Thursday, 9 October 2014

44. Snake's poison, Indra attaining his post

Verse 44
காணடா அரவு விஷங் கடித்தாலுந்தான்
கைநொடிக்கும் நேரமதிலிருந்துபோகுந்
தானடா அரவுதனைப் பிடித்தே மைந்தா
சத்தி சிவ லிங்கமதில் சார்பாய்ச் சேர்ந்து
நானடா அதையறிந்து மவுனங்கண்டு
ரவியினுட கற்பத்தில் நாடியேறிக்
கோனடா வானவர்கோன் தனக்கேயானும்
கொடுத்தனடா தெய்வபதி கூர்ந்து பாரே

Translation:
See son, even when the snake bites
It will remain for the moment it takes to click the fingers
With the self, holding on to the snake, Son,
Associating with sakthi, siva linga
I, son, knowing it and seeing the silence
Climbing up the nadi during ravi karpam
King, for the king of celestials
I granted “deivapathi” to him, see it carefully

Commentary:
The snake bite refers to the ascension of the kundalini sakthi.  Subramanyar says that even if it occurs it will happen only for the time it takes to click the fingers.  This time period is called “maatthirai”.  However, one has to hold on to it and reach the states of sakti, siva and linga or the Divine with the form and formless-form states.  Subramanyar says that knowing this he climbed up the nadi maintaining silence and in this fashion he granted Indra the position of a celestial. From this it is clear that Indra, the Jivatma, with the help of consciousness, Subramanayar, reached his exalted state of deivapathi or the locus of Devas, the higher conscious state, by performing Siva yoga.


அரவு விஷக் கடி என்பது குண்டலினி மேலே ஏறுவதைக் குறிக்கிறது.  இது நிகழ்ந்தாலும் ஒரு மாத்திரை நேரம் அல்லது விரலைச் சொடுக்கும் நேரம்தான் ஏற்படும் என்கிறார் சுப்பிரமணியர்.  இந்த பாம்பின் துணைகொண்டுதான் ஆத்மா உயர்நிலைகளான சக்தி, சிவன், லிங்கம் அல்லது உருவம் அருவுருவ நிலைகளைச் சாரவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த ரகசியத்தைத் தான், விழிப்புணர்வு, அறிந்து, மௌனத்தை மேற்கொண்டு நாடியில் ஏறி தேவர் கோன் எனப்படும் இந்திரனுக்கு தெய்வபதியைக் கொடுத்தேன் என்கிறார் அவர்.  இந்திரன் என்பவன் ஜீவாத்மா, அவன் தேவர்களின் அரச பதவியைப் பெற்றது விழிப்புணர்வின் உதவியுடன் சிவயோகத்தின்மூலம்தான் என்பது இதிலிருந்து புரிகிறது.  

Monday, 6 October 2014

43. Red scorpion, black scorpion, crouching tiger, snake's poison

Verse 43
தேரடா தேளிருக்குஞ் சிவசாயைக்குள்
செந்தேளுங் கருந்தேளுந் திடமாய்ப் பாயும்
ஆரடா கருந்தேளை அறிவாருண்டோ
அறிந்தாலும் அதிநிலையை அறியப் போமோ
ஏரடா நிலையறிந்து மவுனம் பெற்று
என் மகனே புலியூருச் சாயை தன்னில்
நேரடா நேர் நிலையம் நீயே பார்த்து
நின்றுகொண்டு அரவு விஷ நிலையக் காணே

Translation:
Learn Son, the scorpion will remain within the shadow of Sivam
The red scorpion and the black scorpion will flow firmly
Who will know about the black scorpion
Even if they know it will they know its status
Climb son, knowing about its status, attaining silence
My son, in the pattern of the tiger crouching
Straight son, seeing the state of being straight, yourself
Standing there, see the status of the snake’s venom.

