Sunday, 31 August 2014

11. Remain in the "im" and realize the Paraparam- Subramanyar explains oomai ezhutthu

Verse 11
சேரடா மவுனமென்ற வூமை மூலஞ்
செகத்தோர்க ளறியாம லிறந்து போனார்
ஆரடா வூமைதனை யறிந்தால் ஏகம்
அழியாது நீடூழி காலமட்டும்
நேரடா நின்ற நிலை மவுனந்தன்னை
நீங்காமல் இம் என்ற நிலையில் சாற்றி
பாரடா அனுதினமும் விடாமல் நின்று
பராபரமாங் குலதெய்வந் தன்னைப் பாரே

Translation:
Join the silent origin, that is maunam
People of the world died without knowing it
If one knows about the silent one, as the singularity
Will not be destroyed until the end of the world
Remain firmly in the silence
Holding it in the state of “im”
See it daily, remaining firmly so
See the deity of kula, the Paraparam.
Commentary:
The silent state mentioned in this verse is the state of quietude at the end of the Pranava. Sound passes through four states before emerging in its audible state.  They are para, pashyanthi, madhyama and vaikhari. Para represents the state of turiya, the pashyanthi- the sushupti or deep sleep state, the madhyama the svapna or dream state and vaikhari the jagrat or wakeful state.

Pranava or aum consists of the four parts, a, u, a state of sound representing ma (the im) and a state beyond that sound.  The state beyond the sound represents para or the state of consciousness, the turiya state.  This occurs at the navel, the site of turiya state. 

The sound, “im” that occurs at the terminus of audible pranava leads to the para state.  It represents the deep sleep state, the sushupti state which occurs at the heart. The a and u represent the vaikhari and madhyama respectively. 

Hence, Subramanyar is telling Agatthiyar to go the the silence by remaining firmly in the sound “im”. This soud is called “oomai ezhutthu” or the dumb letter, the unuttered letter.

When one looks at the word “mavunam” an interesting interpretation emerges.  This word is traditionally interpreted as “silence”.  If one looks at it carefully it may mean the “ma becoming u” the manifested becoming pure energy- ma oo aavadhu or dissolution of the manifested material universe and becoming pure energy which will ultimately become pure consciousness.  Subramanyar is saying that people die without knowing this secret.  People think that “mavuna yogam” means not talking and they lose their lives wrongly pursuing it.  It will not lead them to the state of realization. 
This silence is the singular state, the origin of everything, the para, the kula devatha.

இப்பாடலில் குறிப்பிடப்படும் மவுனம் பிரணவத்தின் முடிவில் இருக்கும் மௌனமாகும்.  பரா, பஷ்யந்தி, மத்யமா மற்றும் வைகரி என்று சப்தம் நான்கு வகைப்படும்.  இவற்றில் பரா என்பது துரிய நிலையைக் குறிக்கும்.  இந்த நிலை மணிபூரக சக்கரத்தில் ஏற்படும் தூய விழிப்புணர்வு நிலை. இதனை அடுத்து உள்ளது பஷ்யந்தி அல்லது சக்தி நிலை. இது மனதில் ஏற்படுகிறது.  இது ஆழ் உரக்க நிலையைக் குறிக்கிறது.  இதனை அடுத்து வருவது மத்யமா.  தொண்டையில் ஏற்படும் இந்த நிலை கனவு நிலையைக் குறிக்கிறது.  இது என்ன பேசுவது என்ற எண்ணம் ஏற்படும் நிலை.  இதனை அடுத்து உள்ளது வைகரி.  இதுவே நாம் காதால் கேட்கும் சப்த நிலை.  இது விழிப்புநிலையைக் குறிக்கும்.

பிரணவம் அல்லது ஓம் என்பது இந்த நான்கு சப்த நிலையைகளையும் குறிக்கும்.  அ, உ என்பவை வைகரி, மத்யமா நிலைகளையும், ம் என்று கடைசியில் வருவது பஷ்யந்தி நிலையையும் அதனைத் தொடரும் மௌனம் பரா நிலையையும் குறிக்கும்.
இவ்வாறு “ம்” என்னும் ஊமை எழுத்து, ஒரு சொல்லாக இல்லாத சப்தமாக மட்டுமே இருக்கும் எழுத்து அதனை அடுத்து உள்ள பரா நிலைக்கு அழைத்துச் செல்கிறது.  அதனால்தான் சுப்பிரமணியர் அகத்தியரை “இம்” என்பதில் உறுதியாக நின்று இந்த மௌன நிலையை அடையுமாறு, துரிய நிலையை அடையுமாறு கூறுகிறார்.  ஒரு சொல்லாக இல்லாமல் சப்தமாக இருப்பதால் “இம்” என்பது ஊமை எழுத்து எனப்படுகிறது.  இதை அறியாத மக்கள் மவுன யோகம் என்பது வாய் பேசாமல் இருப்பது என்று எண்ணுகின்றனர் என்கிறார் சுப்பிரமணியர்.

மவுன யோகம் என்ற சொல்லை ஆராய்ந்தால் ஒரு சுவையான பொருள் வெளிப்படுகிறது. மவுனம் என்பதை பொதுவாக பேசாமல் இருப்பது என்கிறோம்.  அது “ம உ ஆகும் நிலை” அதாவது பருப்பொருளான தோற்றத்தைப் பெற்ற இவ்வுலகம், தூய சக்தியாக உ வாக மாறுவது என்றும் பொருள்படுகிறது.

இந்த மௌனம் சப்தமற்ற பரா நிலையே பராபரத்தை, குலகுன்டலினி, குல தெய்வத்தை உணரச் செய்கிறது.  

10. Instructions for Agatthiyar continued

Verse 10
விளையாடப் பூரணத்தை அறியச் சொன்னேன்
வீணான மாயைகளை மறக்கச் சொன்னேன்
குலையான குல தெய்வ மறியச் சொன்னேன்
குண்டலியாம் வட்டமதன் கூறுஞ் சொன்னேன்
மலையாமல் வெறுவாயை மென்றிடாமல்
மனதுறுதி யாகவும் நீ கவனம் வைத்துக்
கலையான பூரணத்திற் கலந்து நீயுங்
காவலர்களை வரையு மொன்றாய்ச் சேரே

Translation:
I told you about the fully complete so that you may play
I told you to forget the wasteful maya
I told you to know about the deity of kula, (the kula kundalini)
I told you about the nature of the circle of kundalini
Without getting stunned, without wasting time on empty speech,
With a firm heart, you maintain focus
Merge with the fully complete, the kalaa
And join the guardians and the mountains.

