Thursday, 16 October 2014

51. Sakthi Yantra, Chitambaram

Verse 51
போற்றுகிறேன் பஞ்ச சத்தி மூல மந்த்ரம்
போடடா சக்கரத்தில் வரைந்து கட்டி
ஏற்றுகிறேன் ஆறு வரை வீடு மைந்தா
என் வாக்காற் சொல்லவுந்தான் முடியாதையா
சாற்றுகிறேன் சிதம்பரமென்றிதற்குப் பேரு
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மைந்தா மைந்தா
ஏற்றுகிறேன் ஆறுவரை வீட்டுக்கெல்லாம்
இருவளையம் வாசலிலே இட்டுக் கட்டே

Translation:I
I am praising the pancha sakthi mula mantra
Draw it in the cakra and tying it
Son, I am raising it to the six peak houses
I cannot say it in my own words
Chitambaram is the name for it,
I am saying the truth, Son, Son
I am raising it to the all the six peak loci
Drawing the two circle at the entrance, tie it.

Commentary:
Subramanyar is talking about a yantra here.  It contains the five letters, aim, kleem, saum, sreem, hreem and the omkara.  Through visualization consciousness is raised through the six peak houses or the cakra, the pinnacles of various principles.  Subramanyar says that the procedure and the experience cannot be described in words.  Thus, a guru is essential in this esoteric kundalini yoga practice.  He says that Chitambaram is the name.  The cakra are loci of consciousness.  Thus, Chitambaram may not be one spot in the body but these loci of consciousness- chith+ambaram.  He concludes the verse by saying that two circles should be drawn at the entrance.


சுப்பிரமணியர் ஒரு யந்திரத்தைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார்.  முன் பாடலில் கூறிய பஞ்ச சக்தி மூல எழுத்துக்களான ஐம் கிலீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் என்ற ஐந்து எழுத்துக்களை அதில் கீறி விழிப்புணர்வை ஆறு வரை வீடுகள் எனப்படும் சக்கரங்களின் ஊடே ஏற்றவேண்டும் என்கிறார் அவர்.  இந்த வழியையும் அனுபவத்தையும் வார்த்தையால் கூறமுடியாது என்று அவர் கூறுவது  குண்டலினி யோகம் தகுந்த குருவின் மேற்பார்வையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.  வெறும் புத்தக அறிவுடன் இதை முயலக் கூடாது என்பதைக் காட்டுகிறது.  இதற்குப் பெயர் சிதம்பரம் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  பொதுவாக சஹஸ்ராரத்தை சிதம்பரம் என்று அழைப்பது வழக்கம்.  சித் அம்பரம் அல்லது விழிப்புணர்வின் அரங்கம் என்று பொருள் படும் இந்தச் சொல் எல்லா சகரங்களையும் குறிப்பதாகவும் கொள்ளலாம் ஏனெனில் ஒவ்வௌர் சக்கரமும் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு நிலையின் உச்சமாகும்.  அதைத்தான் சுப்பிரமணியர் “வரை” அல்லது முகடு என்று குறிப்பிடுகிறார்.  இரு வளையங்களை வாசலில் இட்டு இந்த சக்கரத்தைக் கட்ட வேண்டும் என்று கூறி சுப்பிரமணியர் இப்பாடலை முடிக்கிறார். 

Wednesday, 15 October 2014

50. Fifty one letters and Sakthi bheeja

Verse 50
வைஎன்ற ஐம்பத்தோரட்சரத்தை
வளமான மூலவரை சிரசு மட்டும்
மெய்யென்ற விலக்கமுந்தான் மேவிக்கட்டி
மேலான குகைவாசல் அடுக்கவேறி
ஐஎன்றுங் கிலிஎன்றுஞ் சௌவென்றோதி
யடுக்கடுக்க ஓங்காரம் ஸ்ரீயுமென்றும்
பொய்யென்றே எண்ணாமல் இறீயுமென்றும்
புத்திரனே நமஸ்தெனவே போற்றுவாயே

Translation:
Place the fifty one letters
From the muladhara to the cranium
Tying up the body the “illakkam” pervading it
Climbing up to the supreme entrance of the cave quickly
Chanting “ai” “klee” and “sau”
Along with omkara and “sreem”
Also as “hreem” without thinking it is false
Son, praise it as namasth also.

