Friday 22 August 2014

1. Kappu

Subramanyar Jnanam 500
காப்பு
பூரணமாய் நிறைந்த பராபரத்தின் பாதம்
போற்றியே சுழிமுனையில் புகுந்துக் கொண்டு
காரணமாந் தேவியுட வமுதங்கொண்டு
கங்குல் ரவி தனையறுத்துக் கருணை பெற்று
காரணமாந் தீட்சை பத்து வகைகள் கண்டு
மருவியே முப்பாழுங் கடந்தே யேறி
வாரணமா மூலத்திற் கணேசன் றன்னை
வணங்கியே இந்நூலை வழுத்துவோமே  (1)

Translation:

Kappu
Praising the sacred feet of the fully complete Paraparam
Entering within the terminus of the whorl
Consuming the nectar of Devi who is the cause
Like the sun clearing the darkness, receiving the grace
Experiencing the ten types of initiation
Crossing the triple paazh and climbing up
Ganesa, the elephant in the origin (muladhara),
Worshipping him we will compose this book.

Commentary:
This ancient composition, Subramanyar jnanam which is Muruga peruman’s upadesa to Agatthiya munivar is a Taamarai Noolagam publication from Chennai.  It contains the original 500 verses along with elaborate information on Murgan, various theories pertaining to him and the philosophies propounded by the Kailaya parampara of which he is the originator.   The explanations are provided by Meivazhi Kulandhaisami Gaoundar of Erode.  He quotes verses of Agatthiyar and other Siddhars to support his theories and says that some of these concepts are not for the public as the initiates into this tradition are sworn to secrecy.  We sincerely seek Murugapperuman’s blessings and Agatthiyar Peruman’s blessings so that we may enjoy the verses in this book and the details about Murugan as far as our limited knowledge permits us.

The first verse in this composition is the kaapu or the invocation verse.  It is a prayer to Lord Ganesa.  As it is a common practice among the siddhas to not eulogize a particular deity or a sacred place Subramanyar has mentioned specifically that this verse is a praise of Ganesha in the Muladhara.  As we have been in Agatthiyar jnanam the gods whom Siddhas mention are only place values for a particular step in Siva Yoga. 

Paraparam is the formless form of the Divine the other two being param and aparam.  The flame of consciousness represents the Paraparam as it has a form and yet one cannot define it as “this”.  The Devi mentioned here is Kundalini Sakthi who usually resides in the Muladhara.  The amudham is the divine nectar that descends from the sahasrara. We will see details about dasa deeksha and muppaazh in the coming verses.

சுப்பிரமணியர் ஞானம் என்னும் இப்பாடல் முருகப் பெருமான் அகத்தியருக்கு அளித்த உபதேசத்தொகுப்பு ஆகும்.  தாமரை நூலகம் பதிப்பித்துள்ள இந்நூல் ஐநூறு பாடல்களைக் கொண்டது. முருகனின் வரலாறு, அவர் ஒரு தெய்வமா மானிடரா, அவர் எங்கே வாழ்ந்தார், அவர் பிறந்த நேரம் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களை மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் என்பவர் முன்னுரையாக அளித்துள்ளார்.  பல சித்தர் பாடல்களை மேற்கொள் காட்டி அவர் வரைந்திருக்கும் இந்தக் கட்டுரை பல அறிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.  அந்த நூலில் உள்ள பாடல்களின் பொருளையும் முருகனைப் பற்றிய விவரங்களையும் நம் சிற்றறிவுக்கு எட்டியவரை நாம் அனுவிக்க அருளுமாறு முருகப்பெருமானையும் அகத்தியர் பெருமானையும் வேண்டிக்கொண்டு இந்த முயற்சியைத் தொடங்குகிறோம்

இத்தொகுப்பின் முதல் பாடல், காப்புச் செய்யுள்ளாக, கணபதியைப் போற்றுவதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் தனது நூலுக்கு எவ்வித தடங்கலும் வராமலிருக்க கணபதியை வேண்டிக்கொள்வது சுவையாக இருக்கிறது.  முருகப் பெருமானை ஆதி சித்தராக இங்கே கருதும்போது சித்தர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கடவுளைத் தொழுவதில்லை, கணபதி வழிபாடு என்பது மூலாதாரத்தில் உள்ள சக்தியின் வழிபாடு என்ற கருத்துடன் இச்செயல் பொருந்துகிறது.  