Commentary:
Subramanyar is telling Agatthiyar that he told them all the above so that he will know about the “poornam” or the fully complete.  This is a state, not an entity even though the Divine is called Poornam.  Subramanyar told Agatthiyar to forget the different maya- the five types, aanava, karma, maya, mayeeya and thirodaya.  Kulai means one who is the kula.  It means kundalini who is also called kula kundalini.   Subramanyar tells Agatthiyar that he told him about the circle of kundalini.  It may mean what the three circles of the kundalini stand for.  It may also mean the circle or the path that kundalini traverses- from muladhara to sahasrara and back.  It may also mean the circle at the sahasrara.  The siddhas refer to this as the vindhu vattam.  Subramanyar tells Agatthiyar that he should not get stunned by the magnitude of this task, not waste time in empty chatting but with fortitude should merge with the poornam, the supreme state.  He should bring together the deities who are guardians of a particular cakra and the cakras themselves into a state of oneness.


தான் அகத்தியருக்கு இதுவரை கூறியவை அனைத்தும் அவர் பூரணத்தை அறிவதற்காக என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.   பூரணம் என்பது ஒரு பொருளல்ல, அது ஒரு நிலை.  ஐவகையான மாயையை-ஆணவம், கர்மம், மாயை, மாயாதீதம், திரோதயம் ஆகியவற்றை மறந்து குலையை அறிய வேண்டும் என்கிறார். குலை என்பது குலத்துக்கு அதிபதி, குண்டலினி.  அவள் குல குண்டலினி எனப்படுகிறாள்.  சுப்பிரமணியர் தான் அகத்தியருக்கு குண்டலி வட்டத்தைப் பற்றிக் கூறியதாகச் சொல்கிறார்.  குண்டலினி மூலாதாரத்திலிருந்து சஹாஸ்ராரத்துக்குச் சென்று மீண்டும் மூலாதாரத்துக்குத் திரும்புவதைக் குறிக்கிறார் போலும்.  சஹாஸ்ரார சக்கரமும் வட்ட வடிவில் உள்ளது.  இதையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.  சித்தர்கள் சஹஸ்ராரத்தை விந்து வட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.  அகத்தியர் குண்டலினி யோகம் எவ்வளவு கடினமானது என்று மலைக்கக் கூடாது, அதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசக்கூடாது, மனவுறுதியுடன் ஒருமனதாக இதை அடையவேண்டும், பூரனத்துடன் கூடவேண்டும்.  உச்சமான கலையை அடைய வேண்டும் என்கிறார்.  கலை என்பது ஜீவாத்மாவை அளவுக்குட்பட்டதாக எண்ணவைக்கும் மும்மலங்கலான ஆணவம், கர்மம் மாயையின் செயல்கள்.  இந்த மூன்றில் எத்தனை மலங்கள் செயல்படுகின்றன என்பதை பொருத்து ஜீவன்கள் சகலர், பிரளயகலர், விஞ்ஞானகலர், மெய்ஞ்ஞானர் என்று அழைக்கப்படுகின்றனர் என்று பார்த்தோம்.  சுப்பிரமணியர் அகத்தியரை வரிகளையும் காவலர்களையும் ஒன்றாக்குமாறு கூறுகிறார்.  ஒவ்வொரு சக்கரத்துக்கும் ஒரு அதிபதி தெய்வம், காவல் தெய்வம் உள்ளது,  அந்த சக்கரங்கள் வரைகள் அல்லது மலைகள் என்று அழைக்கப்படுகின்றன.  அதை ஏறிக் கடக்கும் ஜீவன் குறிப்பிட்ட தத்துவங்களைத் தாண்டுகிறார் என்று பார்த்தோம்.

Saturday, 30 August 2014

9. Subramanyar's instructions for Agatthiyar

Verse 9
கொள்ளடா சுழினையிலே மனக்கண் நாட்டிக்
கோளான கருவிகளைக் கூர்ந்தே தள்ளி
அள்ளடா அங்கெனடிப் படையைக் காட்டி
ஆதாரம் ஆறுமே யேகமென்று
நள்ளடா சுழிக்காற்றில் அலைந்திடாமல்
நாற்பத்து முக்கோண நடுவே சென்று
விள்ளடா வில் விசையிலுண்டையேற்றி
வெற்றி மயிலேறி விளையாடுவாயே.

Translation:
Attain it, by firmly planning the mental eye at the terminus of the whorl
Pushing the sense organs decimating them
Showing the basis, saying collect it
All the six supports as one
Reach it without being buffeted by the gail
Going to the center of the forty triangles
Split it by placing the ball in the cannon
You will play climbing over the victorious peacock.

Commentary:
These are Subramanyar’s instructions to Agatthiyar: he should ascend through the sushumna by placing his mental eye, or concentration at the terminus of the whorl, the ajna.  The senses should be decimated before that.  This means, sensual perception should be replaced with mental perception.  He should merge the six cakras, or the assimilation of principles, into one.  When the muladhara cakra is crossed the earth principle and the tattva that this cakra represents merge with the svadhistana.  In this fashion all the cakras are merged into one.  Agatthiyar should do this without wasting his breath, without letting his self get buffeted by the gust of wind or the prana.  He should go to the center or the bindu in the forty triangles.  This indicates the SriCakra.  It is a graphical representation of the microcosm, the human body and the macrocosm, the universe.  The bindu or the point in the middle represents the origin, the unmanifested state, the state that a yogin strives to reach.  Agatthiyar should split the bindu or go beyond it with force as if firing a cannon.  He should ride the peacock, control the distractions victoriously.