Commentary:
This is a continuation of the previous verse on Sakthi beejam.  The fifty one letters are the letters of the Sanskrit alphabets.  These letters represent various principles.  For an explanation of what these letters signify please refer to nandikeshakasika posted at scribd or to Agatthiyar meijnanam.  These letters are depicted on the petals of the cakras up to ajna.  They are also called matrika maala or garland of letters.  Each letter signifies a deity also, the matrika devata.  Suffice to say here that they represent the various principles, the cause for the material universe.  These letters are visualized in the body, mei.  Meivazhi Kuzhanthasami Goundar interprets the word “ilakkam” as “ilakku am um” ilakku means goal, am and um represent akara and ukara the Siva and Sakthi.  The supreme cave is the ajna cakra.  Sivavakkiyar calls this as the kal guhai.  It may also mean the threshold for the sahasrara. 

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக வரும் இப்பாடலில் சுப்பிரமணியர் ஐம்பத்தொரு அட்சரங்களை மூலாதாரம் முதல் சிரசு வரை வைக்கவேண்டும் என்று கூறுகிறார்.  இந்த எழுத்துக்கள் சம்ஸ்கிருத அகராதியில் உள்ள எழுத்துக்களாகும்.  இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கிறது. மேலும் விளக்கங்களுக்கு www.scribd.com என்னும் வலைதளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நந்திகேச காசிகா என்ற நூலின் விளக்கத்தைப் பார்க்கவும்.  அகத்தியர் மெய்ஞ்ஞான காவிய விளக்கத்திலும் இதைப் பார்க்கலாம்.  இந்த எழுத்துக்களை சக்கரங்களில் காட்சிப்படுத்தி மெய்யெனும் உடலை அதனால் கட்டவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் இலக்கமும் என்ற சொல்லை இலக்கு அம் உம் என்றும் பிரிக்கிறார்.  அம் உம் என்ற எழுத்துக்கள் சிவனையும் சக்தியும் குறிக்கும்.  அந்த நிலைகளை அடைவதே இந்த யோகத்தின் குறிக்கோள், இலக்கு.  மேலான குகை என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கலாம்.  சிவவாக்கியர் இந்த சக்கரத்தை கல்குகை என்கிறார்.  அல்லது இது சகஸ்ராரத்தின் வாயிலைக் குறிக்கலாம்.  முன் பாடலில் கூறியதைப் போலவே ஐம் கிலீம் சௌம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஸ்தே என்றும் ஓத வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.

Monday, 13 October 2014

49. Placement of Sakthi bheeja

Verse 49
பூட்டடா சிரசிட்டு விந்துவிட்டுப்
புத்திரனே அகாரமதைப் புருவமேவி
நாட்டடா இடதுபுறங் கிலீயை வைத்து
நாதனே வலது புறம் ஐயுமென்ற
வாட்டடா சௌவுமென்று சிரசு மேவி
வளமான ஸ்ரீயென்றே காதிலிட்டு
சூட்டடா இறீயுமென்றே பாதந்தன்னைச்
சொகுசான நமஸ்தெனவுங் கூடவையே

Translation:
Lock in the head, placing the bindu
Son, the akaara at the middle of the eye brow
Establish in the left “kleem”
Son, on the right “aim”
Place the “soum” in the head
And the verdant “shree” in the ear
Adorn the sacred feet “hreem”
Add the pampered nama along with these.

Commentary:
This is a prayoga or placement that we are seeing for the first time.  Subramanyar is describing the placement of the Sakthi beeja, aim, kleem, saum, sreem, hreem and nama
He says that the akara should be placed at the ajna, the kleem in the left, aim in the left, soum in the head and shree or shreem in the ear.  Hreem is the supreme mantra which is adorned at the sahasrara and a namaha or namasthe is added to these.