Commentary:
This verse is full of symbolism.  The sting of the scorpion we saw in the previous verse was about kundalini.  Here we see a different interpretation for it.  Subramanayar talks about a red scorpion and a black scorpion.  The triple qualities of satva, rajas and tamas are assigned the colors white, red and black.  Among these the universe is said to be made of tamas. In fact, another name for the universe is tamas.  It is the inactive state or the primary state before the energy pervaded it to make it active. Hence, Subramanyar is saying that hardly anyone knows about it and even if they know about it they cannot comprehend it.  This is the state of Sivam, before sakti, the red scorpion, emerged and activated it.   Thus, the red and the black scorpion are the Sakti and Sivam respectively. 
This symbolism is interesting even scientifically.  Quantum physics talks about the dark matter and dark energy pervading the universe.  The dark matters contributes to 70% of the matter in the universe and the dark energy contributes to 30% of the total energy in the universe. 
Only the state of silence gets close to this inactive state.  Silence does not mean “not speaking”.  It means going back to the para state of the four sound states, para, pashyanthi, madhyama and vaikari.   The crouching of tiger is mentioned to indicate the poise of kundalini sakthi before its pouncing or forceful ascendance. Snake poison also refers to the sharp sensation that kundalini sakthi produces and its speed of ascendance.


இப்பாடலில் பல குறியீடுகள் உள்ளன.  முதலில், நாம் செந்தேள் கருந்தேள் என்பவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.  முந்தைய பாடலில் சுப்பிரமணியர் கூறிய தேள் கொட்டு என்பது குண்டலினியுடன் தொடர்புடையது என்று பார்த்தோம்.  இங்கே தேள் என்பது வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களில் சத்துவம் வெள்ளை நிறம் என்றும் ரஜஸ் சிவப்பு நிறம் என்றும் தமஸ் கருப்பு நிறம் என்றும் குறிக்கப்படுகின்றன.  இவ்வுலகின் மற்றொரு பெயர் தமஸ் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.  தமஸ் என்பது செயலற்ற நிலை, ஆதி நிலை, சக்தி அதற்கு செயல்பாட்டை ஊட்டாத நிலை.  இதுவே சிவத்தின் நிலை.  இதைத்தான் சுப்பிரமணியர் இப்பாடலில் கருந்தேள் என்று குறிப்பிடுகிறார்.  இந்த நிலையைப் பற்றி ஒருவரும் அறிவதில்லை அறிந்தாலும் அது எத்தகையது என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றும் சுப்பிரமணியர் குறிப்பிடுகிறார்.  இந்நிலைக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒப்புமை நிலை மௌனம்.  மௌனம் என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல, அது சப்தத்தின் ஆதி நிலையான பரா நிலையை அடைவது.  சப்தம் பரா, பஷ்யந்தி, மத்யமா, வைகரி என்ற நான்கு நிலைகளை உடையது.  இவற்றில் பரா என்பது ஆதி நிலை, துரிய நிலையைப் போல நாபியில் இருப்பது. இதனை அடுத்தது பஷ்யந்தி, இதயத்தில் இருப்பது.  மத்யமா என்பது தொண்டையிலும் வைகரி என்பது நாவிலும் இருக்கின்றன.  புலி ஊருவது என்பது அதன் பதுங்கிப் பாயும் தன்மையைக் குறிக்கும்.  குண்டலினி சக்தியின் பாய்ச்சல் இதைப் போன்றது.  அரவு விஷம் என்பது பாம்பின் விஷம் எவ்வாறு வேகமாக உடலில் பாயுமோ அதைப் போல குண்டலினி உடலில் பாய்வதைக் குறிக்கிறது.  

42. Dhaana, scorpion sting

Verse 42
பாரப்பா ஆலயத்தில் நெய் விளக்குப்
பல பூசை செய்தும் அவன் அலைந்திட்டாலும்
ஆரப்பா அன்னதானம் பூமி தானம்
அப்பனே மாதானஞ் செய்திட்டாலும்
நேரப்பா குளங்கிணறு வெட்டினாலும்
நீ மகனே கரையேற மாட்டாய் பாவி
தேரப்பா தேட்கொடுக்காங் கொடுக்காந்தேளு
திரை ஏழை அறுத்தும் இனிக் கண்டு தேரே.

