Verse 103
ஆச்சடா பூரணத்தின் அமுதமுண்டு
அப்பனே முப்பாலை அறிந்து போற்றி
ஏச்சடா சொல்வார்கள் செடி பூடென்று
என் மக்கள் அதினாலே வருவதேது
வாச்சடா வெண் சாரை பிடிக்கவென்று
வையகத்தில் மலைகாடு அலைந்தே ஏறி
ஏச்சடா சாரையைத் தான் பிடித்தோம் என்பார்
என்மகனே சாரை இருப்பிடத்தைப் பாரார்
மூச்சடா மூச்ச்ச்ற விடத்தைக் காணார்
முக்கியமாய்ச் சாரையுட நிலையைக் கேளே
Translation:
All right son,
consuming the nectar
Knowing about
the “muppaal” and praising it
People will
speak erroneously, as plants and weed
My
people! What is the benefit from this?
For catching
the white ratsnake
Roaming and climbing the hills and forests in this world,
They will say that they have caught the ratsnake
My son, they will not see the place where the snake
resides
They will not see the place where the breath does not
exist
Hear about the status of the snake, most importantly.
Commentary:
Subramanyar is talking about an important concept
here. One of the most important
components of the Siddha marga is pranayama or vaasi yogam. It is the process of directing the breath to
flow through the sushumna nadi. This
produces heat in the body which wakes the kundalini sakthi from its inactive
state and makes it flow up.
The white ratsnake represents the kundalini sakthi as its
ascent is as fast and as powerful like the gait of the snake. The ratsnake, of all the snakes, moves very
fast. It makes a sound like a hum when
it moves and is nonpoisonous. The
kundalini sakthi climbs through the sushumna with a sound like the humming of
the snake.
The muppaal represents the triple nadi of ida, pingala
and sushumna. In the Kandha sashti kavacham the prayer goes as “muppaal
naadiyai munaivel kaakka”. Hence, the
muppaal is the three energy channels. During vaasi yogam the breath flows
through the ida for sixteen counts, through the pingala for twelve counts and
the four counts, the difference is called the agni kalaa. This agni kalaa comes from the fire of the
kundalini which is said to flow through the middle sushumna nadi.
Subramanyar says that people roam around in hills and
forests saying that they want to catch the ratsnake. It is not something present outside but is
within us. Subramanyar indicates its
location as the place where there is no breath.
Tirumular says that a soul remains in the turiyatheetha state at the
muladhara where not even the prana functions.
This spot, the locus of kundalini, is where there is no breath. He says that people do not know this and they
take the “vensaarai” literally and look for a snake outside.
இப்பாடலில் சுப்பிரமணியர் ஒரு முக்கியமான கருத்தை
விளக்குகிறார். சித்தர்கள் பாடலில்
வெண்சாரை என்ற சொல்லை பல இடங்களில் காணலாம்.
இது என்ன என்று சுப்பிரமணியர் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார். சித்தர் மார்க்கத்தில் வாசி யோகம் என்னும்
பிராணாயாமம் முக்கியமான ஒரு பயிற்சி. இது
பிராணனை ஒரு குறிப்பட்ட விதத்தில் நாடிகளில் பயணிக்கச் செய்து அதன் மூலம் உடலில்
வெப்பத்தை உருவாக்கி குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்புவதே குறிக்கோள். இவ்வாறு எழுப்பப்பட்ட குண்டலினி சக்தியையே
சித்தர்கள் வெண்சாரை என்கின்றனர் ஏனெனில் அதன் கதி சாரைப் பாம்பின் கதியைப் போல
உள்ளது. பாம்புகளில் சாரைப் பாம்பு
விரைவாக ஓடக்கூடியது, அது ஓடும்போது ஹம் என்று ஒரு சப்தத்தை எழுப்புகிறது. இந்த சத்தம் குண்டலினியின் சத்தத்தை
ஒத்துள்ளது. இதையறியாத மக்கள் வெண்சாரை
என்பது வெளியில் இருக்கும் ஒன்று என்று எண்ணி காடுகளிலும் மலைகளிலும் அலைந்து
திரிகின்றனர் என்றும் அவர்களுக்கு இந்த சாரைப் பாம்பு இருக்கும் இடமான மூச்சற்ற
இடம் தெரிவதில்லை என்கிறார் சுப்பிரமணியர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பல அவத்தைகளை
விளக்கும்போது துரியாதீத நிலை எனது ஆன்மா மூலாதாரத்தில் மூச்சற்று இருக்கும் நிலை
என்கிறார். இதுவே குண்டலினியின்
இடமாகும். இதைத்தான் சுப்பிரமணியர்
மூச்சற்ற இடத்தில் வெண்சாரை உள்ளது என்று கூறுகிறார்.
இப்பாடலில் சுப்பிரமணியர் முப்பாலை அறிந்து போற்ற வேண்டும்
என்கிறார். முப்பால் என்பது இடை, பிங்கலை,
சுழுமுனை என்ற நாடிகள் என்பது கந்த ஷஷ்டி கவசத் தொடர் “முப்பால் நாடியை முனைவேல்
காக்க” என்பதிலிருந்து தெரிகிறது.