Thursday, 25 September 2014

33. Vasi, mental focus and Vedanta Paraaparai

Verse 33
பாரப்பா வாங்கு சிங்கு என்றேவாகிப்
பராபரமாங் குலதெய்வந் தன்னைப் பார்த்து
தேரப்பா நிலையறிந்து பிதுங்கொட்டாமல்
நீ மகனே பூசை நிறை வேற்றிக்கொண்டு
ஏரப்பா பூரணத்தின் மனக்கண்ணாட்ட
இடைகலையும் பின்கலையீடழிந்து போகும்
வேறப்பா சுழிமுனையில் நினைவாய் நின்று
வேதாந்த பராபரையை வேண்டி நில்லே

Translation:
See son, as vang and sing
The kula deity Paraaparam,
See the status without spilling over
You, son, fulfilling the worship ritual
Climb, fixing the mental eye of the fully complete
The idakalaa and pingalaa will be destroyed
Remaining with focus at the sushumna
Remain seeking the Vedanta Paraparai.

Commentary:
Subramanyar is talking about the vaasi yogam in the first line. Vang and sing are the letters chanted while drawing the breath in and out respectively.  The deity eulogized here is Paraaparam.   The pooja that Subramanyar talks about is internal worship following which the mental eye of internal perception should be used to experience altered states of consciousness.  The vital breath and fire of kundalini will flow through the sushumna nadi.  The Vedanta Paraaparai is kundalini sakthi.  Subramanyar is advising Agatthiyar to remain seeking her.


சுப்பிரமணியர் இப்பாடலில் வாசி யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்.  வங் சிங் என்னும் பீஜ மந்திரங்கள் முறையே மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் உச்சரிக்கப்படுகின்றன.  இங்கு வழிப்படப்படும் குலதெய்வம் பராபரம், செய்யப்படும் பூசை அந்தர்யாகம்.  இந்த வழிபாட்டுக்குப் பிறகு மனக்கண்ணை, கவனத்தை உள்ளே நிறுத்தினால் இடகலையும் பிங்கலையும் செயல்படாமல் பிராணனும் குண்டலினி சக்தியும் சுழுமுனையில் பாயும்.  வேதாந்த பராபரை என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  அவளை வேண்டி நிற்குமாறு சுப்பிரமணியர் கூறுகிறார். 

Wednesday, 24 September 2014

32. Events at the peak of the experience

Verse 32
போமடா இரியென்றுங் கிரியென்றோதி
பொருத்தமுடன் பூரணத்தைக் கலந்து பாரு
ஆமாடா சகல சித்தும் அதிகமாகும்
அடங்காத பூதமைந்தும் ஒன்றாய்ச் சேரும்
வாமடா வாமமுந்தான் கசிந்து பாயும்
வடவரையில் துருவனுட சூட்சங் காட்டும்
காமடா காமப்பால் திரண்டு காணும்
காணாத காட்சியெல்லாங் காணும் பாரே

Translation:
It will go as hrim kreem
Merge with the fully complete and see it
Yes son, all the mystical accomplishments will increase
The uncontrollable five elements will merge into one
Vaamam will ooze and flow
The subtlety of Durva in the northern peak, it will show
Desire, the kaamappaal will accumulate and be seen
All the “difficult to see” sights will be seen, see!

Commentary:
Hreem and kreem are two Sakthi bheeja mantras.  This sadhana will grant all the mystical accomplishments in abundance.  This is the process of laya and so all the elements will merge with one another starting from muladhara cakra which represents the earth element.  Vaamam in this verse may be referring to sexual fluids.  This line may be referring to the concept of “madai maarral” or reversing the flow of the sexual fluids.  Vadavarai is the peak in the north.  This may be referring to the sahasrara.  The star, Druva, is the pole star or the north star which is important in navigation both in the worldly sense as well in the spiritual journey.  Seeing the star of Druva represents attaining a specific state in the spiritual progress.  Siddhas use the terms kaamappaal, kaanal paal, vaamappaal, somappaal to indicate various fluids that are released at specific stages of spiritual progress.  All the rare sights will become visible at this advanced state.