Translation:
See son, (lighting) a lamp with clarified butter
Even if he roams around performing several worship rituals
Offering food, land
Even if he performs great offerings, son,
Even if he digs lakes and wells
You son, will not reach the shore
Become clear son, the sting of a scorpion, the scorpion which is the sting
Cutting away the seven screens, see it and become an expert.

Commentary:
Subramanyar spoke about various rituals that people perform thinking that those actions will win them wisdom and liberation.  In the previous verse he emphasized that mere worship rituals without proper understand is useless.  Here he says that offering or dhana alone will not win liberation.  The most important of all the dhaana is the offering of food or annadhaana. Hence, Subramanyar begins with anna dhaana and elaborates it to include offering of land and all other great offerings.  Digging a well or lake is said to earn immense punya as it quenches the thirst of millions.  Here Subramanyar is saying that none of those actions will win liberation.  The last two lines are about an esoteric concept that one should learn from a guru.  We will try to understand it as much as we could with our limited knowledge.  Subramanyar is talking about the sting of a scorpion. This is related to the power of kundalini.  The ida nadi originates from the right big toe and runs up to the left nostril.  The pingala nadi originates at the left big toe.  When the kundalini Shakti starts its ascent, the first piercing is said to be as sudden and piercing like a scorpion’s sting or a snake bite.  Subramanyar is alluding to this phenomenon in the last section of this verse.  This process tears away the seven screen that we already saw before in verses 4, and 39. 


முந்தைய பாடலில் எவ்வாறு பொருள் புரியாத பூசைகள் பயனில்லை என்று கூறிய சுப்பிரமணியர் இப்பாடலில் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தானம் மட்டும் செய்தால் பயனில்லை என்று கூறுகிறார்.  தானத்தில் சிறந்தது அன்ன தானம்.  அதனால் அன்னதானத்தை முதலில் கூறும் சுப்பிரமணியர் அதனை அடுத்து பூமி தானம் போன்ற பல மகா தனங்களைச் செய்தாலும் குளம் கிணறு வெட்டினாலும் ஒரு பயனுமில்லை என்று வலியுறுத்துகிறார்.   இதனால் இவற்றைச் செய்ய வேண்டாம் என்று அவர் கூறுவதாகக் கொள்ளக் கூடாது.  இவற்றினால் மட்டும் ஞானம் பிறந்துவிடும் என்று எண்ணக் கூடாது குண்டலினி யோகம் மட்டுமே ஒருவரை பரவுணர்வு நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று புரிந்துகொள்ளவேண்டும்.  இதனை அடுத்து அவர் ஒரு மிக ரகசியமான விவரத்தைக் கோடிகாட்டுகிறார்.  தேள் கொட்டு என்று அவர் கூறுவது குண்டலினி சக்தி மேல் நோக்கி எழும்புவதுடன் சம்பந்தப்பட்டது.  நமது உடலில் இடை நாடி வலது கால் கட்டைவிரலிலிருந்து புறப்பட்டு இடது நாசிக்குச் செல்கிறது.  பிங்கலை நாடி இடது கால் விரலிலிருந்து புறப்பட்டு வலது நாசிக்குச் செல்கிறது.  குண்டலினி சக்தி விழித்தெழுந்து மேலே ஏறத்தொடங்கும்போது அது சுருக் என்று தேள் கொட்டுவதைப் போலவோ பாம்பு கடிப்பதைப் போலவோ இருக்கும் என்று நூல்கள் கூறுகின்றன.  இந்த விஷயத்தைப் பற்றிய விவரங்களை சுப்பிரமணியர் பரிபாஷையில் இப்பாடலில் கூறியுள்ளார்.  குண்டலினி சக்தியின் எழுச்சி ஏழு திரைகள் என்று நாம் முன்னமே பாடல் 4, 39 ல் பார்த்த மாயத்திரைகளை அறுத்தெறிகிறது. 