இறைவன், உருவம், அருவம், உருவ அருவம் என்ற மூன்று நிலைகளில் நமக்குக் காட்சியளிக்கிறார்.  இவற்றில் ஜோதி வடிவம் என்பது உருவ அருவ நிலையைக் குறிக்கிறது.  பராபரம் என்று இறைவனை அழைப்பது, பரம், அபரம் அல்லது உருவம் அருவம் என்ற இரண்டையும் கொண்ட உருவ அருவ நிலையைக் குறிக்கிறது.  தேவி என்று குறிப்பிடப்படுவது குண்டலினி சக்தியையே ஆகும்.  அமுதம் என்பது சகஸ்ராரத்திளிருந்து கீழே ஊறும் அமுதத்தைக் குறிக்கிறது.  தச தீட்சை, முப்பாழ் என்பவற்றை இனி வரும் பாடல் விவரங்களில் காண்போம். 

8 comments:

  1. நண்பேரே கடவுள் மனிதனுக்கு அறிவுைரையாகப் பாடிய முதல் நூலும் ஒேரே நூலும் கீைதை என்பாா்கள் நமது நூல் காலத்தால் அதற்கும் முந்ைதையதா என்று அறிய விரும்புகிேறேன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. திருமந்திரத்தில்: மொழிப்பொதுமை பேணிய திருமூலர் இம்மொழிகளில் சிறப்பாக வியந்து கூறப்பெறும் தமிழ் வடமொழி ஆகிய இருபெரும் மொழிகளையும் உமையம்மைக்கு ஈசனே புகட்டியதாகத் திருமூலர் சுட்டியுள்ளார்.
      `ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
      காரிகை யார்க்குக் கருணைசெய் தானே' (65)
      `தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
      உணர்த்தும் அவனை உணரலும் ஆமே' (66)
      we should accept both, but personally I feel நமது நூல் காலத்தால் அதற்கும் முந்தையது

      Delete
    2. தாங்கள் இப்பதிவை இட்ட சமயத்தின் முக்கியத்துவத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. நேற்று அகத்தியர் மெய்ஞ்ஞானத்தைப் படித்திருந்தீர்கள் என்றால் அகத்தியரும் எவ்வாறு தான் வடமொழியிலும் தென்மொழியிலும் சாம்பவிக்கு சாட்சியை வைத்துள்ளேன் என்று கூறியதைப் பார்த்தோம். அகத்தியர் சௌமிய சாகரத்தில் சிவன் தன்னிடம் வடமொழி நூலைக் கொடுத்து அதைத் தமிழில் செய்யச் சொன்றார் என்கிறார்.

      Delete
    3. sorry not able to understand the question or statement, can you please re-post this in English again.

      Delete
    4. These exchanges were about the date of this book, whether it was composed before or after Bhagavad Gita. The general theory was that the Siddhas composed only in Tamil and they were familiar with Tamil only. The above discussion pointed out that they were experts in both Tamil and Sanskrit, Agatthiyar has mentioned that he has composed in both Tamil and Sanskrit.

      Delete
  2. கீதை இறைவனால் அர்ச்சுனனுக்கு மகா பாரதப் போரின்போது கூறப்பட்டது. அதற்கு முன்னும் நூல்கள் இருந்தன பின்னும் நூல்கள் இயற்றப்பட்டன. ஒரு காலத்துக்குத் தகுந்த நூலை இறைவனின் தூதர்கள் இறைவனின் ஆணையால் அக்காலத்தில் இயற்றுகின்றனர். இந்த நூலை இயற்றிய முருகப்பெருமானின் காலத்தை ஒருவராலும் கணிக்க முடியாது. உலகின் மிகப்பழமையானதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் குமாரனை வணங்குகின்ற பிதா என்ற தொடர் வருகிறது என்று இந்த நூலின் விளக்க ஆசிரியர் கூறுகிறார். சாந்தோக்கிய உபநிடதத்தில் சனத் குமாரரே முருகன் என்று ஏழாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனால் முருகப் பெருமானின் காலம் மிகப் பழமையானது என்று தெரிகிறது. மொழி வல்லுனர்கள் இந்த நூலை ஆராய்ந்து இதன் காலத்தைக் கணிக்கலாம்.

    ReplyDelete
  3. முருகன் தலமைச் சித்தர் ஆவார்.

    ReplyDelete