சுப்பிரமணியர் அகத்தியருக்குக் கொடுக்கும் கட்டளைகள்: அவர் தனது மனக்கண்ணை, கவனத்தை உறுதியாக நாட்டி சுழி முனைக்கு ஏறவேண்டும்.  இதற்கு முன் கருவிகள் அல்லது புலன்கள் அழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அவை மாயையால் குழப்பிவிடும்.  அவர் ஆறு ஆதரங்களையும் சக்கரங்களையும் ஒன்றாக்கி அவற்றை ஒன்று அடுத்ததில் சேரவைத்து அந்த உணர்வு நிலைகளை ஒன்றாக்கவேண்டும்.  இதை அவர் ஊழிக் காற்றான பிராணனில் தான் அலையாமல், அதன் போக்கைக் கட்டுப்படுத்தி நிகழ்த்த வேண்டும்.  அதன் பிறகு அவர் நாற்பது முக்கோணத்தின் நடுவில் செல்ல வேண்டும். நாற்பது முக்கோணம் என்பது ஸ்ரீ சக்கரத்தைக் குறிக்கும்.  அது அண்டம் அல்லது பிரபஞ்சம் மற்றும் பிண்டம், மனித உடல், ஆகிய இரண்டின் வரைபடமாகும்.  அதன் மத்தியில் இருப்பது பிந்து அல்லது புள்ளி.  இது வெளிப்பாடற்ற ஒருமை நிலை ஆதி நிலையைக் குறிக்கும்.  இந்த நிலையையும் அகத்தியர் விசையுடன் ஒரு உண்டையை விசையில் வைத்துச் செலுத்துவதைப் போல அதைப் பிளந்து செல்லவேண்டும்.  அது பரவெளியுடன் கலப்பதாகும்.  இவையனைத்தையும் அகத்தியர் வெற்றி மயிலின் மீது ஏற்றி நடத்த வேண்டும், விளையாடவேண்டும்.  இதைத்தான் முருகனின் “ஏறு மயிலேறி விளையாடும் முகம்” என்று அழைக்கிறார்களோ!

Friday, 29 August 2014

8. Kundalini is the origin of everything

Verse 8
பாரப்பா குண்டலியும் வேறே என்பான்
பதிவான சுழிமுனையை அறிய மாட்டான்
ஆரப்பா பூரண குண்டலியாமென்றும்
அண்டமென்றும் பிண்டமென்றும் அறியமாட்டான்
நேரப்பா பூரணமாங் கலை நாலாகி
நிஷ்டை யொடு சமாதியுநிஷ் களமுமாகி
காரப்பா அமுதமதைஉண்டு தேறிக்
கருத்துடனே சிவ யோகங் கண்டு கொள்ளே

Translation:
See son, he will say kundalini is something else
He will not know about the terminus of the whorl
He will not know who is the fully complete kundali
He will not that it is the limited space and universal space
Becoming the fully complete kalaa of four
Along with austerities, Samadhi and absence of faults
Contemplate son consuming the nectar and realizing
See Siva yoga with attention.

Commentary:
Subramanyar is saying that an ignorant person will not realize that it is the kundalini or the life force which the origin of everything. He will not know the terminus of the whorl.  Suzhimunai in Tamil means the terminus of the sushi or the whorl.  The whorl is kundalini.  The terminus is the point where it ends.  The chakras at various positions in the body are termini or centers where a certain distinction created by a particular fault, mala, ends.  When a yogin’s consciousness crosses a particular chakra one such distinction ends.  When the consciousness reaches the ajna gradually all the distinctions that appear as the manifested world, the distinctions caused by elements, their qualities etc are all assimilated.  Only pure soul consciousness remains.  Hence, the ajna is called the suzhimunai.  Beyond the ajna the limited consciousness also leaves and the soul realizes its universality.  Thus, the concept of “andam” or the supreme space and “pindam” the body or the limited space are all caused by the ascendance or descendance of kundalini.
When it travels from the muladhara to sahasrara andam is created and when it descends from sahasrara to muladhara pindam is created. Thus, kundalini is the origin of this body and the universe.
Kalaa are the distinct states caused by the three faults aanava, karma and maya.  The souls in the different states depending on the type and the number of these faults operating are sakala, pralayakala, vijnanakala and meijnana.  In sakala all the three faults are operating, their number decreases to nil in meijnana.
During ashtanga yoga the austerities and the practices help the soul to move from one state to the next until they become the meijnana.  At this stage the yogin consumes the Divine nectar that pours down from the sahasrara and becomes ageless and deathless.  He becomes one with the universal consciousness.  This is the crux of Siva yoga.  Subramanyar tells Agatthiyar to realize that the basis for all these is kundali.

அறிவற்றவன் குண்டலினிதான் அனைத்துக்கும் மூலம் என்பதை உணரமாட்டான் என்று சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார்.  சுழிமுனை என்பது சுழியின் முனை.  உடலில் உள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சில தத்துவ நிலைகளின் முடிவையும் குறிக்கும்.  ஒரு யோகி தனது விழிப்புணர்வை ஒரு சக்கரத்தைக் கடக்க வைக்கும்போது அந்த தத்துவம் அவரது விழிப்புணர்வு நிலையில் ஒன்றிவிடுகிறது.  அவரது விழிப்புணர்வு ஆக்ஞாவை அடையும்போது பிரகிருதியால் உருவாக்கப்பட்ட எல்லா தத்துவங்களும் ஒன்றி தூய ஆத்ம நிலை ஏற்படுகிறது.  அதனால் ஆக்ஞா சுழியின் முனை எனப்படுகிறது.  ஆக்னாவுக்கு மேல் அந்த வேறுபாடும் விலகி பரவுணர்வு நிலை ஏற்படுகிறது.  இது குண்டலி மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்தை அடையும்போது ஏற்படுகிறது.  இந்நிலையில் அண்டம் மட்டுமே உள்ளது.  குண்டலி மீண்டு மேலிருந்து மூலாதாரத்தை அடையும்போது பிண்டம் அல்லது அளவுக்குட்பட்ட நிலை ஏற்படுகிறது.  இவ்வாறு அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் காரணம் குண்டலியே.