Sunday, 5 October 2014

41. Subramanyar laments about stupid people- ganga and deity

Verse 41
வீசுவேன் பூரணத்தை அறியாப் பேர்க்கு
விண்ணிலிடி தான் வீழ்ந்து நரகில் வீழ்வான்
காசி நதி தனிலேதான் தீர்த்தமாடிக்
கரைகாணா மந்திரங்கள் தன்னை ஓதி
வாசி நிலை அறியாமல் தெய்வம் என்று
வணங்கியவன் அலைந்திடுவான் வருவதேது
தோசிகளுக்கு எத்தனையோ சொன்னாலுந்தான்
தோற்றாது அலைந்திடுவான் கண்டுபாரே

Translation:
I will throw the pooranam for those who do not know it
With thunder striking from the sky, he will fall into hell
Bathing in the river in Kasi,
Chanting innumerable mantras
Without knowing the state of vaasi, one who
Worshipped as God, he will roam around, what is the benefit?
Even if you tell a lot to the useless people
He will whirl without realizing it, realize and see.

Commentary:
Subramanyar grants knowledge about the poornam or the fully complete state to the souls. He says that he will toss the poornam or the soul of those who do not know about it, that is, their atma will be removed from the body forcefully.  This is as impactful as a thunder striking. As the person is ignorant, he will face miseries, that is, fall into hell.   Such ignorant people are those who bathe in Ganga without realizing that the actual Ganga is the fluid that oozes from the lalaata cakra.  (This is also called akasa ganga, the akasa being the space principle in the cranium.)  They are the ones who recite countless mantras and worship external images as God without realizing that it is actually the vasi or the vital force of breath which is the God who grants all the siddhis.  Agatthiyar in his saumya sagaram says that the Divine remains within us as the vaasi and the limited soul as the fire of kundalini.  He will wander visiting countless religious sites and seeking various methods for realization.  Subramanyar laments that in spite of him telling so much these wastrels will not realize the truth. 


சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். அவர் பூரணத்தை வீசுவேன் என்றது ஆத்மாவை உடலிலிருந்து எடுப்பதைக் குறிக்கிறது.  இது இடி தாக்குவதைப் போன்ற வலிமையான ஒரு அனுபவம்.  அந்த மனிதன் அஞ்ஞானம் மிகுந்தவனாதலால் துன்பத்தை அனுபவிப்பான்.  அது நரகத்தைப் போன்ற அனுபவமாகும்.  அத்தகைய அறிவற்ற மனிதன் யார் என்றால் அவன் கங்கை என்பது லலாட சக்கரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் அமிர்தம் என்பதை அறியாமல் காசி நகரில் உள்ள நதிதான் அது என்று எண்ணி அதில் நீராடுபவன் (அந்த அமிர்தம் ஆகாச கங்கை எனப்படுகிறது) வாசிதான் பலன் அனைத்தையும் கொடுக்கும் தெய்வம் என்பதை அறியாமல் கோயிலில் உள்ள சிலைகளைக் கும்பிடுபவன் (நமது உடலில் இறைவன் வாயுவாகவும் ஜீவன் குண்டலினி அக்னியாகவும் இருக்கிறார்கள் என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார்) உண்மையை அறியாது ஊர் ஊராகத் திரிபவன், ஞானம் தரும் என்று பல வழிகளின் பின்னே அலைபவன்.  இந்த உண்மைகளை தான் எவ்வளவு கூறினாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அலைகின்றனர் என்று சுப்பிரமணியர் வருத்தத்துடன் கூறுகிறார். 

Friday, 3 October 2014

40. Subramanyar's view on rituals

Verse 40
பாரப்பா பூசைவிதி அறியாமல்தான்
பரமசிவ தீட்சையென்றே அலைவான்பாவி
ஆரப்பா முழுகியனுஷ்டாணஞ் செய்து
அஞ்செழுத்தா மூன்றெழுத்தெட் டெழுத்தாமென்று
நேரப்பா தீட்சைவைத்த குருக்களுந்தான்
நீணிலத்தில் மணியுருட்டிப் பூசை செய்து
வேறப்பா வெறி பிடித்துத் திரிவான் பாவி
வேரற்ற மரமென்று வீசு வேனே

Translation:
See son, without knowing the rules of worship
The sinner will roam seeking paramasiva deeksha
Bathing and performing austerities
Saying it is three letters, eight letters
The gurus who performed deeksha
Rolling the beads performing worship
He will roam around with frenzy, the sinner
 I will toss him like a root-less tree.