ஹ்ரீம் மற்றும் க்ரீம் என்பவை சக்தி பீஜ மந்திரங்கள். இந்த குண்டலினி யோகப் பயிற்சி எல்லா சித்திகளையும் அருளும் என்கிறார் சுப்பிரமணியர்.  சித்திகள் என்பவை ஆன்மீகப் பாதையில் மைல்கற்கள்.  முந்தைய பாடல்களில் விளக்கப்பட்டுள்ள பயிற்சிகள் லயம் அல்லது ஆதி நிலையை அடைவதைக் குறிக்கின்றன.  அதனால் சுப்பிரமணியர் எல்லா பூதங்களும் ஒன்றாகச் சேரும் என்று கூறுகிறார்.  “வாமம் கசிந்து பாயும்” என்பது சித்த யோகப் பயிற்சிகளில் ஒன்றான மடைமாற்றல் என்பதைக் குறிக்கலாம்.  இந்தப் பயிற்சியில் விந்து தனது கீழ்நோக்கிய பயணத்தை மாற்றி மேல் நோக்கி செலுத்தப்படுகிறது.  இது பல அரிய சித்திகளை யோகிக்கு அருளுகிறது.  வடவரை என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கலாம்.  வரை என்பது மலையுச்சியைக் குறிக்கும், தத்துவத்தின் உச்ச நிலையைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம்.  துருவ நட்சத்திரம் என்பது கடலில் செல்லும் மாலுமிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.  ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கும் அது அவர்களது பாதையைக் காட்டுகிறது.  சித்தர்கள் காமப்பால், கானல் பால், வாமப் பால், சோமப்பால் என்று உடலில் பல்வேறு நிலைகளில் சுரக்கும் திரவங்களைக் குறிப்பிடுகின்றனர்.  இந்த பயிற்சியை மேற்கொள்ளும் யோகிக்கு பல அரிய காட்சிகள் கண்ணில் தென்படுகின்றன.

Monday, 22 September 2014

31. Udayagiri, Mucchandhi, kaaranam and pooranam.

Verse 31
ஆச்சடா மூன்றெழுத்தினாலேமைந்தா
ஆறுவரை ஊடுருவி அடுக்கத் தோணும்
மூச்சடா மூச்சடங்கி மேலே நோக்கு
முச்சந்தி உதயகிரி உச்சி தோணும்
வாச்சடா வாயு சாரணையாம் வேகம்
வாரியுனை உயரவினித் தூக்கியோடும்
காச்சடா கருவிகளைத் தள்ளியோடுங்
காரணமும் பூரணமுங் கலந்து போமே.

Translation:
Son, with the three letters
The six peaks will be pierced and they will appear stacked
The breath, with the breath stopping look up
The point of meeting of the three, the Udayagiri peak will appear
The air, with increasing speed in a straight path
It will collect you and run, carrying to heights
It will go pushing away the senses
The Cause and the Fully complete will merge and go together.

Commentary:
Subramanayar is talking about the run of the vital breath and the kundalini sakthi.  Agatthiyar in his Saumya Sagaram says that in our body, the “madapathi” the Lord remains as the fire of kundalini and the limited soul remains as the vital breath.  During kundalini yogam the vital breath and the fire of kundalini ascend the sushumna nadi.  The soul is carried to the state of super consciousness by the fire of kundalini, the Divine force.  They pierce the six peaks, the cakras and reach the ajna cakra, “mucchandhi” where the three nadis meet. The siddhas equate the cakras or the energy vortices to peaks, giri.  Udayagiri is the peak where supreme consciousness emerges.  This may be the Sahasrara or the ajna.  During this process the breath stops- this is the kumbaka siddhi, the senses lose their significance as knowledge occurs without the help of the senses.  The kaaranam- the kundalini sakthi, and pooranam- vital breath, will travel together.

இப்பாடலில் சுப்பிரமணியர் பிராணன் மற்றும் குண்டலினி அக்னியின் ஓட்டத்தைக் கூறுகிறார்.  அகத்தியர் தனது சௌமிய சாகரம் என்னும் நூலில் மடபதியான இந்த உடலில் இறைவன் அக்னியாகவும் ஜீவன் வாயுவாகவும் உள்ளனர் என்கிறார்.  அக்னி என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கிறது, வாயு என்பது பிராணன் ஆகும். இந்த இரண்டு வஸ்துகளும் சேர்ந்து உயர்விழிப்புணர்வு நிலையை நோக்கிப் பயணிக்கின்றன.  அதைத்தான் கடைசி வரியில் காரணமும் பூரணமாம் கலந்து போகும் என்கிறார் சுப்பிரமணியர்.