கலா என்பது ஆணவம் கர்மம் மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் நிலைகள்.  இந்த மலங்களில் எவை செயல்படுகின்றன என்பதைப் பொருத்து உயிர்கள் சகலா, பிரளயகலா, விஞ்ஞான கலா, மற்றும் மெய்ஞ்ஞானர் என்று அழைக்கப்படுகின்றனர்.  இவ்வாறு மூன்று மலங்களை உடைய சகல நிலையிலிருந்து பூரணமான மெய்ஞ்ஞான நிலையை ஒரு யோகி நிஷ்டைகளாலும் சமாதியாலும் தன்னிடம் இருக்கும் களங்கங்களை விலக்கி அடைகிறார்.  அப்போது சஹாஸ்ராரத்திலிருந்து கீழே இறங்கும் அமுதத்தை உண்டு காலத்தின் எல்லையையும் கடக்கிறார்.  இதுவே சிவ யோகம்.  இவையனைத்துக்கும் மூலம் குண்டலி என்பதைப் பார்க்குமாறு சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார். 

Thursday, 28 August 2014

7. Subramanyar talks about "moolam"

Verse 7
தானென்ற மூலமதைச் சாற்றக் கேளு
சந்திரன்தன் மண்டலத்துக் கடுக்கவேறி
கோனென்ற பச்சைநிற வழியுமாகிக்
குருவான பஞ்சகர்த்தா மாயைதோன்ற
வானென்ற வானிலொரு இடியுங் காற்றும்
வந்ததடா தந்தையுட விந்துமாகிக்
கோனென்ற பாசமொடு பார்வை திஷ்டி
கொடுத்தவனாம் மூலக் குண்டலியாம் பாரே.

Translation:
Listen to me saying about the moolam (origin/muladhara)
Climbing to the realm of the moon with pain
Becoming the king, the green way,
With the guru, the five types of maya appearing
In the sky where the thunder and wind appear
The semen of the father coming (down)
With the king, the attachment, the sight, the vision,
The one who gave it, the mula kundali, see it.

Commentary:
Subramanyar tells Agatthiyar that he is going to be talking about the moolam.  The moolam means both the muladhara and the originThe muladhara is the primary point of support.  The power of kundalini remains inactive there unless it is woken up from its slumber by practices.  It climbs through the various cakras or energy termini in the body and reaches the realm of the moon which is at the sahasrara and beyond.  This process hurts the eye and the body as a whole as it is a very austere and powerful process.  Many Siddhas have used the expression ‘pacchi’ to describe this path.  This term means ‘verdant’.  It is not clear if it is called so because it is rich with experiences or whether there is any other significance in it.  Subramanyar calls this path as the royal path. 

The five types of maya are the aanava, karma, maya, mayeeya and tirodaya.  These five types maya keep the soul ignorant of its true natureWhen they leave the soul at the guru cakra the soul realizes its true nature.   

Next Subramanyar is talking about thunder, wind and the father’s semen.  Scriptures say that the soul, after death of a physical form, is present in the subtle form in the sky.  It is brought down to the earth through the thunder, winds and rain shower.  The rain water feeds the plants that are consumed by the lives on earth.  A part of the food turns into semen in the man.  The soul which is embedded in the semen is brought into a womb through physical contact where it grows and emerges as a gross physical being into this world.  This occurs by the benevolent grace of the Divine who grants a physical body to the soul so that it can work out its karma.  Not only does the Divine bless its occurrence, it also accompanies the soul and remains in the body as the mulakundali or the vital force at the muladhara.  It is the force that makes life forms function.  Kundalini is needed not only for spiritual evolution but for physical evolution as well.

அகத்தியரிடம் சுப்பிரமணியர் தான் அடுத்து மூலத்தைப் பற்றிப் பேசப்போவதாகக் கூறுகிறார்.  மூலம் என்ற சொல் மூலாதாரத்தையும் அனைத்தையும் தோன்றச் செய்யும் மூலத்தையும் குறிக்கும்.  உடலில் மூலாதாரம் அனைத்தையும் தாங்கும் புள்ளி.  அங்கேதான் குண்டலினி, யோகத்தினால் எழுப்பப்படும்வரை தனது செயலற்ற நிலையில் இருக்கிறது.  அங்கிருந்து விழித்தெழும் குண்டலினி சக்கரங்கள் அல்லது சக்தி மையங்களின் ஊடே பாய்ந்து சஹஸ்ராரத்தை அடைகிறது.  சஹாஸ்ராரத்துக்கு மேலே இருக்கும் இடம் சந்திர மண்டலமாகும்.  இந்த செயல் மிகக் கடுமையான ஒன்று கண்ணில் வலி உடலில்  மாற்றங்கள் என்று பல துன்பங்களை ஏற்படுத்துவது.  இவையனைத்தையும் தாங்கக் கூடிய மனவலிமை பெற்றவரால்தான் இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும். 

குண்டலினியின் பாதை பச்சை என்கிறார் சுப்பிரமணியர்.  சித்தர்கள் பலர் இவ்வாறு கூறியுள்ளனர்.  பச்சை என்பது பசுமையான, பல காட்சிகளையும் பயன்களையும் கொடுக்கும் பாதை என்பதாலா அல்லது அதற்கு வேறு பொருள் உள்ளதா என்று தெரியவில்லை.  இந்தப் பாதை ராஜா அல்லது கோன் என்கிறார் சுப்பிரமணியர்.
இதனை அடுத்து சுப்பிரமணியர் பிறப்பின் மூலத்தைப் பற்றிப் பேசுகிறார்.  ஐவகை மாயைகள் ஆணவம், கர்மம், மாயை, மாயீயம், திரோதயம் என்பவையாகும்.  இவை ஐந்துமே ஒரு ஜீவனை தனது உண்மை நிலையை மறக்கச் செய்கின்றன.  இவை குரு சக்கரத்தில் விலகும்போது உண்மை நிலை உணரப்படுகிறது. 


