்தான் ஜீவன்கள் தமது கர்ம மூட்டையைக் கரைக்கின்றன. இறைவன் உயிர்களுக்கு தனது அருட்பார்வையை மட்டும்
அளிப்பதில்லை தானும் அவற்றுடன் மூல குண்டலி என்ற அக்னியாக உடலினுள்
புகுகிறான். ஆன்மீக வளர்ச்சிக்கு
மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து அக்னிக்கும் மூல காரணம் குண்டலினி தான். உடலில் அக்னி இல்லாவிட்டால் அது சவம்தான்.
//உயிர் உடலினுள் நுழைவது சஹாஸ்ராரத்தின் மூலம்தான். அதனால்தான் பிறந்த குழந்தைகளின் மண்டையோடு ஒரு விரிசலை உடையதாக உள்ளது.//
ReplyDeleteஅம்மா, அப்படியென்றால் இரண்டு விதமாக உயிர் உடலில் வந்து சேர்கிறதா?
அகத்தியரின் பாடல்களைப் படித்தால் அவர் முதலில் மடபதி அதாவது அறிவற்ற இவ்வுடல் தோன்றுகிறது அதனுள் இறைவன் வாயுவாகவும் ஜீவன் அக்னியாகவும் இருக்கின்றனர் என்கிறார். ஒரு உயிர்தான் தனது கர்மத்துக்கு ஏற்ற உடலை எடுக்கிறது. ஆனால் அது எப்போது உடலினுள் நுழைகிறது என்பது யாருக்கும் தெரியாது. சித்தர் பாடல்களில் தேடினால் நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு ஒரு கோளமாக இருக்கும் முழுவுடலின் முற்பட்ட நிலையில் ஆத்மா அதனுள் புகும்போது அது மண்டையோடு என்பதன் ஆரம்பநிலையில் இருக்கும் ஒரு வஸ்துவின் மூலம் உள்ளே புகுகிறது. அதேபோல் உயர் ஆத்மாக்களுக்கு உயிர் உடலை விட்டு நீங்கும்போது மண்டையோட்டின் வழியே நீங்குகிறது. அதைத்தான் கபால மோட்சம் என்கின்றனர்.
ReplyDeleteஇதை அறிவியல் வழியில் பார்த்தோமானால் குழந்தை வெளியே வருவதற்கு இது எளிதாக இருப்பதால் இயற்கை இவ்வாறு ஏற்படுத்திவைத்துள்ளது என்பர். நமது பழைய இலக்கியங்களைப் படித்தால் ஆத்மா உடலில் தொடர்ந்து இறையுணர்வுடன் இருக்கிறது, அது பிறக்கும்போது சடம் என்ற வாயுவால் சூழப்பட்டு தனது எல்லையற்ற தன்மையை மறந்துவிடுகிறது என்று கூறுகின்றன. இந்த தொடர்பும் சகஸ்ராரத்தின் மூலம் நிகழ்வதாக இருக்கலாம்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா
ReplyDelete