சித்தர்கள் பொதுவாக சக்கரங்களை சக்தி மையங்களை வரைகள் அல்லது மலைச்சிகரங்கள் என்று அழைக்கின்றனர்.  பொதிகை, மகேந்திர கிரி, உதய கிரி என்பவை அத்தகைய சக்தி மையங்களே, விழிப்புணர்வு நிலைகளே.  மேற்பாடலில் கூறிய மூன்று எழுத்துக்களால், ந, ம, சி என்ற எழுத்துக்களால்ஆறு வரைகள், அல்லது சக்கரங்கள், துளைக்கப்பட்டு அவை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கியதைப்போல், அவற்றின் தன்மைகள் ஒன்று சேர்க்கப்பட்டதைப் போல தோன்றும் என்றும் இந்த நிலையில் மூச்சின் ஓட்டம் நின்றுவிடும்- கும்பக சித்தி ஏற்படும் என்றும் கருவிகளின் உதவியில்லாமல் அறிவு ஏற்படுவதால் அவை புறம்தள்ளப்படும் என்றும் முச்சந்தி எனப்படும் மூன்று நாடிகள் கூடும் இடமான ஆக்ஞை, உதய கிரி எனப்படும் பரவுணர்வு உதிக்கும் இடம் ஆகியவை புலப்படும் என்றும் சுப்பிரமணியர் இப்பாடலில் கூறுகிறார். 

Sunday, 21 September 2014

30. Dance of the Ambalavar, the three letters and Kailayam



Verse 30
பாரப்பா விண்ணமொரு மவுனங் கேளு
பராபரத்தி னடியினுட பாதம் போற்றி
ஆரப்பா நசிஎன்று மசிஎன்றோதி
அடங்காத தேவிதனை அர்ச்சித் தேற்றிக்
கூரப்பா குவிந்துமனமொன்றாய் நின்று
கூடுகையில்அம்பலவர் கூத்துந்தோணும்
சேரப்பா விம்மூன்று எழுத்தினாலே
சிவனுடைய கயிலை வரை தெரியலாச்சே

Translation:
See son, hear about another silence,
Praising the sacred feet of the Paraparam
Chanting na si and ma si
Worshipping the Devi who is uncontrollable and raising her
Remaining, Son, with the mind focused
While associating, the arena one’s dance will appear
Join, Son, with these three letters
Siva’s Kailaya started becoming visible

Commentary:
The term “mavunam” is generally interpreted as silence.  When Subramanyar says “innam oru
mavunangkelu” then one wonders what this term really means.  If we split this word as “ma+u+ang” it means laya or ma the manifested world becoming u the sakthi and ang the Siva. The order of manifestation is sakti, the u emerging from Siva the ang and manifesting as ma the world.  The reverse of this process is laya or merging with the origin. 

The three letters that Subramanyar mentions here are na, si and ma.  Si is the agni  bheejam.  It is the letter of the manipuraka cakra that represents the fire element.  Na is the letter of the muladhara where our karma and samskara are stored. The manifested world that each of us face depends on the set of karma and samskara that start operating in this birth.  Ma is the letter of the svadhishtana or sva+adhishtana- the locus of the self.  The svadhishtana cakra operates in conjunction with the muladhara cakra in a specific birth.  Thus, ma si may represent the burning

away of all the factors that inhibit the soul from leaving the manifested world and merging with the state of supreme consciousness.  The Devi who is uncontrollable is the kundalini sakthi.  When she emerges from her inactive state and ascends through the sushumna nadi is it like a raging fire.  This process is facilitated by mental focus. 

 “ambalavar” means the one of the arena.  The arena here is the citramabalam or the arena of consciousness.  Kailaya represents the state of supreme consciousness.  Subramanyar says that during this process this state starts to become perceivable.   

பொதுவாக மவுனம் என்னும் சொல் பேச்சற்ற நிலையைக் குறிக்கும்.  இன்னம் ஒரு மவுனங்கேளு என்று சுப்பிரமணியர் கூறும்போது இந்த சொல் எதைக் குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.  மவுனம் அல்லது மவுனங் என்னும் சொல்லை ம+உ+அங் என்று பிரித்தால் ம என்பது மாயையால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தையும் உ என்பது சக்தியையும் அங் என்பது அனைத்துக்கும் காரணமான சிவத்தையும் குறிக்கும்.  இவ்வாறு மவுனங் என்பது வெளிப்பட்ட உலகம் மீண்டும் தனது ஆதி நிலையை சிவநிலையை அடைவதைக் குறிக்கிறது. இதுதான் லயம்.  சுப்பிரமணியர் இங்கே லயத்தைப் பற்றித்தான் பேசுகிறார்.


இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று எழுத்துக்கள் ந, சி மற்றும் ம என்பவை.  ந அல்லது நங் என்பது மூலாதாரத்தின் எழுத்து.  ம என்பது ச்வதிஷ்டானத்தின் எழுத்து, சி என்பது மனிபூரகத்தின் எழுத்து.  மூலாதாரம் பூமி தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானம் நீர் தத்துவத்தையும் மணிபூரகம் நெருப்புத் தத்துவத்தையும் குறிக்கின்றன. மூலாதாரத்தில்தான் நமது கர்மங்களும் சம்ஸ்காரங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.  சுவாதிஷ்டானம் என்பது ஸ்வ+ அதிஷ்டானம் என்று பிரியும்போது தனது இருப்பிடம், ஆத்மாவின் பதம் என்று பொருள்படும்.  இதனால் நசி என்பது மூலாதாரத்தில் உள்ள கர்மங்களின் எரிப்பையும் மசி என்பது ஆத்மாவை தனது உயர்நிலையை அடைவதைத் தடுப்பவற்றின் எரிப்பையும் குறிக்கின்றன.  இவ்வாறு இந்த மூன்று எழுத்துக்களையும் உச்சரித்து மனக்குவிப்புடன் நோக்கினால் கட்டுப்படுத்துவதற்கு அறியவளான குண்டலினி சக்தி மேலே ஏறுகிறாள்.  அப்போது அம்பலவரின் ஆட்டம் புலப்படும் என்கிறார் சுப்பிரமணியர்.   அம்பலவர் என்பது பரவுணர்வு நிலையைக் குறிக்கும்.  இந்த விழிப்புணர்வு நிலையின் ஆட்டமே, அசைவே, உலகமாக விரிகிறது.  இது நடைபெறும் இடம் கைலாயம்.  கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் கடந்த நிலையைக் குறிக்கும்.  இந்த நிலை இந்த சாதனையின்போது மெதுவாகப் புலப்படஆரம்பிக்கும் என்கிறார் சுப்பிரமணியர். 

Saturday, 20 September 2014

29. It is the sound of the earth, it pervades the sakthi deeksha

Verse 29
காணுவது பராசத்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்தது அதினுடைய கனல்தான் மைந்தா
பூணுவது இதையன்றிப் புலன்வேறில்லை
பூமியுட நாதமென்றும் இதற்குப் பேரு
வாணுலகில் திரியாதேமயங்கிடாதே
வாய்பேசாப் பூரணத்தை வணங்கிப் போற்றி
தோணுவதல்லாம் உனக்குத் தோணும் பாரு
துரியாதீதம் தனைத் தொடந்து பாரு

Translation:
In all the initiations for Parasakthi
Its fire merged within them
This is that which is adorned, the senses are not something else
This is also called the sound of the earth
Do not roam around in this world do not get deluded
Praising the fully complete that does not speak/ that cannot be spoken about
All that, that should occur, will occur for you
Continue seeing the turiyatheetham.

Commentary:
Subramanyar tells Agatthiyar that all the sakthi deeksha are pervaded by the fire of kundalini, the Lord’s supreme energy.  Agatthiyar in his paripurna sutra 216 talks about different Sakti deeksha and Siva deeksha. This is the substratum for the nada or sound.  Subramanyar says that this constitutes the nada of the earth.  Earth here means both the physical world that we see as well as the muladhara the site that represents the earth principle.  Subramanayar tells Agatthiyar to not get deluded if someone says something different about this concept.  He tells Agatthiyar to praise the “vaai pesaa pooranam”.  This may mean the fully complete state which is supreme silence or the state that is beyond verbal expression.  If Agatthiyar does so, “all that which should occur will occur for him”.  This may mean all the thoughts, all the sites and all the revelations.   To have this happen Agatthiyar should watch the state of turiyatheetha or the state of consciousness beyond the turiya. 
The soul remains in the muladhara when it is in the state of turiyatheetha.  The fire of kundalini is also in the muladhara.  It is this fire that forms the basis of everything in this world.  This is the site of the nada and bindu that expand as the manifested world.  This is the revelation that Subramanyar is conferring upon Agatthiyar.