Commentary:
Subramanyar is talking about one who spends his time in mere rituals without clear understanding about the pooja vidhi.  Siddha worship rituals are specific procedures that involve a deeksha, a yantra, a mantra, specific visualization, recitation of the mantra for a specific number of times and preconditioning such as nyasa and kavacha.  A particular pooja is performed for a specific benefit. Without any understanding about this people spend a lot of time on mere rituals such as bathing an image in various products, reciting a common mantra such as om or om namacivaya or aim kleem saum namacivaya or aim kleem saum (common three and eight letter mantras) for any number of times they wish.  Subramanyar says that these are useless rituals and he, the supreme consciousness, will not toss them as useless piece of wood.


பூசை விதிகளை முறையாக அறிந்துகொள்ளாமல் அவற்றை ஒரு சடங்காகச் செய்பவரை சுப்பிரமணியர் இப்பாடலில் கண்டிக்கிறார்.  சித்தர்கள் பரிந்துரைக்கும் பூசை என்பது நியாசம், கவசம் முதலிய முன் படிகளுடன், ஒரு குறிப்பிற யந்திரத்தைக் கீறி, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஒரு எண்ணிக்கையில் ஒரு காட்சிப்பாட்டுடன் செய்வது.  எந்த பலனை எதிர்பார்க்கிறோமோ அதற்கேற்ப இந்த மந்திரங்கள், யந்திரங்கள், காட்சிப்பாடுகள், ஜபம் ஆகியவை மாறுபடுகின்றன. அகத்தியர் இந்த பூசை விதிகளைத் தனது பல நூல்களில் பேசியுள்ளார்.  இவ்வாறு குறிப்பிட்ட முறையில் செய்யப்படாமல் தனது விருப்பத்துக்கேற்ப ஸ்நான ஜப தபங்களைச் செய்து, ஒரு சிலையைப் பல பொருட்களால் நீராட்டி, அலங்கரித்து, தனக்குப் பிடித்த ஓம் அல்லது ஐம் கிலீம் ஸௌம் என்னும் மூன்றெழுத்து மந்திரத்தையோ ஓம் நமசிவாய அல்லது ஐம் கிலீம் சௌம் நமசிவாய என்ற எட்டெழுத்து மந்திரத்தையோ பிற மந்திரங்களையோ மணியை உருட்டி ஜபம் செய்கின்றனர்.  இது பயனற்றது என்றும் அவ்வாறு செய்பவர்களைத் தான் வேற்ற மரத்தைப்போல வீசுவேன் என்கிறார் சுப்பிரமணியர்.

Thursday, 2 October 2014

39. seven screens

Verse 39
காட்டுகிறேன் தச தீட்சை அறியாப் பாவி
கழுதையவன் கரையேற மாட்டான் பாரு
நாட்டுகிறேன் அகத்தியமா முனியே கேளு
நன்மையுடன் உனக்காக சென்னேன் மைந்தா
பூட்டுகிறேன் திரை ஏழுங் கிழிந்துபோகப்
பூரணத்தின் யோகமதை அறிந்து நீயும்
சூட்டு மணி பூரஞ்சு வாதிட்டானும்
சொல்லாத விஞ்சையுடன் சுருதி பாரே

Translation:
The dasa deeksha I am showing, the ignorant sinner
The donkey, he will not be liberated, See!
Agatthiya muni, I am establishing this for your sake.
Son, I said this for your benefit,
I will tether, so that the seven screens will be torn away
Knowing the yoga of the fully complete,
The adorning manipuram and the svadhistanam
With the unuttered knowledge about the divine, see the sruthi.