இப்பாடலில் சக்தி பீசங்களை எவ்வாறு இடவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார். அகாரத்தை ஆக்னையில் வைத்து க்லீம் என்ற அட்சரத்தை இடதுபுறமும் ஐம் என்பதை வலதுபுறமும் சௌம் என்பதை தலையிலும் ஸ்ரீ அல்லது ஸ்ரீம் என்பதை காதிலும் வைக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.  இவை வைக்கப்படும் இடங்களில் முக்கியமான சக்கரங்கள் உள்ளன.  ஹ்ரீம் என்ற மந்திரம் தேவியின் பாதம் என்கிறார் சுப்பிரமணியர்.  இவற்றுடன் நமஸ்த்தென்பதையும் சேர்க்கவேண்டும் என்கிறார்.  இது நமஹ அல்லது நமஸ்தேயாக இருக்கலாம். 

48. Cakras and the letters

Verse 48
சாற்றுகிறேன் நாற்கோணந் தன்னில் மைந்தா
தற்பரமாய் நகாரமிட்டு சார்பாய் நின்று
ஏற்றுகிறேன் அதன்பேரில் பிறைதானிட்டு
என்மகனே மகாரமென்ற மவுனஞ்சாத்தி
போற்றுகிறேன் அதன்மேன்முக்கோணமிட்டு
பூரணமாஞ் சிகாரத்தை நடுவே சாத்தி
காற்றிலையுமதிகமடா அறு கோணத்திற்
கலந்தெழுந்த வகாரமதைக் கனிவாய்ப் பூட்டே

Translation:
I am adorning, Son, on the square,
The self controlled nakaaram, remaining associated with it
I am adding above it a crescent
My son, adorning the silence, the makaara over it
I am praising by adding a triangle over it
Adorning the fully complete sikaara in its middle
In the six pointed figure that buffets in the great wind
Lock, with mercy, the vakaara that emerges.

Commentary:
Subramanyar is describing the cakras here.  Following his mention of the five letter mantra here he describes how the letters of the namacivaya are placed in the cakra.  Nakaara is placed at the muladhara, makaara at the svadhishtana, the cakra with the crescent, sikaara is placed at the manipuraka cakra with a triangle and the vakaara at the anahatha the cakra with six points.  This implies that the yakaara will be placed at the vishuddhi the next cakra in line. This pattern is similar to that which Agatthiyar described in his meijnanam. 

இப்பாடலில் சுப்பிரமணியர் சக்கரங்களும் அவற்றில் குறிக்கப்படும் எழுத்துக்களும் எவை என்று கூறுகிறார்.  முந்தைய பாடலில் அவர் குறிப்பிட்ட ஐந்தெழுத்துக்களை இங்கே முறையே மூலாதாரத்தில் உள்ள நாற்கோணத்திலும் மகாரத்தை சுவாதிஷ்டானத்தில் உள்ள பிறையிலும், சிகாரத்தை முக்கோணத்தைக் கொண்ட மணிபூரத்திலும் வகாரத்தை காற்று தத்துவத்தைக் குறிக்கும் அறுகோணத்தைக் கொண்ட அனாஹதத்திலும் குறிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.  இதனால் கடைசி எழுத்தான யகாரம் விசுத்தி சக்கரத்தில் குறிக்கப்பட வேண்டும் என்பது தோன்றுகிறது.