அடுத்து, சுப்பிரமணியர் இடி, காற்று, தந்தையின் விந்து ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார்.  மேலே கூறிய ஐவித மாயையால் உயிர்கள் உலகில் தோன்றுகின்றன.  இறப்பின்போது ஸ்தூல உடலை நீக்கும் உயிர்கள் சூட்சும உடலுடன் ஆகாய வெளியில் இருக்கின்றன.  அவை, இடி, மின்னல், காற்று, மழை ஏற்படும்போது மழை நீருடன் அவை பூமியை அடைகின்றன.  அந்த மழை நீர் பயிர்களுக்கு உயிரூட்டும்போது உயிர்கள் அங்கே தங்குகின்றன.  அந்த உணவுப் பொருட்களை உயிர்கள் உண்ணும்போது அவை ஒரு உடலினுள் புகுந்து ஆணின் விந்துவாகின்றன.  அந்த விந்து ஒரு கருவறையை அடையும்போது ஒரு ஸ்தூல உருவைப் பெற்று ஒரு உயிராக உலகினுள் வெளிவருகிறது. இதுதான் உயிர்களின் தோற்றக் கிரமம் என்று பழம் நூல்கள் கூறுகின்றன.  இதைத்தான் இங்கே சுப்பிரமணியரும் கூறுகிறார்.  இவ்வாறு ஒரு உயிர் தோன்றுவது இறைவனின் அருட்பார்வையால்தான். ஏனெனில் ஒரு ஸ்தூல உடலைப் பெறுவது ஒரு பாக்கியம், அந்த உருவில்தான் ஜீவன்கள் தமது கர்ம மூட்டையைக் கரைக்கின்றன.  இறைவன் உயிர்களுக்கு தனது அருட்பார்வையை மட்டும் அளிப்பதில்லை தானும் அவற்றுடன் மூல குண்டலி என்ற அக்னியாக உடலினுள் புகுகிறான்.  ஆன்மீக வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து அக்னிக்கும் மூல காரணம் குண்டலினி தான்.  உடலில் அக்னி இல்லாவிட்டால் அது சவம்தான்.  

Wednesday, 27 August 2014

6. Subramanyar's spear, peacock and surasamhara explained

Verse 6
கேளடா சரிதையொடு கிரிகை யோகம்
கிருபையுடன் ஞானமெல்லாம் வெளியாய்ப் பாடி
வாழடா வாழ்வதற்கு வகையுங் காட்டி
வாடாத தீபமதை அறிந்தே ஏற்றித்
தேளடா தேட கொடுக்காங் குல தெய்வந்தான்
சீவநிலை சிவ நிலையும் அதுவேயாகிக்
கோளடா வசுரர்களைக் குலைத்துவிட்டேன்
குவலயத்தில் வாசி மயிலேறித்தானே

Translation:
Listen son, along with charya, kriya, yoga
Singing the jnana also explicitly
Showing the way to live
Lighting, with knowledge, the lamp that never withers
Like the sting of the scorpion, the deity of kula
The state of Jiva, Siva and becoming verily that
I destroyed the asuras
In the world, by alighting the peacock, the vaasi

Commentary:
Subramanyar is explaining several important concepts in this verse.  First he says that he will be speaking explicitly about charya, kriya, yoga and jnana.  These are the four steps for realizations.  The traditions that follow agama lay great stress on these four steps as opposed to traditions that follow Veda.  We will see about these steps in detail when Subramanyar describes them later.  Suffice to say here that charya refers to external rituals, kriya to internal rituals, yoga refers to ashtanga yoga and these three culminate in jnana or wisdom. 

The lamp that never withers is the lamp of knowledge. It is the lamp of the Self, the consciousness which once lighted will never die out.  This lamp could be lighted with knowledge. 

Subramanyar talks about two concepts in the line where he says like the sting of the scorpion and the deity of kula.  Kula refers to kundalini, kula kundalini.  It is also called kaula marga. Ascendance of kundalini is said to be like the sting of a scorpion or snake. 

The state of Jiva and Siva the limited and universal consciousness will be described in this composition in addition to showing the way in which the Jiva becomes Siva.
Next two lines are very interesting.  Subramanyar tells Agatthiyar that he destroyed the asuras in this world by climbing on his peacock, the vaasi.  First, let us who these asuras are. 

Vallalar explains who these suras are.  Padmasura is craving.  Gajamukhan is madness or madham.  Singamugan is moha or desire.  These three asuras should be won by Shanmukhan, the sixth sense or the sense of discrimination, the Vel or spear, with the help of five sakthis, suddha jnana and suddha kriya. This is Murugan’s Sura samharam.  The peacock is the vital breath or vaasi.  Even if the above qualities are killed the vaasana or preconditioning lingers.  Whenever the occasion arises, it spreads its plume and dances like the peacock.  It enchants us by its illusory beauty and keeps us tied in it.  Remaining on top of this vaasana is Murugan/discrimination keeping them under its control.  The vikalpa jaalam in the universe is the peacock.  In the middle of the brow there is a flame in the shape of six sided jewel.  This effulgence is shanmukham. 

In this context it should be mentioned that Murugan’s dhandayudam or the weapon, stick is none other than the sushumna nadi through which the vital breath and the kundalini sakthi ascends.

சுப்பிரமணியர் இப்பாடலில் பல முக்கியக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.  முதலில் அவர் தான் இப்பாடல் தொகுப்பில் சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசப்போவதாகக் கூறுகிறார்.  ஆகமத்தை முக்கியமாகக் கருதும் தந்திர மார்க்கம் இந்த நான்கையும் முக்தியைப் பெரும் வழிகளாகக் கருதுகிறது.  சரியை என்பது கோவிலுக்குப் போவது விளக்கேற்றுவது போன்ற காரியங்களைச் செய்து வெளியில் இறைவனிடம் பக்தி செலுத்துவது.  கிரியை என்பது மனதுள் இடைவிடாமல் இறைவனிடம் அன்பு செலுத்துவது.  யோகம் என்பது அஷ்டாங்க யோகம்.  அதன் முடிவில் பெறுவது ஞானம். 

என்றும் அழியாமல் இருக்கும் விளக்கு ஆத்ம ஜோதி.  அது ஞான ஜோதி, அறிவால் ஏற்படுவது.