Commentary:
The seven screens are veils that conceal the Divine nature of the soul.  Sri Ramalinga Adigal explains these screens as that of maya Shakti, kriya Shakti, paraa Shakti, iccha Shakti, gnana Shakti, aadhi Shakti and chith Shakti.  When the soul crosses these seven screens it reaches its original state, that of jyothi.  These screens are torn away through the siva yoga.  The Siddhas call the Divine as the kaaranam and the limited soul as the pooranam.  Its original state is pooranam.  The manipuraka cakra is the locus of the power of transformation.  Svadhishtanam is the locus of the potential samskaras.  Hence, Subramanyar is telling Agatthiyar that he should look at the svadhistana and manipuraka with clear knowledge about the Divine. 
ஏழு திரைகள் என்பவை ஆத்மாவை அதன் உண்மையான தன்மையை உணராமல் செய்யும் தடுப்புக்கள். திரு. ராமலிங்க அடிகள் அல்லது வள்ளலார் இந்த ஏழு திரைகள் எவை என்று கூறுகிறார்.  அவை மாயாசக்தி, கிரியா சக்தி, பரா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி மற்றும் சித் சக்தி என்பவை.  இந்த ஏழு திரைகளையும் கடந்த ஆத்மா தனது உண்மையான நிலையை ஜோதி சொரூபத்தை உணர்ந்துகொள்கிறது. 

சித்தர்கள் இறைவனை காரணன் என்றும் ஜீவனைப் பூரணன் என்றும் கூறுகின்றனர்.  ஆத்மாவின் உண்மை நிலை பரிபூரணனாக இருப்பது.  மேற்கூறிய திரைகள் அந்த உண்மைநிலையை மறைக்கின்றன.  யோகத்தின் மூலம் இந்த ஏழு திரைகளையும் கிழித்தெறியலாம்.  மணிபூரக சக்கரம் என்பது மாற்றம் ஏறப்டுத்தும் சக்தி படைத்தது.  சுவாதிஷ்டானம் என்பது நமது சம்ஸ்காரங்கள் செயல்படுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் இடம்.  இந்த இரு இடங்களையும் அகத்தியர் பரபிரம்மத்தைப் பற்றிய அறிவுடன் பார்க்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர். 

Wednesday, 1 October 2014

38. Dasa deeksha, paazh, supreme bliss that Subramanyar promises.

Verse 38
கோடான கோடி சித்தர் முனிவரெல்லாம்
குணமறிந்து தசதீட்சை தன்னால் மைந்தா
பாடான பாடுபட்டுப் பிழைத்தோர் கோடி
பாழிலே மாண்டவர்கள் கோடாகோடி
வீடான வீட்டையுந்தா னறிந்து நீயும்
மேலாறு தலத்தினுட விலாசங் கண்டு
வாடாத தீபமதை அறிந்து கொண்டு
வந்தவர்க்கே பேரின்பங் காட்டுவேனே

Translation:
Several million Siddhas and Munis
Knowing its nature, through ten initiations, Son
After undergoing a lot of trouble, millions were saved.
Those who died in the void are several millions
Knowing the singular house, you,
Seeing the location of the upper six loci
Knowing about the eternal flame
I will show supreme bliss to those who come with this knowledge. .

Commentary:
Subramanyar is talking about ten initiations or dasa deeksha.  This is a special process wherein through mantra, visualization and consumption of specific preparations the body is transformed from material body to that of the perfected body capable of performing ashtanga yoga.  Arunachala Guru’s Nijanandha bodham lists the following as the changes in the body in the stepwise ten initiations or dasa deeksha:
1.     Sweat emerges carrying with it the fluids that should be removed from the body.
2.     The triple faults of vata, pitta and kapha are removed
3.     Blood oozes out with its impurities.
4.     The skin will be renewed like the snake sloughing off its top skin.
5.     A layer of the body is removed and it will become red in hue.  The five deities will grant all the wish, that is, the five elements will come under control.
6.     Another layer of the body is removed, the entrance of the sushumna will open distant objects will become visible. 
7.     Another layer of body will be removed as a white layer and the body will glow like a flame. 
8.     The body will become weightless, enchantment will occur, the yogin will be able to perform transmigration from one body to another. 
9.     The body will have the supreme effulgence of millions of suns, the eight mystical accomplishments will be attained.  The yogin will reach the actionless state or kaivalyam.  Celestials will serve him.
10.  The body will have the effulgence like the flame, even a knife cannot cut it.  Svaroopa siddhi will be attained.  The yogin will live a life of silence, free from aging, disease and death.
From the above we can see that the body undergoes immense trouble or misery to reach the final stage.  Hence Subramanyar is saying that millions have suffered greatly and reached the final stage.  Paazh refers to supreme void.  Tamil Siddhas talk about muppaazh to triple voids- the maya paazh, bodha paazh and upasaantha paazh.  These are mental states that transform the limited consciousness into supreme consciousness.  Thus, the  above sections describe the transformation of the body and the mind that a yogin goes through before reaching the state of realization- the singular house or the supreme locus.  Through this process the yogi’s consciousness ascends from body consciousness to the unlimited state represented by the six cakra above the six in the body.  The final state of this journey is the state of the lamp, that of paraaparai.  Subramanyar, the supreme consciousness, says that he will show the supreme bliss to those souls you have reached him through this arduous process.