Sunday, 12 October 2014

47. Aru padai veedu and other symbolisms associated with Murugan

Verse 47
கொள்ளடா சத்திகை வசமதாகக்
கூறுகிறேன் கும்பமுனி உனக்காய் மைந்தா
தள்ளாதே ஆறு படை வீடு கட்டிச்
சடாட்சரமாம் ஆறு எழுத்தை அதிலே நாட்டி
விள்ளாதே ஆறுபடை வீட்டுக் கெல்லாம்
விபரமுடன் சொல்லுகிறேன் விந்து வட்டந்
துள்ளாதே விந்துவில் ஓங்காரஞ்சாத்திச்
சுருதியுட நாற்கோணம் மேலே சாற்றே

Translation:
Hold son, for the power to come under control,
I am saying this, Kumbhamuni, for your sake,
Building the six “padai veedu” (barracks)
Establishing the six letters there firmly
For the six barracks, without holding anything back
I will describe the details.  Within the circle of bindu
Place the omkara in the bindu
Place it over the four pointed square.

Commentary:
Subramanyar is beginning to describe the yoga method involving the six cakras.  He says that the goal of this practice is bringing the sakthi, kundalini, under control.  He talks about the six barracks or “aru padai veedu”. These are the six cakras found in the body. 

Murugan’s six padai veedu are Thirupparamkundram, Thirucchendur, Thiru aavinankudi, Swamimalai, Thirutthanigai malai and Pazhamudircholai.  These six places signify the six chakras as follows: thirupparam kunram- muladhara, Thirucchendhur- svadishtana, Palani- Manipura, Swamimalai- Anahatha, Thirutthanigai- vishuddhi and Pazhamudircholai- ajna (details by Sivaya Subramuniya Swami).  Subramanyar says that the shat akshara or the six letters should be placed firmly at these cakras.  From this verse and the next we find that these letters are om namacivaya.  He says that the omkara should be placed at the circle of bindu, (this is present in the muladhara) and this in turn should be place in the square along with sruti, or the nada.  The three and a half rounds of kundalini represent omkara’s a u m and the soundless state or visarga.

For those who missed checking the paper by Mr. Ramanathan Narayanasawamy let us see a summary of the symbolism connected with Murugan, here. http://archive.deccanherald.com/Content/Feb262009/city20090225120714.asp

Murugan’s mantra saravanabhava consists of the kumara bhija (sa ra), sakthi bhija (va na) and siva bhija (bha va).  They also signify the six attributes- purity, bounty, light, auspiciousness, splendor and infinite power.  Five of his six faces signify the five acts (like Siva)- creation, preservation, destruction, veiling and grace.  His sixth face symbolizes wisdom or communion in silence. Murugan is seen with Valli, Deivayanai and his vel.  They represent iccha, kriya and jnana sakthi.  The peacock, we have seen before, signifies the delusions caused by maya.  The rooster in his flag signifies the nada brahmam.  The sound of the rooster signifies divisions of time also- as night and day.

இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினி யோகத்தை விளக்கத் தொடங்குகிறார்.  அவர் இந்தப் பயிற்சியின் குறிக்கோள் சக்தி வசமாகுவது என்கிறார்.  அதனை அடுத்து அவர் ஆறு படைவீடுகளைக் குறிப்பிட்டு அவை உடலில் உள்ள சக்கரங்கள் என்று காட்டுகிறார்.
 பொதுவாக உலகில் முருகனின் ஆறு படை வீடுகள் என்று திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி அல்லது ஆவினன்குடி, சுவாமி மலை, திருத்தணிகை மலை மற்றும் பழமுதிர்சோலையைக் குறிப்பிடுவது வழக்கம்.  இந்த ஆறு இடங்களும் நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் என்று சிவாய சுப்பிரமுனிய சுவாமி குறிப்பிடுகிறார் (ஹவாய்).  திருப்பரங்குன்றம்- மூலாதாரம், திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமி மலை- அனாஹதம், திருத்தணிகை- விசுத்தி மற்றும் பழமுதிர் சோலை- ஆக்ஞா சக்கரத்தையும் குறிக்கின்றன.