சுப்பிரமணியர் மேலும் இரு விஷயங்களை அடுத்து கூறுகிறார்.  அவை தேளின் கொடுக்கு குல தெய்வம் என்பவை.  குண்டலினி மேலே எழும்பும்போது அது பாம்பின் கொத்தலைப் போல தேளின் கொட்டலைப்போல இருக்கும் என்று கூறுவர்.  குல தெய்வம் என்பது குண்டலினி, அவள் மேலே ஏறும்போது குல குண்டலினி என்று அழைக்கப்படுகிறாள்.  இந்த மார்க்கம் கௌள மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

சுப்பிரமணியர் ஜீவ நிலை, சிவ நிலை எவ்வாறு ஜீவன் சிவமாகும் என்பதைப் பற்றி இங்கே விளக்கப்போவதாகவும் கூறுகிறார். 
இதனை அடுத்து வரும் இருவரிகள் மிக முக்கியமானவை.  முருகனின் வேலையும் மயிலையும் சூரசம்ஹாரத்தையும் விளக்குபவை.
இந்த அசுரர்கள் யார் என்று வள்ளலார் விளக்குகிறார்.  பத்மாசுரன் என்பது அவா, கஜமுகன் என்பது மதம், சிங்கமுகன் என்பது மோகம்.  இந்த மூன்றையும் ஐந்தறிவால் வெல்ல முடியாது.  ஆறாவது அறிவு அல்லது பகுத்தறிவு அல்லது கூர்மையான வேலால் ஐந்து சக்திகள் சுத்த ஞானம், சுத்த கிரியா ஆகியவற்றின் உதவியுடன் வெல்லவேண்டும்.  மயில் என்பது வாசி.  மேற்கூறிய மூன்று குணங்களும் அழிக்கப்பட்டாலும் அவற்றின் வாசனை அல்லது சுவடு எளிதில் நீங்குவதில்லை.  அந்த வாசனை சமயம் கிடைக்கும்போது மயில் தோகையை விரித்து ஆடுவதைப் போல பரந்து விரிகிறது.  தனது அழகால் தோகை நம்மை மயக்குவதைப் போல நம்மை மதியிழக்கச் செய்கிறது.  இந்த மயிலின்மேல் முருகன் இருப்பது என்பது பகுத்தறிவு இந்த வாசனை அல்லது விகல்ப ஜாலத்தைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது.  நமது ஆக்னையில் ஒரு ஆறு பட்டையான மணி ஒளிவிட்டுக்கொண்டு இருக்கிறது.  இந்த ஜோதியே ஷண்முகன்.


இந்த இடத்தில் நாம் முருகனின் தண்டாயுதம் என்றால் என்ன என்றும் பார்க்கவேண்டும்.  தண்டம் என்பது குண்டலினி சக்தி ஏறும் சுழுமுனை நாடி.  அது முருகன் அல்லது பரவுணர்வின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அதைத் தான் தண்டாயுதபாணி, வேலன் காட்டுகிறான். 

Tuesday, 26 August 2014

5. He will die without seeing the essence

Verse 5
தாமடா வாய் ஞானம் பேசிப் பேசிச்
சாவதற்குக் கல்வியெல்லாம் அறிந்தேன் என்பான்
காமடா காமப் பேய் பிடித்துக்கொண்டு
கருத்தழிந்து போவதல்லால் கருவைப் பாரான்
ஓமடா உடலிறந்து போவதல்லால்
உண்மையென்று தானறியான் உறுதி பாரான்
வாமடா வெறி நீரைக் குடித்துப் பாவி
வகை கெட்டு அலையாமல் வகைதான் கேளே

Translation:
Speaking only verbal wisdom
To die, He will say he knows all the knowledge.
With the ghost of desire possessing him
He will not see the essence; he will only lose his mind
Yes, son, other than the body dying
He will not know that he is the truth, he will not be firm.
Drinking the liquid that causes violence, the sinner,
Without roaming being completely destroyed, listen to the way.

Commentary:
Subramanyar is continuing the previous verse where he describes a conceited soul.  That person, the one who claims wisdom as he possesses textual knowledge will be taken over by desire which will lead to his utter destruction.  He will spend the time to look at the essence of everything including his textual knowledge.  The essence of all the knowledge systems in the world, the terminus of Veda-that which should be known, the Vedanta, is nothing but the Divine.  Without knowing this or remaining firm in this thought the cheat will die or lose his mind drinking the liquid that causes only violence.  As a preliminary to the last but one sentence where he talks about this liquid Subramanyar says “vaamadaa”.  One wonders if he is referring to the vama marga which prescribes the five Ms or the meat, wine, physical union, fish and parched grain.  He may be referring to the wine that is part of the ritual in this stream of tantric practices. 


தான் முந்தைய பாடலில் கூறியதை இப்பாடலிலும் தொடருகிறார் சுப்பிரமணியர்.  வாய் ஜாலத்தால் ஞானியைப் போல தோற்றமளிக்கும் ஒருவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அவர், அந்த மனிதனை காமப் பேய் பிடித்து ஆட்டும், அவன் தனது மனதை இழந்து, கருவைக் காணாமல் இறந்து போவான் என்கிறார்.  எல்லாவற்றிற்கும், அறிவு உட்பட, உள்ளுரைப் பொருளாக இருப்பவன் இறைவனே.  அவனை அறியாமல் வாய்பெசித் திரியும் மக்கள் முடிவில் உடலிறந்து அழிந்து போவர்.  கருவைக் காண்பவன் குருவைக் கண்டு முடிவில் இறைவனைக் காண்பான்.  மற்றவர் வெறிநீர் குடித்து அழிந்து போவர் என்கிறார் சுப்பிரமணியர்.  வெறி நீர் என்பதற்கு முன் அவர் வாமடா என்கிறார்.  ஒருவேளை அவர் மது, மாமிசம், மைத்துனம், மச்சம், முத்ரா அல்லது தானியம் என்ற ஐந்தையும் பயன்படுத்தப் பரிந்துரைக்கும் வாம மார்க்கத்தைக் குறிக்கிறாரோ என்று தோன்றுகிறது.  அங்குதான் வெறிநீர் அல்லது மது சடங்குகளில் இடம் பெறுகிறது. 

Monday, 25 August 2014

4. A verbal jnani

Verse 4
தானென்ற வழியறியான் இடமும் காணான்
தன்னுயிரைத் தானென்று போற்றமாட்டான்
வானென்ற பொழியுமந்த அமுதம் சாரான்
வாடாத மணிவிளக்கை அறிய மாட்டான்
தேனென்ற திரை ஏழை அறுக்க மாட்டான்
தேக சித்தி மாய சித்தி செய்ய மாட்டான்
கோனென்ற குருபாதம் அடுக்க மாட்டான்
கூறுவான் வாய்ப் பேச்சால் ஞானந்தாமே

Translation:
He will not know the way, his Self, he will not see the locus also
He will not nurture his soul as his Self
He will not abide by the divine nectar that flows as the sky
He will not know the jewel, the lamp that never diminishes
He will not cut the seven curtains
He will not attain the control of his body or the maya
He will not approach the king, the sacred feet/locus of the preceptor
He will only speak, his wisdom is only verbal.