தமிழ் சித்தர்களின் இலக்கு அளவுக்குட்பட்ட இந்த உடல்சார்ந்த நிலையை விட்டு பரவுணர்வு நிலையை அடைவது.  அதற்கு அவர்கள் உடலையும் மனதையும் மாறச்செய்யும் பல பயிற்சிகளை ஏற்படுத்தியுள்ளனர்.  அவற்றில் ஒன்று தச தீட்சை என்பது.  பத்து படிகளைக் கொண்ட இந்த முறையில் பல கற்பங்களை உண்டும், மந்திரம், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமும் சித்தர்கள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.  அருணாசல குருவின் நிஜானந்த போதம் என்ற நூலில் இந்த தச தீட்சையைப் பற்றிய விவரங்களை அளித்துள்ளார். அவையாவன:
௧. உடலிலுள்ள கெட்ட நீர் அனைத்தும் வியர்வையாக வெளியேறும்
௨. முத்தோஷங்கலான வாதம், கபம், சிலோத்துமம் நீங்கும்.
௩. கெட்ட உதிரங்கள் கசியும்.
௪. சரீரத்தில் பாம்பு தோலை உரிப்பதைப் போல தோல் உரியும்.
௫. சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும்.  பஞ்ச மூர்த்திகள் வேண்டியதைத் தருவர், அதாவது, பஞ்ச பூதங்கள் வசத்துக்குள் வரும்.
௬. சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறக்கும், தொலைப்பார்வை கிட்டும்.
௭. சட்டை வெளுப்பாகக் கழன்று தேகம் தீபம் போல பிரகாசிக்கும்.
௮. சடலம் பாரமற்றதாகும், லாகிரி என்ற இன்ப நிலை ஏற்படும்.  கூடுவிட்டு கூடு பாயும் திறம் வாய்க்கும்,
௯. தேகம் சூரியப் பிரகாசம் பெரும் அஷ்டமா சித்தி கூடும். செயலற்ற நிலையான கைவல்யம் கிட்டும்.  தேவர்கள் சேவை புரிவர்.
௧௦. தேகம் தீபம் போல பிரகாசிக்கும் அதைக் கத்தியாலும் வெட்ட முடியாது.  இதுவே சொரூப சித்தி.  அந்த யோகி இவ்வுலகில் மௌன நாளையில் நரை திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வார்.

மேற்கூறிய நிலையை எட்டிய யோகி தனது விழிப்புணர்வை இன்னும் விரிவாக்கி முப்பாழ் எனப்படும் சூனியத்தில் மூழ்கி தனது தனிப்பட்ட நிலையை இழப்பார்.  முப்பாழ் என்பவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பவை.  இவை விழிப்புணர்வின் நிலைகளே.  இந்த நிலைகள் அனைத்தையும் கடந்த யோகி வீடு எனப்படும் பரவுணர்வு நிலையை அடைவார்.  தனது விழிப்புணர்வை உடலில் உள்ள ஆறு சக்கரங்களுக்கும் மேலே உள்ள ஆறு ஆதாரங்களிலும் பயணிக்கச் செய்துஉச்ச நிலையை அடைவார்.  இந்த நிலையை அடைந்தவருக்குத் தான், சுப்பிரமணியர், பரவுணர்வு, பேரானந்தத்தைக் காட்டுவேன் என்று இப்பாடலில் கூறுகிறார்.