சுப்பிரமணியர் ஷட் அக்ஷரங்களை, ஆறு எழுத்துக்களை, இந்த படைவீடுகளில் உறுதியாகப் பதிக்கவேண்டும் என்கிறார்.  இந்த எழுத்துக்கள் ஓம் நமசிவய என்று இப்பாடலிலும் பின் வரும் பாடலிலும் காண்போம்.  ஓம்காரத்தை விந்து வட்டத்தில் சாற்றவேண்டும் என்றும் அதை நாற்கோணத்தில் சாற்றி சுருதியுடன் ஏற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர். சுருதி என்பது நாத தத்துவத்தைக் குறிக்கும். விந்து வட்டம் என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கலாம்.  குண்டலினியின் மூன்றரை சுற்றுக்கள் ஓம்காரத்தின் அ உ ம மற்றும் சப்தமற்ற நிலைகளைக் (விசர்கம்) குறிக்கும்.

சரவணபவ என்ற முருகனின் மந்திரத்தைப் பற்றி திரு. ராமநாதன் நாராயண சுவாமி எழுதியதை இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு அதன் சாரம் கொடுக்கப்படுகிறது. http://archive.deccanherald.com/Content/Feb262009/city20090225120714.asp

சரவணபவ என்ற மந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் குமார பீஜம் என்றும் அடுத்த இரு எழுத்துக்கள் சக்தி பீஜம் என்றும் கடைசி இரு எழுத்துக்கள் சிவ பீஜம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.  இந்த ஆறு எழுத்துக்களும் தூய்மை, செல்வம், ஒளி, மங்களம், பெருமை மற்றும் அளவற்ற ச்கதியைக் குறிக்கும். முருகனின் ஆறு முகங்களில் ஐந்து முகங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற செயல்களையும் ஆறாவது முகம் ஞானத்தையும் குறிக்கின்றன.  வள்ளி தெய்வயானை மற்றும் வேலுடன் அவர் காணப்படுவது இச்சா, கிரியா ஞான சக்திகளைக் குறிக்கிறது.  அவர் மயிலின் மேல் காணப்படுவது அவர் மாயையைக் கடந்தவர் என்பதையும் கோடியில் உள்ள சேவல் அவர் நாதப் பிரம்மம், மற்றும் காலத்தைக் கடந்தவர் என்பதையும் குறிக்கின்றன.  (சேவலின் கூவல் பகல் இரவு என்ற காலத்தின் பிறிவைக் குறிப்பிடுகிறது).

Saturday, 11 October 2014

46. Fragrances, dvarapalaka, manonmani

Verse 46
நிறுத்துவேன் தாரணைதான் மகாரமாச்சு
நின்றிலங்கும் வாசியல்லோ சாரியாச்சு
கருத்தான தேவி மனோன் மணியுமாச்சு
காமதேன் கற்பகமும் அதுவேயாச்சு
மருத்துமலைச் சார்பு நடு வட்டத்துள்ளே
மாறாத வாசனைதான் அனேகமுண்டு
திருத்தமுடன் துவாபர பாலகரரும்உண்டு
தெரிசித்தே அடிபணிந்து தெரிந்து கொள்ளே
Translation:
I will hold it, the dharana became makaaram
The vaasi that remains became saari
It became Devi Manonmani
It became the Kamadenu (the wishgranting cow) and Karpakam (wish granting tree)
Within the circle in the medicinal hill
There are several fragrances
There are also dvarapalaka (protectors of the threshold)
See them, salute the feet and learn about them.

Commentary:
Agatthiyar says in his saumya sagaram that dharana is holding on to the thought that this world is the manifestation of the Brahman, mother kundalini.  The letter makaara represents the manifested world that occurs due to her.  Hence, Subramanyar is saying that dharana is makaara. 
The yogin associates with vasi or regulation of life breath and remains with this understanding.  Manonmani is another name for kundalini sakthi.  Manonmani is also considered the consort of Sadasiva the state from which all the manifestations start and it is Manonmani who provides the power for their emergence.  Kamadenu and Kalpaka vriksham are the celestial cow and tree that grant all the wishes.  During kundalini yoga the yogin’s body is said to attain a special fragrance as all the impurities are removed during the process.  Also, during the yoga a special mudra, kechari mudra is practiced which brings down the nectar and along with it special fragrances.  This is symbolically called ganda madanam.  Madanam is churning, a special movement of the tongue and gandam means fragrance.  Dvara palaka are protectors or deities that safe guard the various enegy centers or the cakras.  Subramanyar tells Agatthiyar to see all these and understand them.


அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் தாரணை என்பது இவ்வுலகம் பிரம்மனின் வெளிப்பாடு, குண்டலினி தாயின் வெளிப்பாடு என்பதை மனதில் எப்போதும் கொண்டிருப்பது என்கிறார்.  இங்கு சுப்பிரமணியரும் தாரணை என்பது மகாரம் என்கிறார்.  மகாரம் என்பது உலகைப் படைக்கும் மாயையைக் குறிக்கும் எழுத்து.  ஒரு யோகி இந்த கருத்தை மனத்தில் கொண்டு வாசியைச் சார்ந்து இருப்பார்.  மனோன்மணி என்பது குண்டலினியின் மற்றொரு பெயர்.  சக்கரங்களின் அதிதேவதைகளில் சதாசிவனின் சக்தி மனோன்மணி.  உன்மணி என்பது ஒரு விழிப்புணர்வு நிலையைக் குறிக்கும்.  காமதேனு மற்றும் கல்பக விருட்சம் என்பவை விருப்பத்தை அருளுபவை.  குண்டலினி யோகத்தின்போது யோகியின் சரீரம் நறுமணத்தைப் பெறுகிறது ஏனெனில் உடலில் உள்ள மலங்கள் பயிற்சிகளினால் அகற்றப்படுகின்றன.  மேலும், யோகத்தின்போது கேசரி முத்திரையை அந்த யோகி மேற்கொள்கிறார்.  இந்த முத்திரை லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்தை ஊறச் செய்து உடலில் பலவித நறுமணங்களைத் தோற்றுவிக்கிறது.  இது கந்த மாதனம் என்று குறியீட்டு மொழியில் அழைக்கப்படுகிறது.  மாதனம் என்பது கடிவது என்றும் கந்தம் என்பது மனம் என்றும் பொருள்படும்.  துவாரபாலகர்கள் என்பவர்கள் வாயில்காப்போர், சக்கரங்களின் அதிதேவதைகள் துவாரபாலகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.  சுப்பிரமணியர் அகத்தியரை இவையனைத்தையும் பார்த்து வணங்கி தேறுமாறு கூறுகிறார். 

Thursday, 9 October 2014

45. The supreme state



Pugazhi Murugan at Velayudhampalayam, Karur.

Verse 45
பாரடா சாகரமும் முடிவதாச்சு
பன்னிருகைப் புயம் இலங்க உரைக்கலாச்சு
ஆரடா அஷ்டாங்க முடிவுமாச்சு
ஆதி வஸ்து அனாதிவஸ்து ஒன்றாய்ப் போச்சு
கூறடா சடாட்சரமும் இதுவேயாச்சு
குவிந்தெழுந்த ஐந்தெழுத்தும் இதுவேயாச்சு
நேரடா பராசத்தி வேலுமாச்சு
நிலையான தாரணையை நிறுத்துவேனே.

Translation:
See son, the ocean came to an end
The shoulders with twelve hands started glowing and functioning
Son, it became the end of the ashtanga
The root entity and the eternal entity became one
Say this son/ the part, the six letters became this
The five letters that came together and rose became this,
This became the straight lance of Parasakthi
I will hold firmly the dhaarana. 