இப்பாடலில் சுப்பிரமணியர் எல்லா சக்தி தீட்சைகளுக்குள்ளும் இருப்பது இந்த குண்டலினி அக்னிதான் என்கிறார். அகத்தியர் தனது பரிபூரண சூத்திரம் 216ல் பல நிலைகளான சிவ தீட்சை சக்தி தீட்சைகளை விளக்குகிறார்.  இந்த அக்னியே பூமியின் நாதமாக இருப்பது என்கிறார் சுப்பிரமணியர்.  இங்கு பூமி என்பது உலகத்தையும் நமது உடலில் மூலாதார சக்கரத்தையும் குறிக்கும்.  மூலாதார சக்கரம் பூமித் தத்துவத்தைக் குறிக்கும்.  இங்கிருந்துதான் நாதமும் பிந்துவும் உலகமாக, நமது உடலின் பல்வேறு தத்துவங்களாக, நமது புலன்கள் உட்பட, விரிகின்றன.  இந்த உண்மையை அறியாமல் உலகில் மயங்கித் திரியவேண்டாம் என்று சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார்.  இந்த தத்துவத்தை அறிந்து “வாய்பேசா பூரணத்தை” வணங்குமாறு அவர் கூறுகிறார்.  வாய் பேசா பூரணம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத பூரணத்தை அல்லது மோனநிலையில் இருக்கும் பூரணமான இறைவனைக் குறிக்கும். அப்போது அகத்தியருக்கு தோணுவதெல்லாம் தோன்றும் என்கிறார் சுப்பிரமணியர்.  இது மனதில், புத்தியில், பார்வையில் தோணவேண்டியவை அனைத்தும் தோணும் என்று பொருள்படும்.  இதற்கு அகத்தியர் தொடர்ந்து துரியாதீத்த நிலையைப் பார்க்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  துரியாதீதம் என்பது துரியத்தையும் கடந்த நிலை.  மூலாதாரத்தில் நிலைத்து நின்று இந்த நிலையை ஆத்மா அனுபவிக்கின்றது.    

Friday, 19 September 2014

28. Supreme state is even beyond nirvikalpa

Verse 28
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே

Translation:
See Son, in by focusing as “this is the sign”
This is the origin, Parasakthi (origin of Parasakthi)
Who will reveal this origin, son?
Agatthiya Mamuni!  I am telling for your sake
You remain with this in your mind
Swim in the nirvikalpa Samadhi and climb up
Without engaging in empty talk be valorous
Seek the supreme space and see the wonder.

Commentary:
Subramanyar tells Agatthiyar that he is imparting all these esoteric information only for Agatthiyar’s sake and that generally no one will reveal it.  Hence, let us all pray to Agatthiyar and to Subramanyar before we go further in this verse. 

Subramanyar is talking about the state that he told Agatthiyar to merge within.  This is the origin of everything, even Parasakthi. 
Agatthiyar describes the cosmic emanation in his Saumya Sagaram as follows:  Initially there was only Param.  When it decided to manifest Sivam occurred and then Sakti.  So, the state that Subramanyar is talking about is the state even before the Sivam and Sakthi states.  All the books on yoga say that Nirvikalpa Samadhi is the pinnacle of yoga.  Here Subramanayar tells Agatthiyar to go even beyond this state of nirvikalpa where the knower, the process of knowing and the object of knowledge become one.  He says that this should be performed with the mind as the mind is the agent of cognition.  This step needs valor, it is not for people who only blabber.  This is the state of supreme space, the super conscious state.

அனைத்துக்கும் மூலமான நிலையைப் பற்றி அகத்தியருக்காகவே கூறுகிறோம், பிறர் அதை விளக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்.  அதனால் நாம் அனைவரும் அகத்தியருக்கும் சுப்பிரமணியருக்கும் நமது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு மேலே தொடருவோமாக.
சுப்பிரமணியர் தான் அகத்தியரை கூடச் சொன்ன நிலையைப் பற்றி இங்கே மேலும் விளக்குகிறார்.  இந்த நிலை அனைத்துக்கும், பராசக்தி உட்பட, மூலமாகும்.

அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் உலக வெளிப்பாடு எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்.  அனைத்துக்கும் மூலமாக இருந்தது பரம்.  அது உலகமாக வெளிப்பட விழைந்தபோது சிவம் தோன்றியது.  சிவத்தை அடுத்து சக்தியும், சதாசிவமும், மகேஸ்வரனும், ருத்திரனும், விஷ்ணுவும் பிரம்மாவும் ஒருவர் பின் ஒருவராகத் தோன்றினர்.  யோகத்தின் உச்ச நிலை நிர்விகல்ப சமாதி என்று யோக நூல்கள் கூறுகின்றன.  நிர்விகல்ப சமாதி என்பது காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலை.  சுப்பிரமணியர் உச்ச நிலை என்பது இதையும் கடந்தது என்று இங்கே கூறுகிறார்.  இந்த செயல் மனதினால் செய்யப்படுவது என்றும் அவர் கூறுகிறார்.  மனமே அறிவுபெற உதவும் கருவி.  இந்த செயலுக்கு வெறும் பேச்சு உதவாது வீரமான சாதனையே உதவும்.  இந்த உச்ச நிலை வெட்ட வெளி என்றும் சுப்பிரமணியர் கூறுகிறார்.   

Thursday, 18 September 2014

27. Dance at Tillai, Anuraagam, green peacock

Verse 27
கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே

Translation:
Merging is not easy; it is not mere talk,
One in a million will see the sign
Dancing with foot up as in Tillai
In the arena of the world, seeing the dance
Seeking, at all times with interest,
Where is the god of death, where is the god of death, it will be destroyed
Hearing the music eternally
I rushed riding on the green peacock.

Commentary:
Subramanyar says that attaining the state of supreme consciousness is not easy.  It cannot be achieved through discussion; it is procedure that should be put to practice. He then refers to Siva’s dance at Tillai and says that his occurs at the arena of the world.  Traditionally Tillai refers to Chitambaram.  However, it also refers to the space of consciousness, chith ambaram, the state attained at the pinnacle of realization.  The Lord’s cosmic dance is the cause of his five functions: creation, sustenance, dissolution, obfuscation and bestowing grace. 
Tirumular has dedicated an entire section on Siva’s dance in his ninth tandiram (section 8).  He describes five types of dances, Sivananda kootthu, sundara kootthu, pon padhi kootthu, pon thillai kootthu and arpudha koothu.  Among these the dance at Tillai signifies destruction of aanava mala of the living beings.  Siva’s dance is witnessed at the pinnacle of kundalini yoga.  The term ‘anuraagam’ means desire, love.  May be this is what Tirumular referred to as ‘anbe Sivam”!
Subramanyar says that by riding on the green peacock he is rushing to reaching this state. Siddhas ascribe the color green to Kundalini Sakti. Peacock refers to Vasi (as we saw before).  Thus, green peacock refers to the vaasi and the fire of kundalini gushing through the sushumna nadi.

இறைவனுடன் கூடுவது என்பது எளிதான செயலல்ல, அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல.  சாதனையின் மூலம் வருவது. இந்தக் கருத்துடன் இப்பாடலைத் தொடங்கும் சுப்பிரமணியர் இறைவனின் தில்லை நடனத்தை அடுத்து கூறுகிறார்.  இறைவனின் நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களைக் குறிக்கிறது.  திருமூலர் தனது திருமந்திரத்தில் இறைவனின் நடனத்தை ஒரு பகுதி முழுவதும் விளக்கியுள்ளார் (தந்திரம் 9, பகுதி 8).  அதில் அவர் ஐவகை நடனங்களைக் குறிக்கிறார்.  அவை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்பவை.  இவற்றில் தில்லைக் கூத்து என்பது இறைவனின் ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதைக் குறிக்கிறது.  இந்தக் கூத்தை ஒருவர் குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்கிறார்.  அனுராகம் என்பது அன்பு என்று பொருள்படும்.  இந்த உச்ச நிலை அன்புநிலை.  இதைத்தான் திருமூலர் அன்பேசிவம் என்றார் போலும்.  இந்த நிலையைத் தான் பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம், அடையப் பாய்கிறேன் என்கிறார் சுப்பிரமணியர்.  வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.  குண்டலினி யோகத்தின்போது மூச்சும் குண்டலினி அக்னியும் சுழுமுனையில் பயணிக்கின்றன.