Commentary:
Subramanyar is talking about a deceitful soul who claims to be a realized soul displaying his verbal prowess.    He will not be experiencing his soul or atma darsanam is the path for liberation.  Atma unarvu or experience of the soul, leads to para vunarvu or divine experience.  The nectar mentioned here is the fluid that descends from the sahasrara for an expert yogin.  It is said to confer immortality.  The “mani vilakku” means the effulgent gem.  The Siddhas call the Divine as mani.  This may mean a jewel, a special lamp or a jewel that glows like a lamp.  May be it is what our ancestors refer to as the chintamani!

The seven screens are the limitations that prevent a soul from realizing its unlimited eternal nature.  The first five screens are the five sensual experiences- touch, taste, smell, sound and sight.  The sixth is the sense of discrimination due to the mind the anthakarana.  The seventh is the soul, in its self imposed limited state.  When all these seven screens are cut away the soul realizes its universality.  Vallar describes these screens by assigning specific colors for them.  The black screen is that of maya.  The blue screen-kriya sakti, green screen-parasakthi, red- iccha sakti, golden- jnana sakti, white- adi sakthi and the rainbow screen- chith sakti.  These are the forces that cause manifestation and hence, the sense of limitation.  When the soul crosses these screens it reaches the state of the Divine, the undifferentiated state.

Control of the body is deha siddhi.  Siddhas recommend specific mantra, herbal preparations and techniques to transform the body from its material status to that of light.  Maya siddhi is bringing maya under control.  These are techniques involving the mind.  Gurupaadam is the sacred feet of the Guru. Paadam also means part.  Then guru paadam means the role of the Divine as the guru.  It is a part because the Divine is the guru and much more.  The author of the Tamil commentary has quoted verses 8,9,11,13, 15 of Vallar’s Tiruvarutpa and several other verses to describe the term paadam.

The person described in this verse is not a truly realized soul.  He only pretends so through his impressive words.  He possesses mere textual knowledge not real experience.
சுப்பிரமணியர் உண்மையில் ஞானம் பெறாத ஒரு மனிதனைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார்.  அந்த மனிதர் ஞானம் பெறுவதற்கு வழியான தான் என்னும் தனது ஆத்மாவை அறியமாட்டார்.  ஆத்மா தரிசனத்தைப் பெற்றிருக்க மாட்டார்.  ஆத்ம உணர்வே முடிவில் பரவுணர்வைக் கொடுக்கும்.  இப்பாடலில் குறிப்பிடும் அமிர்தம் யோக சாதனையின் உச்சத்தில் சஹாஸ்ராரத்திலிருந்து கீழே இறங்கும் பானத்தைக் குறிக்கும்.  அது ஒருவருக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தரும்.  மணி விளக்கு என்று இப்பாடலில் குறிப்பிடப்படுவது ஆத்ம ஜோதியாக இருக்கலாம் அல்லது இறைமையான பரஞ்சோதியாக இருக்கலாம். மணி என்பது ஒரு இரத்தினம் போன்ற கல்லாகவோ, ஒரு விளக்காகவோ அல்லது விளக்கைப் போல ஒளிவிடும் மணியாகவோ இருக்கலாம்.  இதைத்தான் நம் முன்னோர் சிந்தாமணி என்கிறார்களோ என்னவோ!    
இப்பாடலில் குறிப்பிடப்படும் ஏழு திரைகள் ஆத்மாவைத் தனது உண்மை நிலையை அறிவதிலிருந்து தடுக்கும் திரைகளாகும்.  முதல் ஐந்து திரைகள் ஐம்புலன்களால் பெரும் உணர்வுகள்.  ஆறாம் திரை புத்தியினால் தோன்றும் பகுத்துணர்வு.  ஏழாவது திரை நமது ஆத்மா, தான் அளவுக்குட்பட்டது என்று எண்ணுவது.  இவையனைத்தையும் கடந்தால் தனது எல்லையற்ற தன்மையை ஆத்மா உணருகிறது.  வள்ளலார் இதைத்தான் ஏழு நிறமுள்ள திரைகலாகக் காட்டி அவற்றைக் கடந்தால் ஜோதி தரிசனம் கிட்டுகிறது என்று கூறினார்.  அவர் கூறிய ஏழு திரைகளாவன: கருப்பு- மாயத்திரை, நீலம்-கிரியா சக்தி, பச்சை- பராசக்தி, சிவப்பு-இச்சா சக்தி, பொன்னிறம்- ஞான சக்தி, வெள்ளை- ஆதி சக்தி, இவையனைத்தும் கலந்த நிறம்- சித் சக்தி. 

தேகசித்தி என்பது பருவுடலை ஒளியுடளாக மாற்றுவது.  இதற்கு சித்தர்கள் பல மந்திரங்களையும் தீட்சைகளையும், ரசவாத முறைகளையும் கூறியுள்ளனர்.  மாயசித்தி என்பது மாயை விளைவிக்கும் மயக்கங்களைத் தாண்டுவது.  இது மனத்தைக் கொண்டு நிகழ்த்தப்படுவது.  குருபாதம் என்பது குருவின் திருவடி.  பாதம் எனபதற்கு பகுதி என்றும் பொருள்.  குருவாக இருக்கும் இறைவனின் ஒரு நிலையையும் இச்சொல் குறிக்கலாம். இறைவன் நமது குருமட்டுமல்ல அனைத்துமாவான்.  இந்த நூலுக்கு விளக்கம் எழுதிய ஆசிரியர் திருவருட்பா பாடல்கள்8,9,11,13, 15 ஐயும் பிற பாடல்களையும் குருபதம் என்பதற்கு மேற்கோள்காட்டியுள்ளார்.    


இப்பாடலில் குறிப்பிடப்பட்ட மனிதன் உண்மையில் ஞானம் பெறாதவன்.  தனது ஜாலப்பேச்சால் தான் ஞானி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான் என்கிறார் சுப்பிரமணியர். 