Translation:
The ocean may be the ocean of samsara.  We already saw that the twelve arms represent twelve states of consciousness.  Subramanyar says that in the exalted state the twelve states of consciousness will be functioning.  The supreme state is the terminus of the ashtanga yoga.  Samadhi is considered the pinnacle of ashtanga yoga. When the steps of yama, niyama, asana, pranayama, prathyahara, dharana and dhyana are practiced properly Samadhi occurs as a next logical step.  No effort is needed on the part of the yogin, it is a natural occurrence.  The “aadhi vastu” or the root entity is the soul.  The “anaadhi vastu” or the eternal entity is the Divine.  In this state the distinction between the limited soul and the universal soul disappears.  The Tamil Siddhas say that the jivatma does not “become” the Paramatma, there is no transformation or change.  It “is” the Paramatma whose true nature was concealed by the various principles or tattva.  The six letters may be saravanabhava. The five letters may be namacivaya.  Subramanyar says that they came together as the five elements they represent abide within each other during
the process of yoga.  The “vel” of Parasakthi is the sense of discrimination or “pakuttharivu” the supreme knowledge that leads to realization.  It is as sharp as the lance.  Dharana is the process of holding one’s focus on an internal or external object or a thought.  Agatthiyar describes six types of dharana in his Saumya sagaram verse 300 and concludes that dharana is remaining with the single thought that everything is the manifestation of the Brahman.  Dharana precedes dhyana.


இப்பாடலில் குறிப்பிடப்படும் சாகரம் சம்சார சாகரமாக இருக்கலாம் அல்லது நமது உடலில் உள்ள திரவங்களாக இருக்கலாம்.  இந்த திரவங்கள் பிறவியை ஏற்படுத்துகின்றன.  பன்னிரு கைகள் என்பது பன்னிரு உணர்வு நிலைகள் என்று முன்னமே பார்த்தோம்.  இந்த உயர் விழிப்புணர்வு நிலையில் இந்த பன்னிரு நிலைகளும் செயல்படும்.  இந்த உயர் விழிப்புணர்வு நிலை அஷ்டாங்க யோகத்தின் உச்ச நிலையான சமாதியாகும்.  அஷ்டாங்க யோகத்தின் படிகளான யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் என்ற ஏழும் முறையாகச் செய்யப்பட்டால் சமாதி தானாக ஏற்படுகிறது. இதற்கு ஒரு யோகி எவ்வித தனியான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டாம்.  இந்த உயர் நிலையில் ஆதி வஸ்துவான ஜீவனும் அநாதி வஸ்துவான இறைவனும் ஒன்றாக இருக்கின்றனர்.  சித்தர்களின் தத்துவப்படி ஒரு ஜீவன் பரமனாக “மாறுவதில்லை”  என்றுமே பரமனாக இருக்கும் அவன் மாயை தோற்றுவிக்கும் தத்துவங்கள் நீங்கியவுடன் தனது உண்மை நிலையை உணர்ந்துகொள்கிறான்.  இவ்வாறு ஆதி வஸ்துவும் அநாதி வஸ்துவும் ஒன்று என்ற நிலை ஏற்படுகிறது.  ஆறெழுத்து என்பது சரவணபவ என்றும் ஐந்தெழுத்து என்பது நமசிவய என்ற மந்திரத்தையும் குறிக்கலாம்.  நமசிவய என்ற பஞ்சாட்சரம் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன என்பதை முன்னமே பார்த்தோம்.  இந்த எழுத்துக்கள் குறிக்கும் பஞ்ச பூதங்கள் உயர் விழிப்புணர்வு நிலையில் ஒருமைப்பட்ட நிலையில் இருக்கின்றன.  பராசக்தியின் வேல் என்பது ஞானத்தை அளிக்கும் அறிவு, பகுத்தறிவு.  இது வேலைப்போல கூர்மையாக இருப்பது.  தாரணை என்பது கவனத்தை வெளியில் இருக்கும் ஒரு பொருளின் மீதோ, உள்ளே காணும் ஒரு காட்சியின் மீதோ அல்லது ஒரு எண்ணத்தின் மீதோ குவிப்பது.  இது தியானத்துக்கு முற்பட்ட நிலை.  அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் ஆறுவித தாரணைகளைக் குறிப்பிட்டு முடிவில் தாரணை என்பது அனைத்தும் பிரம்ம சொரூபம் என்று எண்ணுவது என்று முடிக்கிறார் (பாடல் 300).