Sunday, 24 August 2014

3. Topics that Subramanyar will be discussing

Verse 3
பாரப்பா அஷ்ட கர்ம வசிய மாற்றம்
பரிவான அஞ்சனமுந் திலதப் போக்கும்
ஆரப்பா வகார மொடு வயித்யந் தானும்
அடங்காத தேக சித்தி கெவுனமார்க்கம்
நேரப்பா யோகமொடு ஞானந்தானும்
நிலையான நிருவிகற்ப சமாதி மார்க்கம்
சேரப்பா இதுவெல்லாம் வெளியாய்மைந்தா
செப்புகிறேன் இந்த வகை தெளிவுதானே

Translation:
See son, the eight actions, the enchantment, change
The merciful eye potion, the action of the sesame seed
Become pacified son, the vakaara along with the treatment
The uncontrollable deha siddhi, space travel
The direct, yoga along with jnana
The stable nirvikalpa Samadhi, its means
How to join this, all these, Son
I will tell explicitly, it will become clear this way.

Commentary:
Subramanyar is telling Agatthiyar the topics that he will be discussing in this work.  He will be explaining very clearly, without concealing anything, about the ashta karama, the manner in which the sesame seed moves/acts, the vakaara, the treatment, deha siddhi, kevuna maarga or space travel, yoga, jnana, nirvikalpa Samadhi and how to attain it.  He tells Agatthiyar that there is will not doubt after that.

Ashta karma are the eight actions, vasyam, sthambanam, mohanam, maaranam, aakarshanam, vidhveshanam, bedhanam and ucchaadanam.    All these look like techniques to cause various effects of others.  For example vasyam seems to be a technique for attracting others, maaranam seems to be for causing death.  If one reads the verses in Agatthiyar saumya sagaram one will understand the real purpose of these actions.  They are not for affecting others but to protect oneself from various obstacles that inhibit one from performing the ashtanga yoga and reaching the nirvikalpa Samadhi ultimately.  For example if vasyam is performed correctly all the knowledge systems, the microcosm, the macrocosm, the sastra, mantra, deva, munis, evil spirits, animals the eight types of snakes, birds and one’s own desires-the kaamappaal and the kaanal paal, will come under one’s control.  This is the real goal of vasyam, to bring any external obstacles of the ashtanga yoga under one’s control, including one’s own desires.  Similarly, while the technique for maaranam can cause the death of another, it is actually meant for the death of all the diseases in the yogin’s body.

Sesame seed refers to the soul moving in the ajna.  It is said to be the size of the tip of tilatham or sesame seed.  Agatthiyar says vakaara siddhi is bringing the pancha gana under one’s control using vaasi or special breathing techniques.  Deha siddhi is attaining the “oli udal” or body of light, kevuna maargam is being able to fly in the sky by placing certain magical preparations or “kulikai”.  Nirvikalpa Samadhi is merging with the Supreme without any distinctions.  This is the ultimate state of becoming the Divine.
As Subramanyar is planning to describe all these elaborately he tells Agatthiyar that there will be doubt in the end.

இப்பாடலில் சுப்பிரமணியர் அகத்தியரிடம் தான் எவற்றைப் பற்றியெல்லாம் விளக்கப் போகிறேன் என்று கூறுகிறார்.  அவர், தான், அஷ்ட கர்மம், திலதத்தின் போக்கு, வகார சித்தி, வைத்தியம், தேக சித்தி, கெவுன மார்க்கம், யோகம், ஞ்னனம், நிர்விகல்ப சமாதி ஆகியவற்றைப் பற்றித் தெளிவாகக் கூறப்போவதாகச் சொல்கின்றார்.

அஷ்ட கர்மா என்பவை வசியம், ஸ்தம்பனம், மோகனம், மாரணம், ஆகர்ஷணம், வித்வேஷணம், பேதனம் மற்றும் உச்சாடனம் என்னும் எட்டுவகைச் செயல்களாகும்.  இந்த செயல்கள் அனைத்தும் பிறரைத் தனது கட்டுக்குள் வைக்க உபயோகப்படுத்தக் கூடியவையாகத் தோன்றினாலும் உண்மையில் அவை ஒருவர் அஷ்டாங்க யோகம் செய்ய முனையும்போது ஏற்படும் தடங்கல்களை விலக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.  உதாரணமாக வசியம் என்பது பிறரைத் தனது கட்டுக்குள் வைக்க உதவுவதாகத் தோன்றுகிறது.  ஆனால், அகத்தியரின் சௌம்யசாகரத்தைப் படித்தால் அது வேதம், சாத்திரம், மந்திரம் என்ற எல்லா அறிவின் ஊற்றுக்களைப் பெறவும், தனக்குள் இருக்கும்  சிற்றண்டத்தையும் வெளியில் உள்ள பேரண்டத்தையும் கட்டுப்படுத்தவும்,  தேவர்கள் முனிவர்கள் என்று தனக்கு உதவுபவர்களை நெருங்கவும் தீயசக்திகளை விலக்கவும் பறவை மிருகம் போன்ற பிற உயிர்கள் தனக்குத் துன்பம் தராதிருக்கவும், தனது ஆசைகளான கானல்பாலை காமப்பாலை ஆகியவற்றை விலக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  அதேபோல் மாரணம் தனது உடலில் உள்ள நோய்களை, மரணமடையச் செய்ய, அழிக்க, பயன்படுத்தப்படுகிறது.  இவ்வாறு இந்த அஷ்ட கர்மங்கள் அஷ்டாங்க யோகத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள உதவும் முஸ்தீபுகளாகும்.

திலதம் என்பது எள்.  ஆத்மா எள்ளின் முனையைப் போல ஆக்னையில் தென்படும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.  வகாரம் என்பது பஞ்ச கணங்களைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவது.  அகத்தியரின் வகார தீட்சையில் இதைப் பற்றிய குறிப்புக்களைக் காண்க.  தேக சித்தி என்பது பருவுடலை ஒளியுடலாக மாற்றுவது. கெவுன மார்க்கம் என்பது குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாகப் பறப்பது.  நிர்விகல்ப சமாதி என்பது இறைமைக்கும் தனக்கும் இவ்வித வேறுபாடும் இல்லாதிருப்பது, யோகத்தின் உச்ச நிலை. 


சுப்பிரமணியர் தான் இவையனைத்தையும் விரிவாக விளக்கப் போவதால் அகத்தியருக்கு இவற்றைக் குறித்து எவ்வித சந்தேகமும் இனி இருக்காது என்று கூறுகிறார்.